Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label பொது அறிவு - பொது. Show all posts
Showing posts with label பொது அறிவு - பொது. Show all posts

3/12/2011

இப்படி படித்தால் சென்டம் நிச்சயம்.



டிப்பது என்பது மூன்று வகையான செயல்களை உள்ளடக்கியது.

1). நன்றாக கவனித்தல் (Observation)
2). தொடர்பு படுத்துதல் (Correlation)
3). செயல்படுத்தல் (Application)


 நன்றாக கவனித்தல்:   நாம் ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது அது எதைப்பற்றிக் கூறுகிறது. என்ன கூறுகிறது. எவ்வாறு கூறுகிறது என்பதைக் கவனத்துடன் படிப்பதாகும்.


தொடர்பு படுத்துதல்: அவ்வாறு நாம் கூர்ந்து கவனிக்கும் புது விஷயங்களை ஏற்கெனவே நமக்கு நன்கு தெரிந்த ஒரு சிலவற்றோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது நம் நினைவிலிருக்க உதவுகிறது.


செயல்படுத்தல்: நாம் புதிதாகக் கற்றவற்றைத் தகுந்த சூழ்நிலைகள் வரும்போது பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, நாம் புதிதாக ஒரு செய்யுளைக் கற்றோமென்றால், அதுபோன்ற நமக்குத் தெரிந்த பாடலுடன் தொடர்பு செய்து கொள்வதோடு மட்டுமல்லாமல், பேச்சுப் போட்டி, கடிதங்கள் போன்றவற்றில் நாம் கற்ற அந்த செய்யுள்பாடலைப் பயன்படுத்த வேண்டும். இது கற்றதை மறந்துவிடாமல் இருக்க உதவுகிறது.


கற்றல் செயற்பாங்கு : (Learning Process)கவனத்தோடு கேட்பது அல்லது படிப்பது: என்ன பாடம் - அதிலிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பது தெளிவாகத் தெரிந்தால் மிக எளிதாகக் கல்வி கற்கலாம்.

குறிப்பு எடுக்க வேண்டும்: ஆசிரியர் பாடங்களைக் கற்றுத்தரும்போதும், படிக்கும்போதும் குறிப்பு எடுக்க வேண்டும். குறிப்பெடுத்த பின் என்ன கற்றோம் என்பதை நினைவுப்படுத்திப் பார்க்க வேண்டும்.புதிதாகக் கற்றவற்றை அடிக்கடி சொந்த வார்த்தைகளில் சொல்லிப் பார்க்க வேண்டும். புதிதாகக் கற்றவற்றைத் தகுந்த சூழ்நிலைகள் கிடைக்கும்போதெல்லாம் நடைமுறைப்படுத்தல் அல்லது செயல்படுத்தல் வேண்டும்.

எவ்வாறு படிப்பது?: தலைப்புகளைப் படித்துப் புரிந்துகொண்டு அதனைக் கேள்வியாக மாற்றுவதன் மூலம் நாம் என்ன படிக்கப் போகிறோம் என்பது நமக்கு நன்கு புரியும்.முக்கியத் தலைப்புக்குக் கீழ் உள்ள சிறிய தலைப்புகளையும், எடுத்துக்காட்டுகளையும் வரைபடங்களையும் ஆராய்ந்து அறிவதன் மூலம் நாம் படிக்கும் புத்தகம், பாடம் நமக்குக் கூறும் முக்கியக் கருத்து என்ன என்பது தெரியும்.


வ்வொரு தலைப்புக்குக் கீழ் உள்ள முதல் பத்தியும், பாடத்தின் பின்பகுதியில் உள்ள சுருக்கமான தொகுப்புகளும் மற்றும் வினாக்களை நன்கு படித்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு செய்தபின், நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்பதை நினைவுப்படுத்திப் பார்க்க வேண்டும். ஒரு தாளில் நீங்கள் தெரிந்து கொண்ட அனைத்தையும் எழுதிப் பார்க்க வேண்டும்.அதனைச் சரிபார்த்து, மேலும் என்ன தெரிய வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு மீண்டும் படித்தால் அப் பாடத்தை எளிதாய் நம் மனத்தில் நிறுத்த முடியும்.


ரு பாடத்தைப் படிக்கத் தொடங்கும் முன் எந்த முறையில் படிப்பது என்பது மிக அவசியம். புத்தகத்தை எடுத்தவுடன் முதல் பத்தியில் இருந்து மனப்பாடம் செய்ய ஆரம்பித்து விடக்கூடாது.


கீழ்க்கண்ட முறையைப் பின்பற்றிப் படிக்க ஆரம்பித்தால் மிக எளிதாகக் குறுகிய நேரத்தில் மனத்தில் நிலைநிறுத்திக் கொள்ளலாம்.படிக்கப் போகும் பாடம் முழுவதையும் மேலோட்டமாக வாசிக்க வேண்டும். தலைப்புகளுக்கும், துணைத் தலைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதனால் இப்பாடம் எதைப் பற்றியது என்பது விளங்கும். பாடச் சுருக்கத்தை நன்றாகப் படிக்க வேண்டும்.


இதிலுள்ள சில வார்த்தைகளைப் படிக்கும்போது மனத்தில் கேள்விகள் எழும். (எடுத்துக்காட்டு : உயிரியலில் சைட்டோபிளாசம் என்ற சொல்லை வாசிக்கும்போது சைட்டோபிளாசம் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் வரும்.)


வினா எழுப்புதல்: (Asking Questions)பாடச்சுருக்கத்தை வாசித்த பிறகு, பாடத்திலுள்ள தலைப்புகள் அனைத்தையும் கேள்விகளாக மாற்றி நமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு செய்வதால் அதைத் தெரிந்து கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும்.எதற்காக இதைப் படிக்கிறேன். அதன் பயன் என்ன? என்பதை அறிந்து கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும். (எடுத்துக்காட்டு) அறிவியலில் மின்னாற் பகுப்பு என்ற தலைப்பை வாசிக்கும்போது மின்னாற் பகுப்பு என்றால் என்ன? என்ற கேள்வியை மனத்தில் எழுப்ப வேண்டும்.)


வாசித்தல் (Read): அர்த்தம் புரியும்படி கவனமாக வாசிக்க வேண்டும்.படித்தவற்றை நமக்கு ஏற்கெனவே தெரிந்தவற்றோடு தொடர்புப்படுத்தி எடுத்துக்காட்டோடு படிக்க வேண்டும்.புத்தகத்தில் அதிகமாக அடிக்கோடிடுவதைத் தவிர்க்க வேண்டும்.மிகவும் முக்கியமான வார்த்தைகளை மட்டும் அடிக்கோடிட வேண்டும்.இதனால் திரும்பிப் பார்க்கும் போது குழப்பமில்லாமல் எளிதாகப் பாடத்தை நினைவிற்கு கொண்டு வர முடியும்.

திரும்பச் சொல்லிப் பார்த்தல்: வாசித்து முடித்தபிறகு, முக்கியமானவற்றை நினைவுக்குக் கொண்டு வந்து சொல்லிப் பார்க்க வேண்டும்.இம்முறையானது படித்தவற்றை நினைவில் நிறுத்திக் கொள்ள மிகச் சிறந்த வழியாகும். படித்தவற்றை சொந்த வார்த்தைகளில் சத்தமாகச் சொல்லிப் பார்க்க வேண்டும்.


மேற்கண்ட முறைகளைப் பின்பற்றி ஒரு பிரிவை முடித்தவுடன் அடுத்த பிரிவிற்குச் செல்ல வேண்டும்.


தேர்வு எழுதிப் பார்த்தல்: இந்த முறைகளில் பாடம் முழுவதையும் படித்து முடித்த பிறகு மாதிரித் தேர்வு எழுதிப்பார்க்க வேண்டும்.ஒரு முறை முதலிலிருந்து அனைத்தையும் திரும்பிப் பார்க்க வேண்டும். தலைப்பும் எவ்வாறு மற்றவற்றுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கடைசியாக பாடச்சுருக்கத்தை இன்னொரு முறை வாசிக்க வேண்டும். இப்படி படித்தால் சென்டம்  நிச்சயம். 
Thanks dinamani..
 
                                               2. தமிழனுக்காக வருந்திய ஜெர்மன் மனசு
                                               3 . முடிவெடுக்கக் கற்கலாமா?
                                               4. ஜனாதிபதியும், சாக்கடை பன்றியும்!!!  

                                                  
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....      

12/31/2010

ஞாபகம் வருதே....

ஞாபகம் வருதே - இந்தியா: 2010 

ஜனவரி
4.    ஆந்திராவில் தனித்தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பந்த்.
5.    வட இந்தியாவில் குளிருக்கு 122 பேர் பலி.
6.    சமாஜ்வாதி கட்சி பொதுச் செயலாளர் அமர்சிங் கட்சி பதவியை  
       ராஜினாமா.
24.    கர்நாடகம்: கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல்.
27.    இந்தியர்கள் அனைவருக்கும் மும்பை சொந்தம்: முகேஷ்அம்பானி. 

பிப்ரவரி

8.    காஷ்மீரில் பயிற்சியின்போது பனிப்பாறைகள் சரிந்து 17 ராணுவ வீரர்கள் 
       மரணம்.
8.    முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு- மேற்குவங்க அரசு     முடிவு.
13.    புனே-ஜெர்மன் பேக்கரியில் குண்டுவெடிப்பு: 9 பேர் பலி.
21.    தனித்தெலுங்கானா கோரி உஸ்மானியா பல்கலைக்கழகத்தில்      
         தீக்குளித்த வாலிபர் மரணம்.
22.    பெட்ரோல்-டீசல்-மண்ணெண்ணெய், கேஸ் விலை கடும் உயர்வு.
25.     பிரபல ஓவியர் எம்.எப். உசேனுக்கு கத்தார் குடியுரிமை வழங்கியது.  

மார்ச்

2.    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கேரளா, திரிபுராவில்      
       மோட்டார் வாகன, ஆட்டோ தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்.
2.    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சட்டப்பேரவைக்கு 
        மாட்டுவண்டி யில் சென்றார் சந்திரபாபு நாயுடு.
8.    மகளிர் மசோதா தாக்கல்: நாடாளுமன்றத்தில் அமளி.
8.    மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ்- லல்லு, முலாயம் அறிவிப்பு.
9.    மாநிலங்களவையில் மகளிர் மசோதா நிறைவேறியது.
17.    சிஐடியு அகில இந்திய மாநாடு சண்டிகரில் எழுச்சியுடன் துவங்கியது.

ஏப்ரல்

1.    6-14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி 
       உரிமைச்சட்டம்.
1.    மக்கள் தொகை கணக்கெடுப்பு-ஜனாதிபதி துவக்கி வைத்தார்.
16.    கொச்சி கிரிக்கெட் அணி ஏலம்: சசிதரூர் பதவி விலகக் கோரி அமளி.
17.    பெங்களூர் கிரிக்கெட் மைதானம் அருகே இரண்டு இடங்களில்            
         குண்டுவெடிப்பு.
19.    எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் தாயாரின் மருத்துவ சிகிச்சைக்கு     
         அனுமதி மறுப்பு - மக்களவையில் எதிர்க்கட்சிகள் கண்டனம்.
20.     மேகாலயா முதல்வராக முகுல் சங்மா பதவியேற்பு.
22.     அமைச்சர் அழகிரி சபைக்கு வராதது ஏன்?- நாடாளுமன்றத்தில்  அமளி.
24.     பிரகாஷ் காரத் உள்ளிட்ட தலைவர்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு.
27.     விலை உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய அரசை கண்டித்து     
          இடதுசாரிக்     கட்சிகள் உட்பட 13 கட்சிகள் நாடு தழுவிய பொது       
          வேலைநிறுத்தம்.
27.     விலை உயர்வை எதிர்த்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள்   
            வெட்டுத்தீர்மானம் - ஆதரவு 201, எதிர்ப்பு 289. 

மே

2.    பாலியல் குற்றச்சாட்டு: கர்நாடக பாஜக அமைச்சர் ஹாலப்பா  ராஜினாமா.
3.    மும்பையில் ரயில் இன்ஜின் டிரைவர்கள் போராட்டம்.
4.    மம்தா கட்சி மத்திய இணை அமைச்சர் சிசிர்அதிகாரி, வங்க       
       தேசத்திலிருந்து ஆயுதம் கடத்தல்-நாடாளுமன்றத்தில் கொந்தளிப்பு.
6.    மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல்   
       காசப்புக்கு தூக்கு தண்டனை-சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.
28.  மேற்குவங்கத்தில் ரயில் தண்டவாளங்களை மாவோயிஸ்டுகள்  குண்டு
       வைத்து தகர்த்தனர்- மும்பை ரயில் கவிழ்ந்து 71 பயணிகள்     சாவு.
30.  ஜார்கண்ட் முதல்வர் பதவியிலிருந்து சிபுசோரன் ராஜினாமா.  

ஜூன் 

1.     ஜார்கண்டில் மீண்டும் குடியரசு தலைவர் ஆட்சி அமல்.
7.     போபால் விஷவாயு வழக்கில் 8 பேருக்கு இரண்டாண்டு சிறை.
9.     நிவாரண உதவி கப்பல்களை தாக்கிய இஸ்ரேலை கண்டித்து  
        இந்தியாவில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்.
13.   நாகா பிரிவினைவாதிகளின் ஒருமாத தடையால் மணிப்பூர் மக்களின் 
        இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
14.  கங்கை நதியில் படகு மூழ்கி 45 பேர் சாவு.
15.   மணிப்பூர் : நாகா குழுக்கள் தற்காலிக விளக்கம்.
29.   சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதலில் 26 சிஆர்பிஎப் வீரர்கள் பலி.

ஜூலை

6.    ஸ்ரீநகரில் பொதுமக்கள் - போலீஸ் மோதல் 4 பேர் பலி. ஜம்மு- காஷ்மீரில்
       ஊரடங்கு அமல்.
6.    மும்பையில் கனமழை: இரண்டுகட்டிடங்கள் இடிந்தன.
8.    அசாம் - கேரளாவில் பருவமழைக்கு 53 பேர் பலி.
8.    மாவோயிஸ்ட் பந்த் - சத்தீஸ்கரில் ரயில் நிலையம் தகர்ப்பு.
8    காஷ்மீரில் மேலும் பல பகுதிகளில் ஊரடங்கு நீடிப்பு.
12.  5 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில்  
       வெற்றிப்பயணம்.
14.     மும்பையில் குளோரின் வாயு கசிவு 103 பேருக்கு பாதிப்பு.
16.     தெலுங்குதேச தலைவர் சந்திரபாபு நாயுடு மகாராஷ்டிராவில் கைது.
19.     மேற்குவங்கத்தில் ரயில்கள் மோதல்-63 பேர் சாவு 92 பேர் காயம்.
24.    சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றவாளி: குஜராத்  
          உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா.
25.     குஜராத் அமித்ஷா கைது.
27.     விலை உயர்வு: எதிர்க்கட்சிகள் அமளி, இரு அவைகளும்     ஒத்திவைப்பு.

ஆகஸ்ட்

2.    காஷ்மீர் கலவரம் - பலி 15 ஆனது.
7.    ஜம்மு-காஷ்மீரில் பலத்த மழைக்கு பலி 130 ஆக உயர்வு 600 பேர்     மாயம்.
7.    மகாராஷ்டிராவில் ஐந்து விவசாயகிள் தற்கொலை.
9.    ஒரிசாவில் மழை வெள்ளம்: 85 ஆயிரம் பேர் பாதிப்பு.
15.  சுதந்திர தின நிகழ்ச்சி முதல்வர் உமர் அப்துல்லா மீது போலீஸ்காரர் ஷு 
      வீச்சு.
18.    ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் ஊரடங்கு.
18.    உத்தர்காண்ட்: பள்ளி கூரை இடிந்து 18 சிறுவர்கள் சாவு.
21.    உ.பி. தடுப்பூசி போட்ட குழந்தைகள் சாவு.
25.   அமெரிக்காவுக்கு ஆஜரான அணுவிபத்து நஷ்ட ஈடு மசோதா
        நிறைவேறியது.
26.     மாவோயிஸ்டுகளுடன்பேச்சு நடத்த அரசு தயார்: மன்மோகன் சிங்.
29.     பீகார் போலீசார் மவோயிஸ்டுகளால் கடத்தல்.

செப்டம்பர்

6.      பீகார் சட்டப்பேரவைக்கு 6 கட்ட தேர்தல் அறிவிப்பு.
9.      கேரளா: கலப்பட கள் குடித்து பலி 25 ஆக உயர்வு.
10.    வட மாநிலங்களில் பலத்த மழை லட்சக்கணக்கானோர் பாதிப்பு.
12.    மருத்துவ கல்லூரி ஊழியர்நியமனத்தில் முறைகேடு; கர்நாடக 
         அமைச்சர் ராமச்சந்திர கௌடா ராஜினாமா.
14.    வன்முறையால் காஷ்மீர் எரிகிறது.
14.    ஜார்க்கண்ட் நம்பிக்கை வாக்கெடுப்பு: அர்ஜூன் முண்டா வெற்றி.
14     அசாம் வெள்ளம்: 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு.
19.    ஒரு வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 108 பேர் பலி.
20.    மத்தியப்பிரதேசத்தில் ரயில்கள்மோதல் - 21 பேர் சாவு.
20.    காஷ்மீர்;அனைத்து கட்சி குழு ஆய்வு.
20.    சத்தீஸ்கர் : 7 போலீசாரை மாவோயிஸ்டுகள் கடத்தினர்.
21.    தில்லி நேரு ஸ்டேடிய நடைபாலம் சரிந்து 27 பேர் காயம்.
22.    தில்லி நேரு ஸ்டேடிய அலங்கார கூரை ஓடுகள் சரிந்தன.
23.    அயோத்தி: தீர்ப்பு ஒத்திவைப்பு.
30.    அயோத்தி பிரச்சனை: சன்னி வக்பு வாரியம், நிர்மோரி அகாரா  மற்றும் 
          ராம்லல்லா வீரஜ்மான் ஆகிய அமைப்புகளுக்கு 27 ஏக்கர்நிலம்  சமமாக 
          பிரித்தளிக்கப்படவேண்டும் -அலகாபாத் உயர்நீதிமன்றம்  தீர்ப்பு.  

அக்டோபர்

2.    காமன்வெல்த் விளையாட்டுக்கள் ஆரம்பம்.
6.    கர்நாடகம்: எடியூரப்பா அரசுக்கு நெருக்கடி - 7 அமைச்சர்கள் உட்பட  19 
       எம்எல்ஏக்கள் ஆதரவு வாபஸ்.
11.    கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு.
21.    பீகார் சட்டமன்றத் தேர்தல்: வாக்குப்பதிவு துவக்கம்.   

நவம்பர்

8.    அசாமில் போடோ தீவிரவாதிகள் தாக்குதல் 18பேர் சாவு.
9.    ஆதர்ஷ் முறைகேடு: மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவாண் நீக்கம்.
9.    காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி பதவியிலிருந்து சுரேஷ் கல்மாடி 
        ராஜினாமா.
14.    2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்: அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா.
15.    தில்லியில் 4 மாடிக்கட்டிடம் இடிந்து 32 பேர் பலி.
16.    ஸ்பெக்ட்ரம் விவகாரம் - பிரதமருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.
24.    ஆந்திர முதல்வர் ரோசய்யா திடீர் ராஜினாமா.
24.    பீகார்: ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி 206 இடங்களில் வெற்றி.
25.    ஆந்திரா; புதிய முதல்வராக கிரண்குமார் ரெட்டி பதவியேற்பு.
27.    2ஜி ஸ்பெக்ட்ரம்: ஆலோசனை தொகையாக ரூ.60 கோடி  வாங்கினேன் - 
         நீரா ராடியா ஒப்புதல்.
30.    2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்: நாடாளுமன்ற கூட்டுக்குழுவிசாரணைக்கு 
          உத்தரவிட அரசை வலியுறுத்துங்கள் - ஜனாதிபதியிடம் இடதுசாரி 
         கட்சிகள் மதச்சார்பற்ற கட்சிகள் முறையீடு.  
  
டிசம்பர்

1.    பங்குகளை விற்பனை செய்யக்கூடாது என வலியுறுத்தி பிஎஸ்என்எல் 
       அதிகாரிகள், ஊழியர்கள் நாடு தழுவிய     வேலைநிறுத்தம்.
7.    ஸ்பெக்ட்ரம் ஊழல் : நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கக்கோரி   பாஜக
         அல்லாத எதிர்க்கட்சிகள் எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில்     தர்ணா.
14.    பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு.
15.    ஆ.ராசா மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சிபிஐ     சோதனை.
17.    ஆந்திரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய
         நிவாரணம் வழங்க வலியுறுத்தி சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்
         துவங்கினார்.
22.    பிரித்வி -2 ஏவுகணை சோதனை வெற்றி.
22.    ஆந்திராவில் தொடரும் விவசாயிகள் தற்கொலை - மத்திய அரசு   
           தலையிட கோரி அனைத்து கூட்டுக்குழு பிரதமரைச் சந்தித்தது.
23.     கேரள முன்னாள் முதல்வர் கே.கருணாகரன் மறைவு.
24.     ஆந்திராவில் 8 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்ட சந்திரபாபு
           நாயுடு முடித்துக் கொண்டார்.  
30      தெலுங்கானா, ஆந்திரா பிரிக்கும் ஸ்ரீகிருஸ்னா கமிட்டி அறிக்கை இன்று
           மக்களவையில்  தாக்கல் செய்யப்படுகிறது.
 
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நவ்வாழ்த்துக்கள். 

படிச்சாச்சா.........?
அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?
தமிழ்மணம், தமிழ்10 ,உலவு ,லோகோ இருக்கா ....?
புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...
 
 
புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க..

12/18/2010

உங்களுக்குத் தெரியுமா ? VAO, TNPSC, RAILWAY EXAM AND OTHER COMP'VE EXAM TIPS

 VAO, TNPSC, RAILWAY EXAM AND OTHER COMP'VE EXAM TIPS

 உங்களுக்குத் தெரியுமா ?



  • டிசம்பர் 5, 1969 இல் அமெரிக்க படைத்துறையின் உயர் ஆய்வு திட்டங்கள் நிறுவனத்தால் (DARPA) நான்கு கணினிகள் இணைககப்பட்டு முதன் முதலாக இணையம் உருவாக்கப்பட்டது.

  • கடற்குதிரைக் குடும்பத்தைச் சேர்ந்த குழாய்மீன் இனத்தில் முட்டைகளை ஆண்கள் தம் உடலுள் சுமக்கின்றன. அவை அவ்வாறு கருவுற்றிருக்கையில் சில கருக்களை தம் உடலுள் உறிஞ்சிக் கொள்ளும் மாறுபட்ட தன்னின உண்ணும் நிகழ்வு அறியப்பட்டுள்ளது.

  • 117,000 நபர்களால் பேசப்படும் கிறீ (Cree) மொழியே கனடாவில் அதிகம் பேசப்படும் முதற்குடிமக்கள் மொழி

  • காம சூத்திரம் (வடமொழி: कामसूत्र) என்பது காமம் தொடர்பான ஒரு பண்டைய வடமொழி நூலாகும்.

  • மருத்துவம், ஆபத்துதவி, ஏழ்மை ஒழிப்பு ஆகியவற்றில் ஈடுபடும் வங்காளதேசம் ஊர் முன்னேற்ற செயற்குழு அல்லது பிராக் அமைப்பே உலகில் அதிகம் ஊழியர்களைக் (100 000) கொண்ட அரச சார்பற்ற சமூக சேவை அமைப்பு ஆகும்.

  • ஓர் ஆங்கில மாதத்தில் வரும் இரண்டாவது முழுநிலவு நீல நிலவு என வழங்கப்படுகிறது. அத்தகைய முழுநிலவு 2009 ஆண்டு திசம்பர் 31 அன்று நிகழ்ந்தது.

  • ஆங்கிலம் (37.8%), சீனம் (22.1%), எசுபானியம் (7.9%), யன்பானிசு (5.5%), பிரெஞ்சு (4.6%), போத்துக்கீசு ( 4.2%), யேர்மன் (3.7%), அரபு (2.9%), உருசியன் (2.6%), கொரியன் (2.2%) ஆகிய மொழியினர் இணையப் பயன்பாட்டில் முதல் 10 இடங்களில் உள்ளனர்.

  • நிலாவுக்கு வெற்றிகரமாக விண் கலம் ஏவி, மனிதர்களை அல்லது தானியங்கிகளைத் தரையிறக்கி, நிலாவின் நிலப்பரப்பில் பயணிக்கும் முதல் அரச சார்பற்ற குழுவுக்கு 20 மில்லியன் டொலர்கள் கொண்ட கூகிள் லூனர் எக்சு பரிசு வழங்கப்படும் என கூகிள் 2007 இல் அறிவித்தது.

  • மொழியொன்றின் இலக்கணத்தில், பேசுபவர், யாருக்குப் பேசப்படுகிறதோ அவர், இவர்கள் அல்லாத பிறர் ஆகியோர் தொடர்பில் வேறுபாடுகளைக் காட்டும் இலக்கணக் கூறு இடம் எனப்படுகிறது. இது தன்மை, முன்னிலை, படர்க்கை எனும் மூன்று வகைப்படும்.

  • விண்வெளிக் குடியிருப்பு என்பது புவிக்கு வெளியில் அமையக்கூடிய தன்நிறைவான மனிதர்வாழிடங்களைக் குறிக்கிறது.

  • பரிவு மசக்கை அல்லது பரிவுச் சினை (sympathetic pregnancy) என்பது ஒரு கருவுற்ற பெண்ணின் நெருங்கிய ஆண் துணைவருக்கு மசக்கை போன்ற அறிகுறிகள் தென்படும் பரிவு விளைவு ஆகும்.

  • அறிவொளிக் கால பிரான்சிய சமூக சிந்தனையாளர் மொன்ரிசுகியூஅவர்களால் எடுத்துரைக்கப்பட்ட அதிகாரங்களைப் பிரித்துவைத்தல்ஏற்பாடு இன்று ஐக்கிய அமெரிக்கா, கனடா, இந்தியா உட்பட அனேக மக்களாட்சி அரசுகளின் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது.

  • தர அமுக்கத்தில் நீரின் உருகுநிலை 0° செல்சியசு, கொதிநிலை 100°செல்சியசு ஆகும்.


  • சங்கத் தமிழ் பெண் புலவர் ஒக்கூர் மாசாத்தியார் பாடிய பாடல்கள் பாடல்கள் அகநானூற்றில் இரண்டும் (314, 384), குறுந்தொகையில் ஐந்தும் (126, 139, 186, 220, 275) புறநானூற்றில் ஒன்றுமாக (279) இடம் பெற்றுள்ளன.

  • சங்கிலியன் அல்லது சங்கிலி என்பவன் 1519 தொடக்கம் 1560கள் வரை யாழ்ப்பாண அரசை ஆண்ட அரசன் ஆவான்.

  • 50 மில்லியன் மக்களுக்கு மேல் பேசும் ஆப்பிரிக்க மொழியான சுவாகிலி மொழியே ஆப்பிரிக்காவில் அதிகம் பேசப்படும் ஆபிரிக்க மொழியாகும். ஆபிரிக்க ஒன்றியத்தின் ஐந்து அதிகாரபூர்வ மொழியாகளில் உள்ள ஒரே ஒர் ஆப்பிரிக்க மொழி சுவாகிலி ஆகும்.

  • செயல்வழிப் படம் என்பது ஒரு செயலாக்கத்தை அல்லது படிமுறைத்தீர்வை விபரித்து வெளிப்படுத்த பயன்படும் ஒரு வரைபடம் ஆகும்.

  • மொத்த இசைத் தொழிற்துறை 30-40 பில்லியன் (2004) பெறுமதி வாய்ந்தது.

  • மலேசிய மக்கள், மாங்காய்த் தோப்பு போன்ற ராக் பாடல்களுக்காக அறியப்படும் காசுமீர் இசுரோன் ஒரு மலேசியத் தமிழ் ராக் இசைக் குழு ஆகும்.

  • தமிழ்நாட்டின் மாநில மலர் காந்தள் (Glory lily), மரம் பனை, பறவை மரகதப்புறா.

  • அமெரிக்க ஐக்கிய நாடுகளின் நிலவியல் அளவீட்டு அமைப்பின் ஆய்வுகளின் படி ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய 60 குறிப்பிடத்தக்க நிலநடுக்கங்களும் 19 முக்கிய பெரிய நிலநடுக்கங்களும் ஏற்படுகின்றன.



  • சிலேபி என்று பொதுவாக அழைக்கப்படும் திலாப்பியா வகை மீன் ஆப்பிரிக்காவிலிருந்து தான் பிற நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.

  • உலகின் விருப்பமான பழம் தக்காளி. தக்காளி 60 மில்லியன் டன் உற்பத்தியாகிறது; இது அடுத்த இடத்தில் உள்ள வாழைப்பழத்தை விட 16 மில்லியன் டன் அதிகம்.

 
 ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் .

12/16/2010

பொது அறிவு - பொது


VAO, TNPSC, RAILWAY EXAM AND OTHER COMP'VE EXAM TIPS

முதல் நிலைப் பெயர்   -   மாற்றுப்பெயர்

கியூபா    -   ஆண்டிலீசின் முத்து
பாமீர்    -   உலகத்தின் கூரை
துருக்கி    -   ஐரோப்பாவின் நோயாளி
பின்லாந்து   -   ஆயிரம் ஏரிகள் நாடு
கினி கடற்கரை    -   வெள்ளையனின் கல்லறை
பெல் கிரேடு யூ‌கோஸ்லேவியா    -   வெள்ளை நகரம்
தாய்லாந்து    -   வெள்ளையானை நாடு
ஸ்டாக் ஓம், ஸ்வீடன்    -   வடக்கின் வெனிஸ்
நியூயார்க்    -   ஆகாயத்தை தொடும் நகரம்
எகிப்து    -   ஐந்து கடல்களின் நாடு
சிங்ப்பூர்    -   கீழ்திசையின் முத்து
பெல்ஜியம்    -   ஜரோப்பாவின் போர்களம்
ஆஸ்திரேலியா    -   தங்க ஆட்டு ரோம நிலம்
டெட்ராயிட்    -   அமெரிக்காவின் மோட்டார் நகரம்
பாப்-ஏல்-மண்டப்    -   அழுகையின் நுழைவாயல்
லாவோஸ்    -   ஆயிரம் யானைகளின் நிலம்
பூடான்    -   இடியேறு இடம்
பாலித்தீவு    -   கீழ்திசையின்  ஆபரணம்
தாமோதர் நதி மே. வங்காளம் இந்தியா    -   வங்கத்தின் துயரம்
பெங்களுரு   -   இந்தியாவின் பூந்தோட்டம்
மும்பை   -   இந்தியாவின் நுழைவாயில்
அமிர்தசரஸ், இந்தியா   -   பொற்கோயில் நகரம்
நீலகிரி குன்றுகள், இந்தியா   -   நீலமலை
கொல்கத்தா   -   அரண்மனை நகரம்
மதுரை, இந்தியா   -   கோயில் நக‌ரம்
கொச்சின், இந்தியா   -   அரபிகடலின் அரசி
ஜெய்ப்பூர், இந்தியா   -   இளஞ்சிகப்பு நகரம்
மதுரை, இந்தியா   -   மல்லிகை நகரம், தூங்கா நகரம்
கேரளா, இந்தியா   -   இந்தியாவின் நறுமணத் தோட்டம்
ஏற்காடு, இந்தியா   -   ஏழைகளின் ஊட்டி
மணிப்பூர், இந்தியா   -   இந்தியாவின்  அணிகலன்
காஷ்மீர்,  இந்தியா   -   இந்தியாவின் சுவிட்சர்லாந்து
செங்கல்பட்டு, இந்தியா   -   ஏரிகள் மாவட்டம்
பஞ்சாப், இந்தியா   -   ஐந்து நதிகளின் நிலம்
தஞ்சாவூர்   -   தமிழகத்தின் நெற்களஞ்சியம்
கோயம்புத்தூர்   -   தென் இந்தியாவின் மான்செஸ்டர்
பாபெல் மண்டப்    -   கன்னித்தீவு
ஆக்ஸ்போர்டு. இங்கிலாந்து   -   கனவுகோபுர நகரம்
ஆஸ்திரேலியா    -   கங்காரு நாடு
பெல்ஜியம்    -   ஐரோப்பாவின் போர்களம்
கொரியா    -   அதிகாலை அமைதி நாடு
அபர்தீன் ஸ்காட்லாந்து    -   கருங்கல் நகரம்
நியூயார்க், அ‌மெரிக்கா    -   மாடக் கட்டிட நகரம்
எகிப்து    -   நைல் ஆற்றின் நன்கொடை
பக்ரைன்    -   முத்துத் தீவு
நியூசிலாந்து    -   கதென்னுலக பிரிட்டன்
அயர்லாந்து    -   மகரத் தீவு
பர்மா    -   பொற்கோபுர நாடு
சான் பிரான்ஸிஸ்க்கோ, அமெரிக்கா    -   பொற்கதவு நகரம்
ஆப்பிரிக்கா    -   இருண்ட கண்டம்
ஸ்காட்லாந்து    -   ரொட்டி நாடு
ரோமாபுரி    -   அழியா நகரம்
ஜிப்ரால்டர்    -   மத்திய தரைக்கடலின் திறவுக்கோல்
ஸான்சிபார்    -   கிராம்புத் தீவு
பாலஸ்தீனம்    -   புனித நகரம்
பிராட்வே, நியூயார்க்    -   பெரிய ‌வெள்ளை வழி
லாசா, திபெத்    -   தடைச் செய்யப்பட்ட நகரம்
சிகாகோ, அமெரிக்கா    -   புயலடிக்கும் நகரம்
ஜப்பான்    -   சூரியன் உதிக்கும் நாடு
டிரிஸ்டன் டி நியுவா    -   தனிமைத்தீவு
ஸ்விட்சர்லாந்து    -   ஜரோப்பாவின் விளையாட்டு அரங்கம்.

12/15/2010

வினாடிவினா .., பொது அறிவு (VAO, TNPSC,RAILWAY EXAM TIPS)

VAO, TNPSC,RAILWAY EXAM TIPS
வினாடிவினா .., பொது அறிவு


  •  இந்தியாவின் முதல் பத்திரிக்கை
1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட்

  • இந்தியாவின் மிக பெரிய கட்டிடம்
                             மத்திய செயலக கட்டிடம் (12 கி.மி நடைபாதை, 1000 அறைகள்)
  • இந்தியாவின் மிக பெரிய சிலை
133 அடி உயர திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரி
  • இந்தியாவின் முதல் தொலைகாட்சி ஒளிப்பரப்பு
1965, ஆகஸ்ட் 15-ல் ஆரம்பிக்கப்பட்டது.
  • இந்தியாவின் மிக பெரிய ஏரி
வூலர் ஏரி, ஜம்பு-காஷ்மீர் (16 கி்.மி. நீளம்- 9 கி்மி் அகலம்)
  • இந்தியாவின் மிக பெரிய கடற்கரை
    மெரினா கடற்கரை,13 கி.மி. சென்னை
  • இந்தியாவின் மிக பெரிய ‌கொடிமரம்
    சென்னை ஜார்ஜ் கோட்டை கொடிமரம் (45.7 மீ - 150 அடி)

  • இந்தியாவின் மிக பெரிய தேசிய பூங்கா
    பெட்லா தேசிய பூங்கா, பெட்லா, பீகார். (1000 சகிமி)

  •  இந்தியாவின் மிக நீளமான ரயில்பாதை
    சோன் பாலம், பீகார் (10052 அடி)  
  • இந்தியாவின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம்
    கராக்பூர். மேற்கு வங்காளம்
  • இந்தியாவின் மிக நீளமான சாலை பாலம்
    கங்கை பாலம் (5.7 கி.மீ) 

  • இந்தியாவின் மிக பெரிய தொலைநோக்கி
    வைணு பரப்பு தொலைநோக்கி காவனூர் தமிழ்நாடு
     
  • இந்தியாவின் முதல் அணு சோதனை
    1974, மே -18, பொக்ரான், ராஜஸ்தான்
  • இந்தியாவின் அதிக கல்வியறிவு கொண்ட மாநிலம்
    கேரளா
  • இந்தியாவின் மிக பெரிய அணு மின் நிலையம்
    கல்பாக்கம் அணு மின் நிலையம் (470 மெகா.வாட்)
  • இந்தியாவின் முதல் தொலைபேசி அலுவலகம்
    1881 கொல்கத்தா
  • இந்தியாவின் மிக நீண்ட நாள்
    ஜூன் 21
  • இந்தியாவின் மிக குறுகிய நாள்                                                                                                                                     டிசம்பர் 22

  •  இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர்                                                                                               டாக்டர் ராஜேந்திர பிரசாத்


  • சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்
மௌண்ட்பேட்டன் பிரபு
  • இந்தியாவின் முதல் தரைப்படை தளபதி
ஜெனரல் கே.எம்.கரியப்பா (1949-1953)
  • சுதந்திர இந்தியாவின் முதல் பீல்டு மார்ஷல்
எஸ்.எச்.எப்.ஜே. மானக்ஷ
  • இந்தியாவின் முதல் விமானப்படை தளபதி
ஏர் மார்ஷல் சர்தாமஸ் W. எல்ஷோர்
  • ராஜினாமா செய்த இந்தியாவின் முதல் பிரதமர்
மொரார்ஜி தேசாய்
  • இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்றவர்
‌ரவீந்திரநாத் தாகூர் (1913 இலக்கியம்)
  • இந்தியா தேசிய காங்கிரசின் முதல் தலைவர்
W.C. பானர்ஜி
  • இந்தியாவின் முதல் வைஸ்ராய்
கானிங் பிரபு
  • இந்தியாவின் முதல் ‌பெண் மத்திய அமைச்சர்
ராஜ்குமார் அம்ரித்கௌர்
  • இந்தியாவின் முதல் திரைப்படம்
ஆலம் ஆரா (1931)
  • இந்தியாவின் முதல் சோதனை குழாய் குழந்தையின் பெயர்
இந்திரா
  • மச்சாசே விருது பெற்ற முதல் இந்தியர்
ஆச்சார்ய வினோ பாபாவே 
  • இந்தியாவின் முதல் IAS  அதிகாரி
சத்யேந்திரநாத் தாகூர்.
  • இந்தியாவின் முதல் பாராளுமன்ற சபாநாயகர்
ஜி.வி.மாவ்லங்கர் (1952-1956)
  • இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல்
சி.இராஜகோபாலாச்சாரி
  • இந்தியாவின் முதல் விண்வெளி வீரர்
ஸ்குவாட்ரன் லீடர், ராகேஷ் சர்மா
  • இந்தியாவின் முதல் செயற்கைகோள்
ஆர்யப்பட்டா (1975 ஏப்லர் 19)
  • இந்தியாவின் முதல் தொலைபேசி அலுவலகம்
கொல்கத்தா 1881
  • “தென்பாண்டி சிங்கம்” என்ற நூலை எ‌ழுதியவர்
கலைஞர் மு. கருணாநிதி
  • இந்திய  தேசிய காங்கிரசின் முதல் தலைவர்
W.C பானர்ஜி
  • ஆக்சிஜன் இல்லாமல் எவரஸ்ட் சிகரம் ஏறிய முதல் மனிதர்
திதோர்ஜி
  • உலகிலேயே தலைநகரமல்லாத மிகப்‌பெரிய நகரம்
ஷாங்காய்
  • அன்னை இந்திராகாந்தி பிறந்த இடம்
அலகாபாத்
  • சென்னை மெரீனா கடற்கரையின் நீளம்
13 கீலோ மீட்டர்
  • தமி‌ழகத்தின் முதல் முதலமைச்சர்
O.P. ராமசாமி செட்டியார்
  • “வாதாபி கொண்டான் என்று அழைக்கப்படுபவர்
நரசிம்ம வர்மன்
  • “தி பிக் ஆப்பிள் நகரம்” என்று அழைக்கப்படுவது
நியூயார்க்
  • ஆரிய சமாஜத்தை தோற்று வித்தவர்
தயானந்த சரஸ்வதி
  • உஇந்தியாவின் கடற்ரையின் நீளம்
7516 கி.மி.
  • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட  முதல் படம்
ஆலம் ஆரா
  • ”ஏசு காவியம்” என்ற நூலின் ஆசிரியர்
கண்ணதாசன்
  • “இந்திய நெப்போலியன்” என்று அழைக்கப்படுபவர்
சமுத்திரகுப்தர்
  • வேதங்களில் மிகவும் பழைமையான வேதம்
ரிக் வேதம்
  • பிசிந்து சமவெளி மக்கள் அறியாத உலோகம்
இரும்பு
  • “புதிய உலகம்” என்று ‌அழைக்கப்படும் நாடு
அமெரிக்கா
  • “ஆண்டனி-கிளியோபாட்ரா என்ற நூலை எழுதியவர்
ஷேக்ஸ்பியர்
  • நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு
நார்வே
  • கனடா நாட்டின் தேசியப்பறவை
வாத்து
  • ஐங்கடல் என்று அழைக்கப்படும் இடம்
தென்மேற்கு ஆசியா
  • அடிமை வம்சத்தின் முதல் மன்னர்
குத்புதீன்
  • “தீர்த்தகிரி” என்று அழைக்கப்படுபவர்
தீரன் சின்னமலை
  • உத்திரவேதம் என்று அழைக்கப்படுவது
திருக்குறள்
  • காந்தி சமாதி அமைந்துள்ள இடம்
ராஜ்கோட்
  • மிக விரைவில் ஆவியாகக்கூடிய திரவம்
ஆல்ககால்
  • “கர்ம வீரர்”  என்று அழைக்கப்படுவார்
காமராஜர்
  • இந்தியாவின் கடைசி வைசிராய்
மௌன்ட்பெட்டன் பிரபு
  • “விமானம் தயாரிக்க அதிகம் தேவைப்படும் உலோகம்
கோபால்ட்
  • “இந்தியாவின் ஜந்தாண்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்
நேரு
  • “பிப்ரவரி 29” -ல் பிறந்த இந்திய பிரதமர்
மொராய்ஜி
  • மகாமகம் நடைபெறும் இடம்
கும்பகோணம்
  • மின்சார பல்பில் உள்ள மின்இழை
டங்ஸ்டன்
  • விஜய நகர சாம்ராஜ்யத்தை நிறுவியவர்
அரிகரர் புக்கர்
  • “தூங்கும் போலிஸ் மேன்” என்பது என்ன
வேகத்தடை
  • நான்கு தீவுகளால் உறுவான நாடு
ஜப்பான்
  • ஆயிரம் ஏரிகள் கொண்ட நாடு
பின்லாந்து
  • “பும்புகார்” துறைமுகத்தை உறுவாக்கியவர்
கரிகாலன்


  • புவிஈர்ப்பு விசையை கண்டுப்பிடித்தவர்
ஐசக் நியூட்டன்
  • “ஒன்டே கிரிக்கெட்” என்ற நூலை எழுதியவர்
கபில்தேவ்
  • இந்தியாவின் மிகத் தொன்மையான நடனம் எது?
பரதநாட்டியம்
  • ஒளி வருடம் என்பது எதன் அலகு
அண்டவெளி தூரம்
 
  • இந்திய தேசிய கீதத்தை எவ்வளவு நேரத்திற்குள் பாடிமுடிக்க ‌வேண்டும்?
52 வினாடிகள்
  • புவியை சுற்றி வருபவருக்கு வானம் எந்த நிறத்தில் தோன்றும்
கருப்பு
  • சூரிய ஒளி நம்மை வந்தடைய எவ்வளவு நேரம் ஆகிறது.
8 நிமிடங்கள்
  • உலகின் பிரதான மூன்று உணவுப் பொருட்கள் யாவை
கோதுமை, அரிசி, சோளம்.
  • தமிழில் வெளியான முதல் நாவலின் பெயர்
பிரதாப முதலியார் சரித்திரம்
  • மானசரோவர் ஏரி எங்குள்ளது.
சீனா


  • மேற்கத்திய கல்வி முறையை இந்தியாவில் கொண்டு வந்தவர்
ராஜாராம் மோகன்ராய் 


  • அ‌மெரிக்காவில் நீக்ரோக்கள் சமஉரிமை பெற அகிம்சை வழியில் போராடி வெற்றிக் கண்டவர்
மார்டின் லூதர் கிங்
  • டில்லி மீது படையெடுத்து கோஹினூர் வைரத்தை கைப்பற்றி சென்ற அரசன்
நாதீர் ஷா
  • அதிகபெஞ்ச் கொண்ட இந்திய உயர்நீதிமன்றம்
கவுகாத்தி உயர்நீதிமன்றம்
  • உயர் ஆற்றல் கொண்ட வண்ணம்
மஞ்சள்
  • ஒலியை பதிவு செய்ய மற்றும் மீட்க பயன்படுவது
சோனா மீட்டர்
  • கடல் ஆழத்தை கண்டறிய உதவும் கருவி
சோனார்
  • ஒளி எந்த வடிவில் வரவுகிறது
 குறுக்கலை
  • ஹைட்ரஜன் குண்டின் அடிப்படைத் தத்துவம்
அணுக்கரு இணைவு
  • 35 ஆயிரம் தேயிலை தோட்டங்கள் கொண்ட நாடு
இந்தியா
  • உப்பு ஏரிகள் அதிகம் ‌‌‌‌கொண்ட இந்திய மாநிலம்
குஜராத்
  • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் பீரங்கி
விஜயந்தா