தி.மு.க., தலைமை மீது, தொடர்ந்து குற்றம் சாட்டுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ள பா.ம.க., இனிமேல், அ.தி.மு.க.,வையும் எதிர்க்குமாம்!
இவர்களின் கடந்த கால வரலாற்றில், அ.தி.மு.க., தலைமையை எதிர்க்கும் துணிவுக்கு, ஆதாரம் ஏதுமில்லை. அத்தகு துணிச்சலும், வீரமும் பா.ம.க., தலைவருக்கு இனியேனும் துளிர் விடுமா என்பது சந்தேகமே; அப்படியிருக்கையில், இவர்களை நம்பி, பிற கட்சியினர் எப்படி கூட்டணியில் சேருவர்?










