Tamilus

The best Tamil Aggregator | Tamilus

2/23/2011

ஒரு மனசாட்சியின் மரணம்




ரு கொலுசு கவனமாகவே
கழற்றப்பட்டது -
ஆயினும்...........
கால் சுளுக்கிக் கொண்டது...!

ன் செயல் மெதுவாகவே
ஊடுருவியது நெஞ்சில்-
ஆயினும்...........
காயப்பட்டு விட்டது உயிர்....!

ண்பா!
படிப்பு கேட்டாய்
“ சாப்ட்வேர் ” என்றதும்
ஸ்நேகமாய் சிரித்தாய்...

ம்பளம் கேட்டாய்
சொன்னேன்...!

ர் கேட்டாய்
சென்னை என்றேன்...!

றவினர் பற்றி
உரசிப் பார்த்தாய் ...!

போய்விட்டாய் நேற்று...

ஜாதகக் கட்டுடன் வந்தாய்
தங்கை வரனுக்காய்...
என் ஜாதகமும் கேட்டாய்...!

றுபடியும்.,
பூர்வீகம் சொத்து
ஜாடையாய் கேட்டாய்...!

ன் போட்டோ  பார்த்து
புன்னகையில்
அஜீத் என்றாய்...!

ரு நாள்
விருந்துக்கு அழைத்து
ஒரு கிலோ  எடை கூட்டினாய்...!

ங்கையை அறிமுகம் செய்து
அவள் கனவில்
என்னை தைத்தாய்
என்  நெஞ்சில்
அவளை விதைத்தாய்...!
னிதாவின் மாடர்ன் ஆர்ட் ”
புரியாத பெயின்டிங்கை
புலம்பிவிட்டு போனாய்...!

னிதா போட்ட கோலம்”
இடியாப்பக் கோடுகளை
என் மீது  திணித்தாய்...!

ங்கை  சமைத்த குழம்பு ”
உணவு இடைவேளையில்
லஞ்சமாய் கொடுத்தாய்...!

ரவுக் கனவுகளில்
இருவரையும் சரசிக்கவிட்டு
ஏக்கக்  கூண்டில்
குருவியை அடைத்தாய்;
இப்போது
சிறகுகள் வேண்டும்.... இல்லை
திருமணம் வேண்டும்...!

த்திரிக்கை அடிக்க
பணம் கேட்டாய்
கொடுத்தேன்...!

ந்தல் அட்வான்ஸ்
மேளம், தாலி முன்பணம்
வெற்றுச் “செக்” காய்
வாங்கிப் போனாய்...!

மோதிர அளவுக்கு
விரலைக் கேட்டாய்;
கடிகார அளவுக்கு
கை கேட்டாய்...!

“ஷு ” அளவுக்கு
கால் கேட்டாய்;
அச்சு திருத்துமுன்
அப்பா பேர்கேட்டாய்;

ஓ.......................!
கடைசியில் அதையும்
கேட்டுவிட்டாய் நண்பா !

ஜாதி,

நின்று போனது கல்யாணம் மட்டுமா ?
என் நெஞ்சும் கூடத்தான்.

ன் தங்கை இப்போது
கல்யானமாகாத விதவை,

போ..... நண்பா......போ !
இன்னும்
ஜாதக கட்டுகளுடன் -
விதவைக்கு மாப்பிள்ளை வேண்டும்
விளம்பரம் கொடு.......!

ம்.......
ஒரு கொலுசு கவனமாகவே
கழற்றப்பட்டது
ஆயினும்...........



முந்தைய பதிவுகள்: 1.  பள்ளிச் சீருடை பயங்கரம் - ஓர் அலசல்
                                            2. சித்தாள் வாழ்ந்த இடம் - மனதை தொட்டகவிதைகள்                                             3.  என் தேசம் எரிந்துபோகுமா?                  
                                           

 தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....  
 

56 comments:

  1. நல்லாயிருக்கு... சகோதரா

    ReplyDelete
  2. வடிவேல் காமெடில வர்ற மாதிரி எனக்கு உங்க டீலிங்க் பிடிச்சிருக்கு.

    ReplyDelete
  3. >>>>ஒரு கொலுசு கவனமாகவே
    கழற்றப்பட்டது -
    ஆயினும்...........
    கால் சுளுக்கிக் கொண்டது...!

    ரசிக்க வைத்த வரிகள்

    ReplyDelete
  4. போ..... நண்பா......போ !
    இன்னும்
    ஜாதக கட்டுகளுடன் -
    விதவைக்கு மாப்பிள்ளை வேண்டும்
    விளம்பரம் கொடு.......!
    ரசிக்க வைத்த வரிகள் கலக்கீடேங்க கருண்...

    ReplyDelete
  5. //போ..... நண்பா......போ !
    இன்னும்
    ஜாதக கட்டுகளுடன் -
    விதவைக்கு மாப்பிள்ளை வேண்டும்
    விளம்பரம் கொடு.......!//

    சூப்பர்...

    அற்புதமான வரிகள்...

    இன்னும் நிறைய பேர் இதைத்தான் இன்று செய்து கொண்டு இருக்கின்றார்கள்...

    ReplyDelete
  6. தலைப்பு - படம் - கவிதை - எல்லாமே அருமையாக வந்து இருக்கின்றன.

    ReplyDelete
  7. யூகிக்க முடிந்தது முடிவை.
    மனதை தொட்டது கவிதை.

    ReplyDelete
  8. வேடந்தாங்கலில் புதிதாக பறக்கும், கவிப்பறவைகள் அற்புதமாக இருக்கே..வாழத்தக்கள்.

    ReplyDelete
  9. ஆம்.......
    ஒரு கொலுசு கவனமாகவே
    கழற்றப்பட்டது
    ஆயினும்...........////////////////////

    ரொம்பவும் ஏதார்த்தமான வரிகள் (வலிகள்).............................

    ReplyDelete
  10. நின்று போனது கல்யாணம் மட்டுமா ?
    என் நெஞ்சும் கூடத்தான்.
    ///
    நச் வரிகள்

    ReplyDelete
  11. இன்று பல முதிர்கன்னிகள் பணம் சம்பாதிக்கும் மெஷின்களாகத்தான் பல குடும்பத்தில் இருக்கிறார்கள்

    ReplyDelete
  12. என்ங்க இப்படி கலக்கிறிங்க..

    ReplyDelete
  13. கவிதையை ரசித்தேன்.
    நெகிழ்ந்தேன்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. அப்பப்பா அருமை அருமை, சார் நீங்க எழுதியதா
    (சாரி, மனதைத் தொட்டக் கவிதைகள்னு இருக்கே, அதான் கேட்டேன்)

    ReplyDelete
  15. உண்மையிலேயே மனதை தொட்டு விட்டது கவிதை. எதார்த்தமான உண்மைதான் இது.

    ReplyDelete
  16. சூப்பர்! கலக்கிட்டீங்க பாஸ்!

    ReplyDelete
  17. கவிதை எழுதுவது எப்படி என்று நீங்க ஒரு பதிவு போட்ட நல்ல இருக்கும்.(நான் என்ன எழுதினாலும் அத கவிதையின்னு யாரும் ஏத்துக் மாட்டேங்குறாங்க பாஸ். கொஞ்சம் சொல்லிக்கொடுங்க)

    ReplyDelete
  18. சிறப்பான கவிதை சிந்திக்க வைக்கும் முடிவு

    ReplyDelete
  19. கள்ள ஓட்டுடன் மொத்தம் 4

    ReplyDelete
  20. சிந்திக்க வைத்த வரிகள் அருமையா எழுதியிருக்கீங்க ஆசிரியரே
    வாழ்த்துக்கள் :))

    ReplyDelete
  21. எழுத்துக்கள் சரியாக தெரியவில்லை.. ஃபாண்ட் கலரை மாற்றுங்கள்..

    ReplyDelete
  22. கவிதை நல்லா இருக்கு.. கவிதையை விட தேர்ந்தெடுத்த படங்கள் மிகவும் அருமை.. வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  23. //ஜாதி,


    நின்று போனது கல்யாணம் மட்டுமா ?
    என் நெஞ்சும் கூடத்தான்.//

    அநியாயமா இருக்கே....

    ReplyDelete
  24. அருமையான கவிதையும் சாடலும்...
    சூப்பர் மக்கா....

    ReplyDelete
  25. WORLDCUP CRICKET LIVE

    http://karurkirukkan.blogspot.com/p/ipl-live.html

    ReplyDelete
  26. இப்போதைய உங்கள் கவிதைகள் எல்லாம் எளிமையான வார்த்தைகளோடு அதே சமயம் மனதை ஊடுருவதாக உள்ளது. இந்த கவிதையும் அவ்விதமே..

    ReplyDelete
  27. இன்னும் கொஞ்சம் நீளத்தை குறைத்திருக்கலாமே...

    ReplyDelete
  28. நல்லாய் இருக்கு சார்

    ReplyDelete
  29. முதலிலேயே சாதியைக் கேட்டுத் தொலைத்திருக்கலாமே!
    வெகு அருமை!

    ReplyDelete
  30. கலக்கல் கவிதை....

    ReplyDelete
  31. ஹிஹி சிரித்தேன் பாஸ்..அருமை கவிதை

    ReplyDelete
  32. உங்களைப்போன்ற கவிஞர்கள்தான் இதை இப்பிடி அழுத்தமாக சொல்லமுடியும்

    ReplyDelete
  33. ரொம்ப நல்ல ஆரம்பம்... என்னவோ இருக்கப் போகிறது என்று எதிர்பார்க்க வைக்கும் ஆரம்பம்.. ஆனால் கவிதையின் முடிவு/கரு ரொம்ப பேர் முயற்சித்த மிகப்பழைய கரு. ஜாதியை மையப்படுத்திய கவிதைகள் லட்சக்கணக்கில் இருக்கும்...
    உங்கள் முயற்சிக்கு என் பாராட்டுக்கள்..

    அந்த முதல் மூன்று வரிகள் ரசித்தேன்.

    ReplyDelete
  34. கலக்குறீங்க நண்பா.

    ReplyDelete
  35. குறுகிய வரிகளில் ரசிக்க வைக்கும் கவிதை தொகுப்பு அருமை . தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே மீண்டும் வருவேன்

    ReplyDelete
  36. "ஒரு கொலுசு கவனமாகவே
    கழற்றப்பட்டது -
    ஆயினும்...........
    கால் சுளுக்கிக் கொண்டது...!" எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.அப்புறம் ஒட்டு பிளஸ் பாலோவர் ஆயாச்சி தல...

    ReplyDelete
  37. இப்படித்தான் ஏதாவது ஆரம்பித்து எங்கேயாவது முடியும். அதுக்காக சபிக்க வேண்டாம். நல்ல கவிதை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  38. இப்படித்தான் ஏதாவது ஆரம்பித்து எங்கேயாவது முடியும். அதுக்காக சபிக்க வேண்டாம். நல்ல கவிதை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  39. மிக அருமை ... தொடருங்கள்

    ReplyDelete
  40. அருமையான வரிகள் ரசிக்கவைத்து சித்திக்க வைக்கின்றன நண்பரே

    ReplyDelete
  41. நல்லாருக்கு .. எளிமையான வாரத்தைப் பிரயோகம் , நீளம் கொஞ்சம் கூடிவிட்டதாக உணர்கிறேன் ....

    ReplyDelete
  42. "ஒரு கொலுசு கவனமாகவே
    கழற்றப்பட்டது -
    ஆயினும்...........
    கால் சுளுக்கிக் கொண்டது...!"

    மிகவும் ரசித்த வரிகள்,அருமையான கவிதை

    ReplyDelete
  43. நண்பர்களுக்குள் இப்போதெல்லாம் இப்படி நடக்கிறதா என்ன? கவிதை நடை அருமை, நன்றி.

    ReplyDelete
  44. நல்ல கவிதை,கருன்

    ReplyDelete
  45. இரசிக்க வைத்தது! ஜாதி என்பது என்ன என்று எல்லோரும் புரிந்து கொண்டால், பிரச்சனை தீர்ந்துவிடும்! எங்கள் ஊரில் (மலேசியா) பெரும்பாலும் கவுண்டர்கள்தான் துப்புரவு தொழில் செய்கிறார்கள். அதை அரசாங்க உத்தியோகம் என்று மார்தட்டிக் கொள்கிறார்கள்.. ஆனால், மற்றவர்களை இவர்கள் தாழ்ந்த ஜாதி பெயர் சொல்லி அழைக்கிறார்கள்! என்ன கொடுமை சார்?! சாஃப்வேர் இஞினியர் என்ன ஜாதியாக இருக்க முடியும்?? ஒன்னுமே புரியலே, உலகத்திலே!

    ReplyDelete
  46. முள் குத்தும் கவிதை அருமை நண்பா

    சாதி இரண்டொழிய வேறில்லைன்னு சொன்னாங்க!

    ReplyDelete
  47. சிறப்பாக இருக்கிறது ,கருத்தும் நிறைந்து இருக்கிறது தோழரே வாழ்த்துக்கள்

    ReplyDelete
  48. கலக்கலானகவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"