Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/30/2011

நம் இந்தியா ஜனநாயக நாடா?


"இந்தியா ஒரு ஜனநாயக நாடு!" இன்று வரை, அரசியல்வாதிகள் அடிக்கடி உச்சரிக்கும் நாம கரணமும் இது தான். ஆனால், இந்தியா ஜனநாயக நாடாக இருக்கிறதா என்பது கேள்விகுறிதான். 

இப்போது, பண நாயகத்தால், ஜனநாயகத்தை விலை பேசும் மாநிலங்களாக, ஒவ்வொன்றும் மாறி வருகிறது. இதற்கு, மத்திய அரசும் விதி விலக்கல்ல. தற்போது, 65வது சுதந்திர தின கொடியை பறக்கவிட, விண்ணில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. 


குண்டு துளைக்காத கூண்டுக்குள் இருந்து தான், தேசியக் கொடியை பிரதமர் முதல், மாநில முதல்வர்கள் வரை, விண்ணில் பறக்க விட வேண்டிய அவல நிலை இந்தியாவில் நிலவுகிறது. பயங்கரவாதம் தலை தூக்கி நிற்கிறது. 

ஓட்டிற்காக சட்டங்களை வளைக்காமல், நாட்டிற்காக, நாட்டு மக்களுக்காக சட்டங்களை இயற்ற வேண்டும். இந்திய அரசியல் சட்டத்தின் ஓட்டைகளை நன்கறிந்து தான், வெளிநாட்டு சதிகாரர்களின் சதிகள், அடிக்கடி இங்கே அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. 

அப்பாவி இந்திய மக்கள், பலி கடா ஆகிக்கொண்டிருக்கின்றனர். லோக்பால் மசோதாவில், பிரதமரையும், நீதிபதிகளையும் ஏன் அனுமதிக்க கூடாது? பிரதமர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; மக்கள் பிரதிநிதி. நீதிபதி என்பவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் அமைப்பால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 

இந்த மசோதாவிலும் ஓட்டைகள் அதிகம். மும்பை குண்டு வெடிப்பில், 100க்கு மேற்பட்டவர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில், ஒரே ஒரு குற்றவாளி, முதல் குற்றவாளியாக கருதப்பட்டு, தீர்ப்பும் எழுதப்பட்ட பின், அவனை தூக்கிலிட கால தாமதம் ஏன்?

இந்த கால தாமதத்தின் விளைவே, மீண்டும் மும்பையில் குண்டு வெடித்து, 20க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மத்திய அரசு தங்களை பாதுகாத்துக் கொள்ள, அடிக்கடி சட்டங்களை மாற்றிக் கொண்டு, அப்பாவிகளின் உயிர்களை பறித்து விடக்கூடாது. 

அமைச்சர்களை பாதுகாக்க குண்டுதுளைக்காத கார், பாதுகாப்பு படை இருக்கின்றன. அப்பாவிகளை பாதுகாப்பது யார்? அடுத்த சுதந்திர தினத்திலாவது, தேசியக் கொடியை சுதந்திரமாக பறக்க விட, இந்திய அரசியல் சட்டம் மாற்றப்படட்டும்.

அப்போதுதான் இந்தியா ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள்ளலாம்.

17 comments:

  1. இந்திய அரசியல் சட்டத்தின் ஓட்டைகளை நன்கறிந்து தான், வெளிநாட்டு சதிகாரர்களின் சதிகள், அடிக்கடி இங்கே அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
    //உண்மைதான்!

    ReplyDelete
  2. கேள்விகுறி தான் பாஸூ

    ReplyDelete
  3. அடுத்த சுதந்திர தினத்திலாவது, தேசியக் கொடியை சுதந்திரமாக பறக்க விட, இந்திய அரசியல் சட்டம் மாற்றப்படட்டும்.

    அப்போதுதான் இந்தியா ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள்ளலாம்.

    ReplyDelete
  4. மிகப்பெரிய கேள்விக்குறி தான் நண்பரே.

    ReplyDelete
  5. வணக்கம் மச்சி,
    விரிவான கருத்துரைகளோடு பின்னர் வருகிறேன்,

    ReplyDelete
  6. //அமைச்சர்களை பாதுகாக்க குண்டுதுளைக்காத கார், பாதுகாப்பு படை இருக்கின்றன. அப்பாவிகளை பாதுகாப்பது யார்? அடுத்த சுதந்திர தினத்திலாவது, தேசியக் கொடியை சுதந்திரமாக பறக்க விட, இந்திய அரசியல் சட்டம் மாற்றப்படட்டும்.

    அப்போதுதான் இந்தியா ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள்ளலாம்.//

    நல்லாச்சொல்லி இருக்கீங்க நண்பா

    ReplyDelete
  7. democracy is a "government off the people,buy the people,far the people"

    ReplyDelete
  8. எத்தனை சட்டங்கள் வந்தாலும் இது மாறாது ...

    ReplyDelete
  9. சங்கு!சங்கு!சங்கு!சங்கு!சங்கு!சங்கு!சங்கு!சங்கு!சங்கு!சங்கு!சங்கு!சங்கு!

    ReplyDelete
  10. நண்பரே, நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை, 100 பேரை கொன்றால் தூக்கு கிடையாது...ஆனால் ஒரு காங்கிரசில் இருக்கும் ஒரு கொசுவை அடித்தால் கூட தமிழனுக்கு தூக்கு... விளங்கிடும் நாடு...

    ReplyDelete
  11. நாட்டில் சட்டங்களை விட ஓட்டைகள் அதிகம்...

    என்ன செய்ய

    ReplyDelete
  12. அரசியல் சாசனம் மாற்றப்படவேண்டும்....
    ஊழலுக்கு பெயர்க்காரணம் தெரியாத நாட்களில்
    உருவாக்கப்பட்ட சட்டங்கள்
    இன்று உப்புக்கு ஆவதில்லை....
    மாற்றப்படவேண்டும்....

    ReplyDelete
  13. உண்மையான உணர்வுகளை, ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்..! பகிர்வுக்கு மிக்க நன்றி..! இதையும் ஒருதடவைப் பாருங்களேன்..! இனி தடைகள் இல்லை உனக்கு..!

    ReplyDelete
  14. //குண்டு துளைக்காத கூண்டுக்குள் இருந்து தான், தேசியக் கொடியை பிரதமர் முதல், மாநில முதல்வர்கள் வரை, விண்ணில் பறக்க விட வேண்டிய அவல நிலை இந்தியாவில் நிலவுகிறது//
    Well said!

    ReplyDelete
  15. உண்மை தான் சகோதரா,
    அப்பாவி மக்கள் மீதான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் போது தான் இலங்கை, இந்திய நாடுகள் ஜனநாயக நாடுகள் எனும் நற்பெயரினைப் பெற்றுக் கொள்ளும்,

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"