Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/26/2011

ப்ச்சு.. இப்படியும் மனிதர்களா?



ழுக்கான உடைகள்,
வற்றிய கன்னங்கள்,
தூக்கங்களை
தொலைத்த கண்கள்...


சுவாசிக்கும்
எலும்புக்கூடுகலாய்
நடக்கும்
நடைபாதை மக்கள்...

யிரும்
உள் சுருங்கும்
இந்த ஏழைகளுக்கு
போர்த்திக்கொள்ள
இமைகளைத் தவிர
வேறு என்ன இருக்கிறது?

ருந்தும்
அந்தக் குளிர்
அவர்களை
சாகடிப்பதில்லை
என்ன காரணம் ?

சிச் சிக்கி முக்கியில்
பற்றிக் கொண்ட
பட்டினி நெருப்புதான்
காரணமோ...?


31 comments:

  1. //பட்டினி நெருப்புதான்//

    இதுதானே. அருமை சகோ

    ReplyDelete
  2. அன்னை இட்ட தீ அடி வயிற்றினிலேனு சும்மாவா சொன்னாங்க சகோ. எல்லாத்துலயும் ஓட்டு போட்டாச்சு சகோ

    ReplyDelete
  3. //பசிச் சிக்கி முக்கியில்
    பற்றிக் கொண்ட
    பட்டினி நெருப்புதான்
    காரணமோ...?//

    கலக்கல் வரிகள்.

    ReplyDelete
  4. பட்டினியின் கொடுமை அனுபவித்தவர்களுக்குத்தானே தெரியும்.
    பரிதாபம்.

    ReplyDelete
  5. தமிழ் மணம் ஐந்து

    மீண்டும் ஓர் மணம் கனக்க வைக்கும் கவிதை .

    ReplyDelete
  6. சூப்பரா அசத்திட்டீங்க வாத்தி......!!!
    கலக்கல் வரிகள்.....!!!

    ReplyDelete
  7. தமிழ்மணம் உமக்கும் அவுட்டா...?

    ReplyDelete
  8. அந்த நிலமையை நினைத்து பார்க்கவே கஷ்டமா இருக்கு. இன்றி சோமாலியா, நாளை நம் நாடா கூட இருக்கலாம். நண்பர்களே முடிந்த அளவு உணவை வீணாக்காதீர்கள்.

    ReplyDelete
  9. உயிரும்
    உள் சுருங்கும் /

    இமைகளைத் தவிர
    வேறு என்ன இருக்கிறது?/


    ஆகா அருமையான கவிதை..
    படத்தை பார்க்கவே தலையெல்லாம் ஏதோ செய்யுது..
    நல்ல நல்ல கற்பனைகள் அடுக்கடுக்காய் கவிதைகளை தருகிறது..
    பாராட்டுக்கள் சகோ//

    ReplyDelete
  10. உயிரும்
    உள் சுருங்கும் /

    இமைகளைத் தவிர
    வேறு என்ன இருக்கிறது?/


    ஆகா அருமையான கவிதை..
    படத்தை பார்க்கவே தலையெல்லாம் ஏதோ செய்யுது..
    நல்ல நல்ல கற்பனைகள் அடுக்கடுக்காய் கவிதைகளை தருகிறது..
    பாராட்டுக்கள் சகோ//

    ReplyDelete
  11. பசிப்பிணியின் கொடுமையை விவரிக்கும்
    அழகிய கவிதை.

    ReplyDelete
  12. இப்படியும் மனிதர்களா..?????????

    ReplyDelete
  13. இந்த ஏழைகளுக்கு
    போர்த்திக்கொள்ள
    இமைகளைத் தவிர
    வேறு என்ன இருக்கிறது??????????????

    ஏழை வீட்டில்
    எல்லாம் எரிகிறது

    அடுப்பைத் தவிர என்ற கவிதை நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  14. ஆழமாகவும்
    அழுத்தமாகவும்
    தெளிவாகவும்
    புரியும்படியாகவும்

    சொல்லியிருக்கீங்க நண்பா.

    ReplyDelete
  15. அசத்தல் கவிதை கரும் சார்..

    சிக்ஸர்..

    ReplyDelete
  16. வருடையின் உச்சத்தை கவிதை சொல்கிறது...

    ReplyDelete
  17. தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில்.......

    ReplyDelete
  18. எத்தனை உலகினை அழிப்பது பாரதியே?

    ReplyDelete
  19. @இருந்தும்
    அந்தக் குளிர்
    அவர்களை
    சாகடிப்பதில்லை
    என்ன காரணம் ?

    பசிச் சிக்கி முக்கியில்
    பற்றிக் கொண்ட
    பட்டினி நெருப்புதான்
    காரணமோ...?//

    மனதை நெருடவைக்கின்ற வரிகள் தல...

    ReplyDelete
  20. இந்தப் படங்களை பார்க்கையில்
    நாம் மூன்றுவேளை மூச்சுமுட்ட
    உண்பது கூட ஒரு பாவச் செயல்தானோ என
    பதறச் செய்கிறது
    தரமான பதிவைத் தந்தமைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. தங்கள் வலைப்பூ "தேன்கூடு" திரட்டியில் இணைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

    தங்கள் புதிய பதிவுகள் உடனுக்குடன் "தேன்கூடு" திரட்டியின் முகப்பில் தெரிய இங்கே சொடுக்கவும்

    ReplyDelete
  22. //பசிச் சிக்கி முக்கியில்
    பற்றிக் கொண்ட
    பட்டினி நெருப்புதான்
    காரணமோ...?//
    அருமை கருன்.

    ReplyDelete
  23. நல்ல கவிதை சார்.

    ReplyDelete
  24. அசத்தல் கவிதை ...

    ReplyDelete
  25. இந்தப் புகைப்படத்தைப் பார்க்கையில்
    நாம் மூன்று நேரம் உண்ணுதல் கூட
    பாவச் செயலோ எனத் தோன்றுகிறது
    தரமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. நெஞசைத் தொட்ட வரிகள்;
    நெஞ்சைச் சுட்ட வரிகள்

    ReplyDelete
  27. அன்பின் கருண் - நல்ல கவிதை - ஆதங்கம் புரிகிறது - என்ன செய்வதென்று தான் தெரியவில்லை. படத்தையும் கவிதையையும் பார்க்கும் போது மனம் வலிக்கிறது. ம்ம்ம்ம்ம் - நட்புடன் சீனா

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"