வந்துவிழும்
நிலவொளிகளை உள்வாங்கிய
உறக்கத்தில் வந்து விழுந்ததன்று
உறக்கத்தில் வந்து விழுந்ததன்று
இந்தக் கனவு...!
எழுந்தும், எழாமலும்
புரண்டு படுக்கையிலே
அதிகாலை வருமுன்னே
நித்திரையில் வந்து விழுந்ததன்று
இந்தக் கனவு...!
சிந்தனையை சீா்படுத்தி
மௌனித்த காலங்களில்
இதயப் பள்ளத்தில்
வந்து விழுகிறது,
கண்களை திறந்துகொண்டு இருக்கையிலே
வந்து விழுகிறது,
கண்களை திறந்துகொண்டு இருக்கையிலே
ஒரு கனவு...!
கைக் கோர்த்துக் கொண்டது...!
ஊற்றெடுப்பது என்னவோ
இமயமானாலும்
கடலோடு கலந்துகொள்வது
தென்குமரியில் தான்...!
தென்குமரியில் தான்...!
இனி,
பாரதத்தின் வரைபடத்தில்
ஒரே நதிதான்...!
வேதங்கள் ஒலிக்கும்
ஆலயங்களுக்கு விடுமுறை...!
தேவன் கோயில்
மணிகூண்டு இனி
மணிகாட்ட மட்டுமே...!
மணிகாட்ட மட்டுமே...!
குரான்களை ஓதும் மசூதிகளோ
புறாக்கள் வாழும் கூடுகளாகிவிட்டன...!
கலவரக் காலங்கள்
கலைந்து போய்விட்டது
இனி இங்கே
ஒரே மதம் தான்...!
நிலவுக்குள்
இந்தியக் குடியிருப்பு,
செவ்வாயில்
நம்தேசத்து செடி கொடிகள்,
ஒன்பது கோள்களுக்குள்ளும்
அழியாத அன்பை விதைப்பதே
இனி நமது
ஒரே சிந்தனை...!
மொட்டுகள் மட்டுமே வெடிக்கும்
ரோஜா தோட்டங்கள்...!
இலங்கைக்கு பாலம் அமைத்து
தென்னை ஓலைகளால்
கடல் நெடுகிலும் தோரணங்கள்...!
சீனத்து பெருஞ்சுவரில்
நம் இந்திய குயில்கள்...!
நம் இந்திய குயில்கள்...!
வாகா எல்லையில்
நம் இந்திய மயில்கள்...!
உலகம் முழுவதும்
வெள்ளைக் கொடி பறக்கவைப்பதே
இனி நமது
ஒரே இலக்கு...!
பொதி சுமக்கும் குழந்தைகளுக்கு
உள்ளங்கையில்
அடங்கிபோகும் பாடங்கள்...!
வேலைக்கு ஆள் கிடைக்காமல்
ஓடி,ஓடி
அலைய வேண்டும் நிறுவனங்கள்...!
குற்றங்கள் இல்லாததால்
காவல் நிலையங்களுக்கு
நிரந்தர விடுமுறை...!
கனவுகளுக்கு ஏது முற்றுபுள்ளி
இன்னும் சொல்வேன்...!
காஷ்மீரத்தில் நிகழும்
ஊடுருவல்கள் போல
என் விழிகளின் வழியே
இந்தக் கனவுகள்
ஊடுருவித் தொலைக்கிறது...!
ஊடுருவித் தொலைக்கிறது...!
மூடியே கிடக்க
உடன்பட்டதில்லை,
அதனால் தான்
அதையும் எழுதித் தொலைக்கிறது
என் எழுதுகோல்...!
இந்தக் கனவுகள்
வந்தது என்னவோ
கண்கள்
திறந்து கிடந்தபோதுதான்...!
இவைகள் நிறைவேற
காத்துக் கிடப்பதுதான் விதியோ?
இருட்டுக்குள்
ஒளி தேடுவதை விட்டுவிட்டு
உழைப்பென்னும்
ஒளியெடுப்போம்...!
சிலந்திகளுக்கு
சாரங்களாய் இல்லாமல்
சரிந்துபோன வெற்றிக்கு
கைக் கோர்ப்போமானால்
இந்தக் கனவுகள் கூட
இந்தக் கனவுகள் கூட
நாளைய
நிஜங்கள்தான்...!
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், கவிதை பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
இந்தக் கனவுகள்
ReplyDeleteவந்தது என்னவோ
கண்கள்
திறந்து கிடந்தபோதுதான்...!
இவைகள் நிறைவேற
காத்துக் கிடப்பதுதான் விதியோ?
தரங்கெட்ட அரசியல்வாதிகள் இருக்கும்வரை கனவு கனவாகவேதான் இருக்கும் அது விதி
அதீதக் கனவுகளாய் இருக்கே பாஸ்
ReplyDelete>>>ஊடுறுவித் தொலைக்கிறது...!
ReplyDeleteஊடுருவி
>>>>கடல் நெடிகிலும் தோரணங்கள்...!
ReplyDeleteநெடுகிலும்
>>>பொதி சுமக்கும் குழந்தைகளுக்கு
ReplyDeleteஉள்ளங்கையில்
அடங்கிபோகும் பாடங்கள்...!
டாப் கனவு
தரங்கெட்ட அரசியல்வாதிகள் இருக்கும்வரை கனவு கனவாகவேதான் இருக்கும் அது விதி //////
ReplyDeleteரிபீட்டு
தரமான கற்பனை நிஜமானால்
ReplyDeleteமனிதம் வாழும் . வாழ்த்துக்கள் நண்பரே
..கலவரக் காலங்கள்
ReplyDeleteகலைந்து போய்விட்டது
இனி இங்கே
ஒரே மதம் தான்...!..
இப்படி இருந்தல் ரொம்ப நன்றாக இருக்கும்...
Sweet Dreams! :-)
ReplyDeleteஉங்கள் கனவுகள் பலிக்கட்டும்...
ReplyDeleteஅதே கனவோடு நானும்...
congrats
ReplyDeleteஉன் காதலிக்கு ஒரு கிரீட்டிங் கார்டு
ReplyDeleteவாங்கி கொடுக்கும்போது அவள் முகத்தில் தோன்றும்
போலியான புன்னகையை விட ....
உன் நண்பனுக்கு ஒரு கட்டிங்
வாங்கி கொடுக்கும்போது அவன் முகத்தில் தோன்றும்
சந்தோஷமே உண்மையான நட்பின் அடையாளம்...!
மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்....!!!
என்ன பாஸ் இப்பிடி எழுதிரிங்க
supper
இதையும் பாருங்க http://tamilaaran.blogspot.com/2011/02/tpop-rpejk-fzzpuk-kzzbaplloj-ehlfsk.html
நடக்கப்போவதில்லை என்றாலும் உங்கள் கற்பனைத்திறனுக்கு வாழ்த்துக்கள், சிறந்த எண்ணங்கள்.
ReplyDeleteகனவுகள் அற்புதம்
ReplyDeleteபலிக்க ப்ரார்த்திக்கிறேன்
நல்லாருக்கு பாஸ்....
ReplyDeleteவாழ்த்துக்கள்
அற்புதம் இளக்கிய விழுதுன்னா சும்மாவா?
ReplyDeleteஅருமை கருன் தொடர்ந்து எழுதுங்கள்
கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் சொன்னார் தான்.
ReplyDeleteகனவு மட்டுமே கண்டுகொண்டிருக்கச் சொன்னாரா என்ன?
ரொம்ப கனவு காணு றிங்க போல நன்றாக இருக்கிறது
ReplyDelete//உலகம் முழுவதும்
ReplyDeleteவெள்ளைக் கொடி பறக்கவைப்பதே
இனி நமது
ஒரே இலக்கு...!
//
நல்ல இலக்கு.. நாங்களும் துணையாய் இருக்கிறோம்.. வாழ்த்துக்கள்..!
கவிதை அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇதையும் கொஞ்சம் படிங்க
http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post.html
நல்லா இருக்குங்க உங்க கனவு
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதரங்கெட்ட அரசியல்வாதிகள் தாமாகவே வருவதில்லை, நாமேதான் உருவாக்குகிறோம். இனியாவது தரம் பார்த்து அனுப்பி வைப்போம்.
ReplyDeleteஅருமையான கனவுகள்தான் (கவிதைகள்) ஆனால் பலிக்கனுமே
ReplyDeleteகலவரக் காலங்கள்
ReplyDeleteகலைந்து போய்விட்டது
இனி இங்கே
ஒரே மதம் தான்...!..சூப்பர் நண்பா,,,,,
சூப்பர் கனவுகள்
ReplyDeleteகனவுகள் மெய்பட வாழ்த்துக்கள்
கனவு காணுங்கள்
காதல் பட சந்தியாவை பற்றியல்ல
எதிர்கால இந்தியாவை பற்றி
சூப்பர் கனவுகள்
ReplyDeleteகனவுகள் மெய்பட வாழ்த்துக்கள்
கனவு காணுங்கள்
காதல் பட சந்தியாவை பற்றியல்ல
எதிர்கால இந்தியாவை பற்றி
இப்பிடி இருந்தா நல்லாத்தான் இருக்கும்!
ReplyDeleteசூப்பர் கவிதை பாஸ்! ரசிக்கத்தக்க நிறைய வரிகளை எழுதி இருக்கீங்க! வாழ்த்துக்கள்!! அந்த தொலைந்து போன மணிபர்ஸ் கவிதை போல இதுவும் எனக்கு ரொம்ப பிடித்து விட்டது!!
ReplyDeleteகனவு காணும் வாழ்க்கையாவும்....
ReplyDeleteஇவ்வளவுதூரம் கனவுக்கவிதை எழுத எவ்வளவு நேரம் தூங்கனும்?
ReplyDeleteநல்ல கனவு! ஆனால் நிஜம்?
ReplyDeleteஎல்லா வரிகளும் உணர்வுகளை மீட்டி எடுக்கின்றன...
ReplyDeleteFantastic to read.
ReplyDeleteMy Heartiest Appreciations.
Thank You.
மிக அருமையான சிந்தனை..
ReplyDeleteஇந்தக் கனவுகள்
ReplyDeleteவந்தது என்னவோ
கண்கள்
திறந்து கிடந்தபோதுதான்...!
இவைகள் நிறைவேற
காத்துக் கிடப்பதுதான் விதியோ?//
கனவுகள் பலிக்க வேண்டுவோம்..
கவிதைகளை அநதந்த உணர்சிகள் மேலோங்க எழுதியுள்ளீர்கள் ...பாராட்டுக்கள் ...
ReplyDeleteநீங்க புது பதிவு போட்டா எனக்கு அப்டேட் ஆகமாட்டேங்குது பாஸ்..
ReplyDeleteஇப்ப உங்க பதிவு..
நல்லாயிருக்கு பாஸ்..
கனவுகள் கண்டு அதை வெளியில் சொன்னால் மட்டும் போதாது..
அக்கனவுகளை மெய்பிக்க எழுச்சி பெற வேண்டும்..
உங்கள் எழுதும் நடையில் அதீத முன்னேற்றம்..
தங்களின் முதல் கவிதையை படித்துவிட்டு இதை படித்தால் ரெண்டும் முரண்பாடாகவே தெரியும்..
அது சரி எல்லாருக்கும் அப்படிதானே.!!!
அற்புதமான சிந்தனை... வாழ்த்துக்கள்!
ReplyDeleteவணக்கங்களும்,வாக்குகளும்...
ReplyDeleteஅருமையா எழுதியுள்ளீரகள்....
ReplyDeleteஎன்ன பாஸ் 2நாளா காணேல்ல
ReplyDeleteவணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்.
ReplyDeleteஇலங்கைக்கு பாலம் அமைத்து
ReplyDeleteதென்னை ஓலைகளால்
கடல் நெடுகிலும் தோரணங்கள்...!
நல்லாயிருக்கு!!!
>>> அசத்தல்...அசத்தல்..!! நான் படித்த சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று நண்பரே! வாழ்த்துகள் கருண்!
ReplyDeleteகனவு நல்லாயிருக்கு.அருமையா எழுதியுள்ளீரகள்.வாழ்த்துகள்.
ReplyDelete