சிறுமியை கடத்தி சென்று இரண்டரை ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை தற்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட அந்த சிறுமி உமாவுக்கு (பெயர் மாற்றம்) மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள வாகைக்குளம் கிராமம்தான் சொந்த ஊர்.
12 வயது இருக்கும் போது அதே ஊரை சேர்ந்த உறவினர் ராஜ்குமார் என்பவருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். பக்குவம் அடையாத அந்த பெண், திருமண வாழ்க்கையை வெறுத்து கணவரைப் பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு மீண்டும் வந்து விட்டாள்.