Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/22/2011

ஒரு பெண்ணின் அவலம்..





ரிசு நிலம் ஒன்று 
இங்கு தவிக்கிறது...!


ண்ணகியைக் கூட 
தெய்வமாக வணங்கும் 
தமிழ் நாட்டின்
அழகு தமிழ் பேசும் நான்,
மலடி...!



வ்வளவோ உள்வாங்கி
எதனையும் கொடுக்காத
கஞ்சனின் பணப் பெட்டி 
நான்...!


ன்னும் மக்களாட்சி 
மலராத மலட்டு தேசம்
நான்...!


ன் தேதிகளில்
அமாவாசை 
அடிக்கடி வந்தது 
சிவராத்திரியோ
தினமும் வந்தது...!


னால் ஒரு 
பிள்ளையார் சதுர்த்தி 
மட்டும் இன்னும் 
பிறக்கவே இல்லை...!


ங்கள் ஊர் 
முழுதும்
பரிதாபமாய் பார்க்கும்,
என்
இறுதி விருப்பம் 
இதுதான்...!


றந்த பிறகு
என்னை 
எரித்துவிடாதீர்கள் 
புதைத்துவிடுங்கள்
அப்போதாவது 
இவ்வயிற்றில்
புழு, பூச்சி வராதா?


42 comments:

  1. நெஞ்சை அள்ளும் கவிதை-மன
    நிறைவைக் கொடுக்கும் கவிதை
    நெஞ்சம் நோகும் கவிதை-மலடி
    நிலையை விளக்கும் கவிதை
    நெஞ்சம் மறவா கவிதை-என்றும்
    நிலையாம் இறவா கவிதை
    நெஞ்சில் தோன்றிய கவிதை-அந்த
    நினைவில் விளந்த கவிதை

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  2. நல்ல கற்பனை

    //இன்னும் மக்களாட்சி
    மலராத மலட்டு தேசம்
    நான்...!

    ரொம்ப நல்லா இருக்கு..

    ReplyDelete
  3. //எவ்வளவோ உள்வாங்கி
    எதனையும் கொடுக்காத
    கஞ்சனின் பணப் பெட்டி
    நான்...!//

    தத்ரூபமான வரிகள் நண்பா...அருமை...

    ReplyDelete
  4. கண்ணீரால் எழுதப்பட்ட கவிதை
    வாசிக்கும்போது சுடுகின்றது
    சுவாசிக்கும்போது கரிக்கின்றது

    ReplyDelete
  5. இறந்த பிறகு
    என்னை
    எரித்துவிடாதீர்கள்
    புதைத்துவிடுங்கள்
    அப்போதாவது
    இவ்வயிற்றில்
    புழு, பூச்சி வராதா?


    நல்ல கவிதை..............
    அப்பிடியும் ஒரு ஏக்கமா?

    வாழ்த்துக்கள்சகோ.

    ReplyDelete
  6. ஒரு பெண்ணின் உளைச்சல் தவிப்பு கவிதையாக.சிறப்பாக.

    ReplyDelete
  7. கொன்னுட்ட போ!

    ReplyDelete
  8. தாய்மைக்கு ஏங்கும் ஒரு அபலையில் கண்ணீர்...

    கவிதைகளில் பட்டுத் தெறிக்கிறது...

    ReplyDelete
  9. இறந்த பிறகு
    என்னை
    எரித்துவிடாதீர்கள்
    புதைத்துவிடுங்கள்
    அப்போதாவது
    இவ்வயிற்றில்
    புழு, பூச்சி வராதா?//
    நிதர்சன ஏக்கம்..
    நல்ல கற்பனை.

    ReplyDelete
  10. //இறந்த பிறகு
    என்னை
    எரித்துவிடாதீர்கள்
    புதைத்துவிடுங்கள்
    அப்போதாவது
    இவ்வயிற்றில்
    புழு, பூச்சி வராதா?//

    கருண்,

    கவிதையில ரொம்ப கனமான ’கரு’ சுமக்க வெச்சிட்டிங்க.

    ReplyDelete
  11. மனதைத் தொட்ட கவிதை.... இது போன்ற பெண்கள் படும் பாடு... அப்பப்பா...

    ReplyDelete
  12. //எவ்வளவோ உள்வாங்கி
    எதனையும் கொடுக்காத
    கஞ்சனின் பணப் பெட்டி
    நான்...!//

    அருமையான வரிகள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. இறந்த பிறகு
    என்னை
    எரித்துவிடாதீர்கள்
    புதைத்துவிடுங்கள்
    அப்போதாவது
    இவ்வயிற்றில்
    புழு, பூச்சி வராதா?//

    கனத்த வரிகள்.

    ReplyDelete
  14. extradinary ..super...
    mindblowing ...great ...
    thank u ...

    ReplyDelete
  15. கல்லடி சொல்லடி படும்
    வருவங்களில் பூத்த பின்னும்
    குலை தள்ளாத மரம்

    உங்கள் கவிதை அருமை தோழரே
    இறுதி வரிகள் அருமை

    ReplyDelete
  16. "இறந்த பிறகு
    என்னை
    எரித்துவிடாதீர்கள்
    புதைத்துவிடுங்கள்
    அப்போதாவது
    இவ்வயிற்றில்
    புழு, பூச்சி வராதா?"

    உயிரோட்டமான வரிகள். உள்மன வலியை படிப்பவர்களின் உள்ளங்களும் உள்வாங்கும்.

    குழந்தையின்மைக்கு பெண் மட்டும் தான் பொருப்பா? மகப்பேறு இல்லையெனில் மங்கையாய் பிறந்ததெற்க்கே அர்த்தம் இல்லை எனும் மாயையை உடைக்க வேண்டும். ”தன் வயிற்றில் பிறந்தால் தான் பிள்ளை” எனும் எனும் தவறான சிந்தனையை மனதிலிருந்து அகற்றினாலே “மட்டற்ற மகிழ்சியோடு” வாழலாம் இவ்வையகத்தில். ஊர் என்ன...வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தலும் ஏசும். நம் மனதினை நாம் ஆளுமை செய்திடின் நம்மை விட மகிழ்ச்சியானவர் இவ்வுலகினில் எவரும் இல்லை என்பதை உணர்வர்.

    ReplyDelete
  17. பூவாமல் காய்க்காமல்கிடக்கும் மரம் போல
    ஒரு உயிரைப் பிறப்பிக்காதமனத்தின் புலம்பலை
    வெகுச் சிறப்பாகச் சொல்லிச் செல்லும் கவிதை
    அருமையிலும் அருமை
    நல்ல தரமான படைப்பு
    தொடர வாழ்த்துக்க

    ReplyDelete
  18. நேற்று நம்ம கருனுக்கு திருமண நாள். அவருக்கு தமிழ்வாசியின் வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன்

    ReplyDelete
  19. இறுதி வரி டச்சிங் ..(

    ReplyDelete
  20. வாழ்வில் பெண்ணாகப் பிறந்து
    மடியில் கருவேற்றி
    பிறக்கும் குழந்தை அம்மா என்று
    கூறுவதைக் கேட்காத
    எத்தனையோ பெண்மைகள்
    இவ்வுலகில் உண்டு...
    கொடுமையான ஒரு உணர்வு அது....
    அழகாக கவிதை புனைந்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  21. எப்பவும் போல கவிதை சூப்பர் மச்சி

    ReplyDelete
  22. //இறந்த பிறகு
    என்னை
    எரித்துவிடாதீர்கள்
    புதைத்துவிடுங்கள்
    அப்போதாவது
    இவ்வயிற்றில்
    புழு, பூச்சி வராதா?
    //

    எங்கோ கேட்ட வரிகள்....

    அருமை

    ReplyDelete
  23. நல்ல கவிதை கருன்.

    ReplyDelete
  24. அருமை அதிலும் அந்த கடைசி வரிகளில் உயிர் கிடைக்கிறது அந்த பெண்ணுக்கு மட்டுமல்ல இந்த கவிதைக்கும்!

    ReplyDelete
  25. அன்பின் கருன் - மிக மிக அருமையான கவிதை - மனம் வலிக்கிறது - மழலை இல்லாத பெண்ணின் மன நிலை கவிதையாகப் படிக்கும் போது ...... அத்தனை உவமைகளும் நன்று. இறுதியாக எரிக்காதீர்கள் என்றது சமீபத்தில் படித்த ஒரு கவிதையில், புதுப்புடவை இன்னும் கொஞ்ச நேரமாவது இருக்கட்டுமே - என்று சொல்லும் ஒரு ஏழையின் பிணம் கூறுவதை நினைவுறுத்துகிறது. நல்வாழ்த்துகள் கருன் - நட்புடன் சீனா

    ReplyDelete
  26. மனம் கணக்க வைக்கும் கவிதை!

    ReplyDelete
  27. உணர்வுகளின் வெளிப்பாட்டை அழகிய கவிதை வரிகளில் ..
    சிறப்பு .. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. உண்மையிலேயே மனதை கனக்கச்
    செய்யும் கவிதை. அந்தப்பெண்
    களின் நிலை பரிதாபமே. அதற்கு
    அவளமட்டுமே பொறுப்பாக இருக்க
    முடியாது.

    ReplyDelete
  29. இறந்த பிறகு
    என்னை
    எரித்துவிடாதீர்கள்
    புதைத்துவிடுங்கள்
    அப்போதாவது
    இவ்வயிற்றில்
    புழு, பூச்சி வராதா?

    மனசு வலிக்கிறது.

    ReplyDelete
  30. அருமையான கவிதை

    ReplyDelete
  31. தலைப்பில் மட்டுமல்ல பதிவிலும் அதிர வைக்கிறீர்கள்

    ReplyDelete
  32. எவ்வளவோ உள்வாங்கி
    எதனையும் கொடுக்காத
    கஞ்சனின் பணப் பெட்டி
    நான்...!
    nice lines

    ReplyDelete
  33. அருமையான content வாத்யாரே!

    ReplyDelete
  34. கவிதை அருமையாக இருந்தாலும் ,அதில் ஒரு பெண் தாய்மைக்கு ஏங்குவது நினைவில் சோகமாக உட்காருகிறது . அருமை

    ReplyDelete
  35. இப்படியும் சோகத்தை சொல்ல முடியுமா என்ற ஒரு வலியுடன் அசத்தலான கவிதை

    ReplyDelete
  36. பெண்களை மலடி என்று ஒதுக்கும் சமூகத்தின் மீது சம்மட்டியால் உச்சிப் பொட்டில் அடித்து, அவர்கள் தவறுகளைப் புரிய வைக்கின்றீர்கள்.

    ReplyDelete
  37. //இறந்த பிறகு
    என்னை
    எரித்துவிடாதீர்கள்
    புதைத்துவிடுங்கள்
    அப்போதாவது
    இவ்வயிற்றில்
    புழு, பூச்சி வராதா?//

    இந்த வரிகளை இதற்கு முன் ஓர் தொ கா- கவியரங்கிலோ; சஞ்சிகையிலோ பல வருடங்களுக்கு முன் கேட்டதாகவோ
    படித்தகவோ ஞாபகம்.

    ReplyDelete
  38. Super kavithai.....After a long time reading such a nice one...

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"