தி.மு.க., தலைமை மீது, தொடர்ந்து குற்றம் சாட்டுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ள பா.ம.க., இனிமேல், அ.தி.மு.க.,வையும் எதிர்க்குமாம்!
இவர்களின் கடந்த கால வரலாற்றில், அ.தி.மு.க., தலைமையை எதிர்க்கும் துணிவுக்கு, ஆதாரம் ஏதுமில்லை. அத்தகு துணிச்சலும், வீரமும் பா.ம.க., தலைவருக்கு இனியேனும் துளிர் விடுமா என்பது சந்தேகமே; அப்படியிருக்கையில், இவர்களை நம்பி, பிற கட்சியினர் எப்படி கூட்டணியில் சேருவர்?
தி.மு.க.,வுக்கு, ஒரு கொள்கை உண்டு; அது, அ.தி.மு.க.,வை எதிர்ப்பது. அ.தி.மு.க.,வுக்கும், ஒரு கொள்கை உண்டு; அது, தி.மு.க.,வை எதிர்ப்பது.
மற்ற கட்சிகளுக்கு, என்ன கொள்கை இருக்கிறது? தேர்தலுக்குத் தேர்தல், தமக்கு முதுகு கொடுத்தவர்களையே எட்டி உதைத்துவிட்டு, அடுத்த முதுகைத் தேடுவதுதானே, இவர்களது வாடிக்கை!
தி.மு.க., தலைமை, குடும்ப அரசியல் நடத்துவது, பா.ம.க.,வின் குற்றச்சாட்டு. 1993ல், வைகோ தொடுத்த கணைதானே அது... அவரே தி.மு.க.,வுடன் கூட்டணியில் சேர்ந்து, தேர்தலை சந்திக்கவில்லையா?
தி.மு.க., தலைமை மட்டும், இப்போது குடும்ப அரசியலை நடத்தவில்லை. நேரு, சாஸ்திரி, சரண்சிங், தேவ கவுடா குடும்பங்கள், மத்திய அரசிலும், பரூக் அப்துல்லா தொடங்கி, புதுவை மாநில வெங்கட சுப்பா ரெட்டியார் வரை, அனைத்து மாநிலங்களிலும், குடும்ப அரசியல்தான் நடக்கிறது; பா.ம.க.,வும், அதைத்தான் செய்கிறது.
தி.மு.க., தலைமை செய்த, அத்தனைக் காரியங்களையும் காப்பியடித்துக் கொண்டிருக்கும் பா.ம.க., தலைமை, கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கொண்டு, கல்லெறியக் கூடாது.
பா.ம.க., தன் குறைகளைக் களைந்து, பொது வாழ்வில், அனைத்து இன மக்களின் நம்பிக்கையையும் பெருமளவுக்கு, தன் குண நலன்களை மாற்றிக் கொள்ளாதவரை, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக வளர முடியாது. தே.மு.தி.க., நிலையைக் கூட எட்ட முடியாது. தன் குடும்ப நலனையும், ஒரு சில குறிப்பிட்ட வன்னியர் குழுக்களை மட்டுமே முன்னிறுத்தி, தமிழகத்தில் அரசியல் நடத்த முடியாது என்பதே உண்மை...
இந்த வருஷத்தோட சிறந்த காமெடி இதுதான்..
ReplyDeleteநல்ல அலசல்..
ReplyDeleteபதிவுக்கு அன்புடன் பாராட்டுக்கள்..
டம்மி பீஸ்
ReplyDeleteகடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வின் குடும்ப அரசியல் காரணமாக, மக்கள் எழுப்பிய எதிர்ப்பாலைகளால், தம் கட்சி கடுமையான தோல்வியைத் தழுவி விட்டதாக, பா.ம.க., தெரிவித்துள்ளது.
ReplyDelete..... And the Best Comedian Award goes to.........
இனிய காலை வணக்கம் மச்சி,
ReplyDeleteஇருங்கோ படிச்சிட்டு வாரேன்.
ஸப்பா இப்பத் தான் ராமதாசுக்கு தமிழ் மக்கள் மீது அனுதாபம் பிறந்திருக்குப் போல..
ReplyDeleteநம்மளை வைத்து நன்றாகத் தான் காமெடி பண்ணுறாங்க பாஸ்.
\\\தி.மு.க., தலைமை மீது, தொடர்ந்து குற்றம் சாட்டுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ள பா.ம.க., இனிமேல், அ.தி.மு.க.,வையும் எதிர்க்குமாம்! \\\\ இன்னுமா தமிழ் நாடு இவங்கள நம்புது ?
ReplyDeleteமாப்ள நகைச்சுவை உணர்வு உங்களுக்கு ஜாஸ்தி...இல்லன்னா இந்த காவாலிப்பய டான்ச போட்டு இருப்பியா ஹிஹி!
ReplyDeleteநல்ல காமெடி பண்றாங்கோ. அரசியல்ல சுப்ரமணி சாமிக்கு அப்புறம் இவர்தானுங்கோ
ReplyDeleteடாக்டர் ராமதாஸ்
ReplyDeleteபடா தமாஷ் பேர்வழி
ஒவ்வொரு முறையும் கட்சிகளுடன் ஆன
கூட்டணியை மாற்றுவது
கலைஞரின் குடும்ப அரசியல் குறித்து
இவர் குடும்ப அரசியல் செய்து கொண்டே பேசுவது
இன்னும் நிறையச் சொல்லிகொண்டு போகலாம்
தெளிவான பதிவைத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
very good post...
ReplyDeletegood analysis and 100% truth
tq ,,,
டமாசு டமாசு.
ReplyDeleteநல்ல அலசல்.
ReplyDeleteஇவங்க கமெடிக்கு ஒரு அளவே இல்லாம போயிடிச்சி...
ReplyDeleteதன் குடும்ப நலனையும், ஒரு சில குறிப்பிட்ட வன்னியர் குழுக்களை மட்டுமே முன்னிறுத்தி, தமிழகத்தில் அரசியல் நடத்த முடியாது என்பதே உண்மை...
ReplyDeleteசரியா சொன்னீர்கள்....!!? அத்தோடு இவர்களிடமும் சில நல்ல கொள்கைகள் இருக்கின்றது என்பதை ஏற்றுகொள்ளத்தான் வேண்டும் உ+ம் மது விலக்கு புகையிலை எதிர்ப்பு மரம் வளர்தலை ஊக்கிவித்தல் போன்றவை...
அஸ்தமனம் ஆரம்பம்....
ReplyDeleteஅதான் அலறல் கேட்குது...
காமடி அரசியல்வாதிகள்
ReplyDeleteவடிவேலு, விவேக் எல்லாரையும் ஓரங்கட்டிட்டார் :)
ReplyDeleteஅரசியல் பகிர்வு!!!நன்றி...
ReplyDeleteஇவங்க எல்லாம் வாஷ் அவுட் தான்
ReplyDeleteஇவர்களும் இவர்களின் காமெடி அரசியலும்
ReplyDeleteநல்ல அரசியல்
ReplyDeleteதெளிவான பதிவைத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteராமதாஸை குரங்காட்டித்தனத்தை இன்னும் விமர்சிக்காமல் ஆக்க பூர்வமான ஆலோசனை கூறலாமே!
ReplyDeleteவை.கோ போலவே ராமதாஸ் தமிழீழ சார்பு நிலை கொண்டவர் என்ற பிம்பம் இன்னும் இருப்பதால் வை.கோவுடன் இணைந்து செயல்படுவது ப.ம.கவுக்கு புது வாழ்வைத் தரும்.
இலவச ஆலோசனைன்னு இளப்பமா விட்டுட்டா 2011 தேர்தலுக்கு முந்தைய பதிவுலக கருத்துக்களையெல்லாம் புறம் தள்ளி தி.மு.கவுடன் போய் சேர்ந்து கொண்டது போல் 2016லும் குப்புற விழும் சாத்தியமே மிஞ்சும்:)
என்னை கேட்டால் அவரை பாராட்டத்தான் செய்யணும் கருண்...
ReplyDeleteஇத்தனை நாள் எந்த சூடும் சொரணையும் இல்லாது கட்சி மாற ஒரு திறமை வேண்டும் அல்லவா..
என்னை கேட்டால் அவரை பாராட்டத்தான் செய்யணும் கருண்...
ReplyDeleteஇத்தனை நாள் எந்த சூடும் சொரணையும் இல்லாது கட்சி மாற ஒரு திறமை வேண்டும் அல்லவா..
தி.மு.க.,தலைமை செய்த, அத்தனைக் காரியங்களையும் காப்பியடித்துக் கொண்டிருக்கும் பா.ம.க.,தலைமை,கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கொண்டு, கல்லெறியக் கூடாது.////அடுத்த எலெக்சன் வரைக்கும் தாங்குமா????????
ReplyDeleteகாலம் அவர்களுக்கும் ,அன்பா “மணி” அடிக்கும்..
ReplyDeleteபொறுத்தார் பூமி ஆள்வார்.. பொறாதார் மரம் வெட்டுவார்...
அம்புட்டுதான்