Tamilus

The best Tamil Aggregator | Tamilus

2/24/2011

இந்திய வெளியுறவுத் துறை ஜீரனிக்கமுடியாத உண்மை


மெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் உரையாற்றிய அதிபர் பராக் ஒபாமா கல்வி, அறிவியல் ஆராய்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தாமல் போனால் இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளிடம் தோற்றுப் போவோம் என்று எச்சரித்துள்ளார்.

திலிருந்து தெரிவது என்ன? அமெரிக்கப் பேரரசு எப்போதும் வல்லரசு என்னும் மதிப்பீட்டைத் தூக்கிப் பிடிக்க வேண்டும் என்று எண்ணுகிறது. உலகில் தன் தலைமையிடத்தைத் தக்கவைத்துக் கொள்ளத் துடிக்கிறது; அதிலிருந்து தாழ்வு ஏற்பட்டுவிடக் கூடாது என்று கவலைப்படுகிறது. ஆனால் இந்தியாவின் நிலை என்ன?

ந்தியாவின் சுதந்திர நாள் மற்றும் குடியரசு நாள் கொண்டாட்டங்களின்போது, நமது ஆட்சியாளர்கள், "இந்தியா வல்லரசாக வளர்ந்து கொண்டிருக்கிறது' என்று கூறிக்கூறி அகமகிழ்ந்து போகின்றனர்; நமக்கும் ஆனந்தமாகத்தான் இருக்கிறது; இருக்காதா?

ந்திய அரசாங்கம் அமெரிக்காவின் உறவுக்காக எதையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறது. அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுவதை இடதுசாரிக் கட்சிகளும், முக்கிய எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவும் எதிர்ப்பது தெரிந்தும், அதனால் தனது ஆட்சியே கவிழ்ந்து போகலாம் என்ற நிலையிலும் பிரதமர் மன்மோகன் சிங் விடாப்பிடியாக இருந்தார். ஆட்சி நிலைப்பதற்காகப் பணத்துக்கு ஆள்பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது; அவர் கவலைப்படவில்லை.

மெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்தபோதும் வரலாறு காணாத வரவேற்பு. இந்தியப் பாதுகாப்பின்மேல் நம்பிக்கையில்லாமல் அவரது பாதுகாப்புப் படையினரே இந்தியாவுக்கு வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்; அவர் மும்பைக்குச் சென்றபோது பொதுமக்கள் கூட வெளியில் நடமாட அனுமதிக்கப்படவில்லை.

னால் இந்தியாவை அமெரிக்கா மதிக்கிறதா? தோழமை நாடாக ஏற்றுக் கொள்கிறதா? வளர்ந்து வரும் நாட்டுக்கு வளர்ந்த நாடு தரும் மரியாதை இதுதானா? தொடர்ந்து அவமானப்படுத்தி வருவதைப் பற்றி இந்தியா கவலைப்படுகிறதா?( அமெரிக்கா செய்த அவமானங்கள் அனைவரும் அறிந்ததே, அதை சேர்த்தால் பதிவு பெரிதாகிவிடும்)

ப்படிப்பட்ட வெளியுறவுத் துறை எந்த நாட்டிலாவது இருக்கிறதா? 

ளர்ச்சி பெற்று வரும் நாடு தம் மக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையிலிருந்து நழுவலாமா? ஒரு சின்னஞ்சிறு நாடான இலங்கையைத் திருப்தி செய்வதற்காக தம் நாட்டு மீனவர்களையே பலியிடுகிறது.

லங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது தொடர்கதையாகிவிட்டது. கடந்த சில நாள்களில் இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது மீனவ மக்களிடையே கோபத்தையும், கொந்தளிப்பையும் தூண்டி விடுகிறது. எத்தனை காலம்தான் இதைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? இதுவரை 400க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்; ஆயிரக்கணக்கானோர் உறுப்புகளை இழந்திருக்கின்றனர்; கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான உடைமைகள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன.

ந்தியாவின் எதிர்ப்பு நாடான பாகிஸ்தான் கூட அந்நாட்டுக் கடல் எல்லையைத் தாண்டி வரும் குஜராத் மீனவர்களைக் கொன்றதில்லை. பக்கத்து நாடான வங்கதேசமும் கடல் எல்லையை மீறும் மேற்கு வங்க மாநில மீனவர்களைத் தாக்குவதில்லை.

னால், இலங்கைக்கு ஆயுத உதவியும், ஆலோசனைகளும் அளித்து அங்கு நடந்த உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த இந்தியா, நிதி உதவிகளையும் வாரி வழங்குகிறது. இவ்வளவு உதவிகளையும் பெற்றுக்கொண்ட இலங்கை அரசு "வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைத்ததுபோல' இந்திய மீனவர்களையே பதம் பார்க்கின்றனர்.

ங்கே தமிழர்களுக்கென ஓர் அரசு இருக்கிறது; தமிழகத்தைச் சேர்ந்தவரே உள்துறை அமைச்சராக இருக்கிறார். இன்னும் சிலர் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். இந்தியாவை ஆளும் கூட்டு அமைச்சரவையில் தமிழகக் கட்சியும் பங்கு பெற்றுள்ளது. இவ்வளவு இருந்தும் தமிழக மீனவர்களைக் காப்பாற்ற இயலவில்லையென்றால் நம்ப முடிகிறதா?

லங்கை அரசு மட்டுமல்ல, இந்திய அரசும் தமிழர்களை அந்நியர்களாகப் பார்க்கிறது; அலட்சியம் காட்டுகிறது; அதனால்தான் தமிழக மீனவர்கள் கடல் எல்லை தாண்டிப் போவதால்தான் இப்படி நடக்கிறது என்று சமாதானம் கூறுகின்றனர். நமது வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இன்னும் ஒருபடி மேலே போய், ""கடல் எல்லையைத் தாண்டி போகிறவர்களுக்கு நாங்கள் பாதுகாப்புத் தர முடியாது...'' என்று நாடாளுமன்றத்திலேயே அறிவிக்கிறார்.

1987-ம் ஆண்டு இலங்கைக் கடற்படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும்போது, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைத் தாக்கியதும் இந்தக் கடற்படை வீரன்தான். இலங்கை அரசு என்ன செய்தது? மன்னித்து விடுதலை செய்தது.(நன்றி தினமணி)

பாம்புக்குப் பால் வார்க்கக் கூடாது என்பார்கள். இனப் படுகொலை செய்த ஒரு கொடிய அரசுக்குத் துணை போகலாமா? காந்தியின் தேசம் என்று போற்றப்படும் இந்தியாவுக்கு உலக அளவில் அவப்பெயர் ஏற்பட்டிருக்கிறது. இந்தியா வல்லரசாக வளர்ச்சி பெறுவது இதற்குத்தானா? அடுத்த நாட்டின் உறவுக்காக சொந்த நாட்டு மக்களைப் பலியிடும் அரசு வல்லரசும் ஆகாது; நல்லரசும் ஆகாது.

முந்தைய பதிவுகள்: 1. ஒரு மனசாட்சியின் மரணம்
                                              2. சித்தாள் வாழ்ந்த இடம்
                                              3.  பள்ளிச் சீருடை பயங்கரம் - ஓர் அலசல்

தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....  

36 comments:

  1. // அடுத்த நாட்டின் உறவுக்காக சொந்த நாட்டு மக்களைப் பலியிடும் அரசு வல்லரசும் ஆகாது; நல்லரசும் ஆகாது //

    ReplyDelete
  2. நான் தான் பஸ்ட்......

    ReplyDelete
  3. ஏ அப்பா இவளவு மேட்டர் இருக்கா...

    ReplyDelete
  4. //பாம்புக்குப் பால் வார்க்கக் கூடாது என்பார்கள். இனப் படுகொலை செய்த ஒரு கொடிய அரசுக்குத் துணை போகலாமா? காந்தியின் தேசம் என்று போற்றப்படும் இந்தியாவுக்கு உலக அளவில் அவப்பெயர் ஏற்பட்டிருக்கிறது. இந்தியா வல்லரசாக வளர்ச்சி பெறுவது இதற்குத்தானா? அடுத்த நாட்டின் உறவுக்காக சொந்த நாட்டு மக்களைப் பலியிடும் அரசு வல்லரசும் ஆகாது; நல்லரசும் ஆகாது.//

    உண்மைதாங்க. ஆனா ஒரு புள்ளப் பூச்சியப் போய் பாம்புன்னு சொல்லீட்டிங்களே?

    ReplyDelete
  5. ithu thaan india


    பஸ் தினம் தேவையா ? போலீஸ் மண்டையை உடைத்த மாணவர்கள
    Read more: http://karurkirukkan.blogspot.com/#ixzz1ErLrm7Fb

    ReplyDelete
  6. அருமையான பாயின்ட்கள். குறுகிய நோக்க வெளியுறவுக்கொள்கையால், இன்று தன் தலையில் தானே மண்தூவிவிட்டு முழுக்கின்றது இந்திய வெளியுறவுக்கொள்கை!

    ReplyDelete
  7. நானும் வந்துட்டேன்....

    ReplyDelete
  8. ஆட்சிக்கு வர்றவரை இருக்கிற நாட்டின் மீதான பக்தி ஆட்சிக்கு வந்த பின் போகிறது. என்ன செய்ய.

    ReplyDelete
  9. காங்கிரஸ் இலங்கயை ஆதரிக்குமே தவிர தமிழனை காப்பாற்றாது

    ReplyDelete
  10. அருமையா பொங்கி இருக்கீங்க தல

    புரட்சி நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறார்கள் மக்கள்.......அதை இலவசம் கொண்டு அணைத்து கொண்டு இருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்!

    ReplyDelete
  11. அருமையா பொங்கி இருக்கீங்க தல

    புரட்சி நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறார்கள் மக்கள்.......அதை இலவசம் கொண்டு அணைத்து கொண்டு இருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்!

    ReplyDelete
  12. இன்றைய இந்திய அரசு என்பது தமிழின விரோத அரசு என்பது தெரியாத ஒன்று அல்ல .தமிழர்கள் கிள்ளு கீரையாக எண்ணுகிறது .சீக்கியர்களின் மயிருக்கு கொடுத்த மதிப்பை கூட எம்மின உரவுகளுக்கு உயிர்களுக்கு கொடுக்க வில்லை என்பது உண்மை .இப்படி பட்ட பொம்மை இருந்தால்தான் என்ன இந்த ஏரசு போய் தொலைந்தால்தான் என்ன....

    ReplyDelete
  13. நல்லாய் இருக்கு அண்ணா!

    ReplyDelete
  14. அடேங்கப்பா/.. இண்ட்டர்நேஷனல் பதிவா இருக்கே/

    இண்ட்லிக்கு என்ன ஆச்சு?

    ReplyDelete
  15. ***அடுத்த நாட்டின் உறவுக்காக சொந்த நாட்டு மக்களைப் பலியிடும் அரசு வல்லரசும் ஆகாது; நல்லரசும் ஆகாது***
    மிகச்சரியான கருத்து.....
    நல்ல பதிவு....

    ReplyDelete
  16. //அடுத்த நாட்டின் உறவுக்காக சொந்த நாட்டு மக்களைப் பலியிடும் அரசு வல்லரசும் ஆகாது; நல்லரசும் ஆகாது.//
    சூப்பர்!

    ReplyDelete
  17. தவறான இந்திய வெளியுறவுக் கொளகையின் பலன்களை நம் குழந்தைகள் அனுபவிப்பார்கள்.

    ReplyDelete
  18. எல்லோருக்கும் இருக்கும் கோபம்.!!

    ReplyDelete
  19. பாம்புக்குப் பால் வார்க்கக் கூடாது என்பார்கள். இனப் படுகொலை செய்த ஒரு கொடிய அரசுக்குத் துணை போகலாமா?

    உணர வேண்டிய உண்மை...

    ReplyDelete
  20. //அடுத்த நாட்டின் உறவுக்காக சொந்த நாட்டு மக்களைப் பலியிடும் அரசு வல்லரசும் ஆகாது; நல்லரசும் ஆகாது.//

    good

    ReplyDelete
  21. இந்தியாவின் எதிர்ப்பு நாடான பாகிஸ்தான் கூட அந்நாட்டுக் கடல் எல்லையைத் தாண்டி வரும் குஜராத் மீனவர்களைக் கொன்றதில்லை. பக்கத்து நாடான வங்கதேசமும் கடல் எல்லையை மீறும் மேற்கு வங்க மாநில மீனவர்களைத் தாக்குவதில்லை.

    உண்மையான ஆதங்கம்..சூப்பர்! சூப்பர்!

    ReplyDelete
  22. கடைசி பஞ்ச் நிதர்சனம் :-(

    ReplyDelete
  23. அட போங்க பாஸ் உண்மையில் அடிக்க சொல்லி தைரியம் குடுப்பதே நம் அரசாங்கம் தான் ......................
    இந்தியா அரசாங்கம் எப்போதும் தமிழர்களை சந்தேகக்கண் கொண்டு தான் பார்க்கும் அதற்க்கு அரசியல் காரணங்கள் நிறைய இருக்கு இதை பற்றி ஒரு தனி பதிவு போடலாம் என்று இருக்கிறேன் ...............

    ReplyDelete
  24. எழுதுங்க நல்லா யாருக்கு கேக்கபோகுது
    நம்மபக்கம் காணேல்ல

    ReplyDelete
  25. antha vedannukku nenka red carpet varavetpu koduththa ,mathipana?samy

    ReplyDelete
  26. இலங்கை சார்ந்த கொள்கைவகுப்பாளர்கள் மலயாளிகளும் பார்பனர்களுமே. சிங்களவர்களும் தங்களை ஆரியர் என்றே சொல்கின்றனர். கடல்ல என்ன மலயாளியா இல்ல பார்ப்பானா சாகப்போறான்? இந்தியன் திராவிடன் என்று அர்த்தமில்லாமல் அவமானப்பட்டு அழிந்து போவதை விட்டு தமிழன் என்று தலைநிமிரவேணும் இல்லாட்டி இப்படியே பன்னாடைகளாக இருக்கவேண்டியதுதான்.

    ஃஃஅடுத்த நாட்டின் உறவுக்காக சொந்த நாட்டு மக்களைப் பலியிடும் அரசு வல்லரசும் ஆகாது; நல்லரசும் ஆகாதுஃஃ

    இது அடுத்த நாட்டின் உறவுக்காக இல்லைங்க ஆதிக்க சக்திகளின் சுயநலத்துக்காக. என்ன வல்லரசுங்க 16 மில்லியன் மக்கள தீண்டத்தகாத தலித்துக்கள்னு வச்சுகிட்டு வல்லரசா? விவசாயிங்க சூசைட் பண்ணிக்கிட்டு இருக்காங்க எலிய சுட்டு தின்னுக்கிட்டு இருக்காங்க ஆதிவாசிங்கள கொன்னுகிட்டு இருக்காங்க மதவெறி புடிச்சு அலஞ்சுகிட்டிருக்காங்க இந்த நிலமைல வல்லரசு றொம்ப அவசியம்தாங்களா? வல்லரசும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம் தமிழனா தன்மானத்தோட வாழ்ந்த போதும்.

    ReplyDelete
  27. //இந்திய அரசும் தமிழர்களை அந்நியர்களாகப் பார்க்கிறது; அலட்சியம் காட்டுகிறது//
    இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாக தேய்ந்துகொண்டே தான் இருக்கிறது தமிழ்நாடு ?!

    ReplyDelete
  28. இந்தியாவின் எதிர்ப்பு நாடான பாகிஸ்தான் கூட அந்நாட்டுக் கடல் எல்லையைத் தாண்டி வரும் குஜராத் மீனவர்களைக் கொன்றதில்லை. பக்கத்து நாடான வங்கதேசமும் கடல் எல்லையை மீறும் மேற்கு வங்க மாநில மீனவர்களைத் தாக்குவதில்லை.//

    இந்த வரிகள் கலக்கல்

    ReplyDelete
  29. நல்ல பதிவு வாத்யாரே! நமக்குத்தான் கொஞ்சம் அரசியல் அறிவு இல்லைங்கறதால முழுமையா புரியல!

    ReplyDelete
  30. "அடுத்த நாட்டின் உறவுக்காக சொந்த நாட்டு மக்களைப் பலியிடும் அரசு வல்லரசும் ஆகாது; நல்லரசும் ஆகாது."
    இது இந்தியாவுக்கே ஏன் தனது சொந்த நலனுக்காக மீனவர் ...........

    ReplyDelete
  31. ஒருவேல இந்த இத்தாலிக்காரம்மா இப்படி சொல்லி இருப்பாங்களோ -

    "இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்!"

    என் புதிய கடைப்பு வரவேற்கிறேன்

    http://gladiatorveeran.blogspot.com/

    ReplyDelete
  32. அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்தபோதும் வரலாறு காணாத வரவேற்பு. இந்தியப் பாதுகாப்பின்மேல் நம்பிக்கையில்லாமல் அவரது பாதுகாப்புப் படையினரே இந்தியாவுக்கு வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்; அவர் மும்பைக்குச் சென்றபோது பொதுமக்கள் கூட வெளியில் நடமாட அனுமதிக்கப்படவில்லை//
    நமது முன்னாள ஜனாதிபதி அப்துல் கலாமை விமான நிலையத்தில் மணிக்க்கணக்கில் காக்க வைத்து சோதனை என்ற பெயரில் அவமானப்படுத்தியும் நமக்கு உறைக்கவில்லையே. அடிமைத்தனம் இன்னும் நம் இரத்தத்திலிருந்து முழுமையாக அகலவில்லை.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"