இன்றைய பொன்மொழிகள்:
- உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.
- பெருமைக்காரன் கடவுளை இழப்பான், பொறாமைக்காரன் நண்பனை இழப்பான், கோபக்காரன் தன்னையே இழப்பான்.
- நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள்.
- வேறு எதுவும் கிடைக்காவிட்டாலும் நீ எங்கிருந்தாலும் உன் நண்பன் உன்னை அடைவான்.
- ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற்கதவுகள்.
- சிறந்த நண்பர்களாக நிறைய நாட்கள் பிடிக்கும்.
- உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன்.
- ஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாய். சில சமயங்களில் அவர்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
- நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். ஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர்.
- புதியவர்கள்தான் நண்பர்களாகின்றனர். ஆனால் அந்த காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.
இந்திய அறிவியல் கழகம்
இந்திய அறிவியல் நிறுவனம் இந்தியாவின் பெங்களூர் நகரத்தில் உள்ள நாட்டின் மிகத் தரம் வாய்ந்த முதுநிலைக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாகும். இது 1909-ல் தொடங்கப்பட்டது. இது சுவாமி விவேகானந்தரின் ஆலோசனைப் படி ஜாம்ஷெட்ஜி டாடாவால் தொடங்கப்பட்டது.
நிர்வாகம்
1909-ல் மோரிஸ் டிராவர்ஸ் என்பவர் இதன் முதல் இயக்குனர் ஆனார். முதல் இந்திய இயக்குனர் சர் சி. வி. இராமன் ஆவார். இந்நிறுவனத்தின் தற்போதைய இயக்குனர் பத்மநாபன் பலராம்ஆவார்.
கல்விப் பிரிவுகள்
உயிரியல் பிரிவு
- உயிர் வேதியியல்
- சூழல் அறிவியல் மையம்
- நுண்ணுயிரியல் மற்றும் செல் உயிரியல்
- மூலக்கூற்று உயிர் இயற்பியல்
- மூலக்கூறு மீளுருவாக்கம், மேம்பாடு, மற்றும் மரபியல்.
வேதியியல் பிரிவு
- கனிம மற்றும் இயல் வேதியியல்
- பொருட்கள் ஆய்வு மையம்
- என்.எம்.ஆர் (NMR) ஆய்வு மையம்
- கரிம வேதியியல்
- திண்ம நிலை மற்றும் கட்டமைப்பு வேதியியல்.
மின்னியல் பிரிவு
- மின்னணு வடிவமைப்பு மற்றும் நுட்ப மையம்
- கணினி அறிவியல் மற்றும் தானியங்கியல்
- மின் தொடர்புப் பொறியியல்
- மின் பொறியியல்
கணிதம் மற்றும் இயல் அறிவியல் பிரிவு
- வானியல் மற்றும் வான் இயற்பியல்
- சமகாலவியல் கல்வி மையம்
- தாழ்வெப்பவியல் நுட்ப மையம்
- உயராற்றல் இயற்பியல் மையம்
- கருவியியல்
- கணிதவியல்
- இயற்பியல்.
இயங்கியல் பிரிவு
- வான்வெளிப் பொறியியல்
- வளிமண்டலம் மற்றும் கடல்சார் அறிவியல்
- விளைபொருள் வடிவமைப்பு மற்றும் ஆக்க மையம்
- புவி அறிவியல் மையம்
- Center for Sustainable technology
- வேதிப் பொறியியல்
- குடிசார் பொறியியல்
- பருவமாற்ற ஆய்வு மையம்
- மேலாண்மைக் கல்வி மையம்
- பொருட்கள் பொறியியல்
- இயங்கியற் பொறியியல்.
இயக்குநர்கள்
- மோரிஸ் டிராவர்ஸ், FRS, 1909–1914
- சர் அல்பிரேட் கிப்ஸ் பௌர்னே , FRS, 1915–1921
- சர் மார்ட்டின் அன்சுலொவ் போர்ஷ்டேர், FRS, 1922–1933
- சர் சந்திரசேகர வேங்கடராமன் , FRS, 1933–1937
- சர் ஜே. சி. கோஷ் , 1939–1948
- எம். எஸ். தச்கேர் , 1949–1955
- எஸ். பாகவந்தம் , 1957–1962
- சத்தீஷ் தவன் , 1962–1981
- டி. கே. பானர்ஜீ , 1971–1972
- எஸ். ராமசேஷன், 1981–1984
- சி. என். ஆர். ராவ், FRS, 1984–1994
- ஜி. பத்மநாபன் , 1994–1998
- கோவர்தன் மேத்தா , 1998–2005
- பத்மநாபன் பலராம், 2005– இன்று வரை.
நிகழ்வுகள்
- 1778 - ஹவாயன் தீவுகளில் அமைந்துள்ள மாவுய் தீவில் இறங்கிய முதல் ஐரோப்பியன் கப்டன் ஜேம்ஸ் குக்.
- 1842 - நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
- 1922 - எகிப்திய மன்னன் துட்டன்காமுன் என்பவனின் கல்லறைக்குள் ஹவார்ட் கார்ட்டர் மற்றும் கார்னாவன் பிரபு ஆகியோர் சென்றனர். 3000 ஆண்டுகளுக்குப் பின்னர் அதற்குள் சென்ற முதல் மனிதர்கள் இவர்களே.
- 1941 - பிரான்சிடமிருந்து லெபனான் ஒருதலைப் பட்சமாக விடுதலையைப் பிரகடனப் படுத்தியது.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: ஆறு சப்பானிய விமானங்கள் தொலைதொடர்புகள் அற்ற நிலையில் யப்பானின் இத்தோகபு குடாவிலிருந்து பேர்ள் துறைமுகத்தை தாக்கியழிக்கப் புறப்பட்டன.
- 1942 - நோர்வேயைச் 572 சேர்ந்த யூதர்கள் ஜேர்மனியர்களினால் போலந்தின் ஓஸ்விட்ச் நகரில் உள்ள யூத முகாமுக்கு நாடுகடத்தப்பட்டனர். இவர்களில் 25 பேரே தப்பினர்.
- 1949 - இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
- 1950 - மக்கள் சீனக் குடியரசின் படைகள் வட கொரியாவினுள் நுழைந்து தென் கொரியா மற்றும் அமெரிக்கப் படைகள் மீது பெரும் தாக்குதலைத் தொடுத்தனர்.
- 1957 - சாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளைத் தீயிடும் போராட்டத்தை தந்தை பெரியார் ஆரம்பித்து வைத்தார்.
- 1965 - சகாரா பாலைவனத்தில் பிரான்ஸ் ஆஸ்டெரிக்ஸ்-1 என்ற தனது முதலாவது செய் மதியை விண்ணுக்கு அனுப்பியது.
- 1983 - லண்டன் ஹீத்ரோ விமானநிலைய பொதிகள் பாதுகாப்பு அறையில் இருந்து £26 மில்லியன் பெறுமதியான 6,800 தங்கப் பாளங்கள் களவாடப்பட்டன.
- 2001 - நேபாளத்தில் மன்னர் கயனேந்திரா அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்தார்.
- 2002 - இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் தனிநாடு கோரும் அமைப்புக்களின் மீதான தடை நீக்கப்பட்டது.
பிறப்புக்கள்
- 1936 - லலித் அத்துலத்முதலி, இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் (இ. 1993)
- 1939 - அப்துல்லா அகமது படாவி, மலேசியப் பிரதமர்
- 1948 - எலிசபெத் பிளாக்பர்ன், நோபல் பரிசு பெற்றவர்
- 1948 - வி. கே. பஞ்சமூர்த்தி, ஈழத்தின் நாதசுவரக் கலைஞர்
- 1954 - வேலுப்பிள்ளை பிரபாகரன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் (இ.2009)
- 1939 - டீனா டர்னர், அமெரிக்க ராக் அன் ரோல் இசைக்கலைஞர்.
இறப்புகள்
- 1930 - சேர் பொன்னம்பலம் இராமநாதன், இலங்கையின் தேசியத் தலைவர் (பி. 1851)
- 2006 - ஜி. வரலட்சுமி, தமிழ்த் திரைப்பட நடிகை.
ஆள் 1: டாக்டர் முகத்துல மீசை வளர மாட்டேங்குது.
டாக்டர்: ஒரு பொண்ண லவ் பண்ணி பாரு,மீசை என்ன தாடி கூட வளரும்.
"அப்பா...நான் படிக்கப் போகலை," "ஏன்டா?"
"கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்னு சார் சொல்றார். அப்புறம் நான் எதுக்குப் படிக்கணும்...?" "ஆ...!"
"கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்னு சார் சொல்றார். அப்புறம் நான் எதுக்குப் படிக்கணும்...?" "ஆ...!"
பெற்றோர் : இந்த காலேஜ் நல்ல காலேஜா?
வாட்ச்மேன் : ரொம்ப நல்ல காலேஜ். இங்க படிச்சா வேலை ரொம்ப ஈசியா கிடைக்கும்.
பெற்றோர் : அப்படியா!!
வாட்ச்மேன் : ஆமா. நானும் இந்த காலேஜ்ல தான் எஞ்சினியரிங் படிச்சேன். படிச்ச முடிச்ச உடனே இங்கேயே இந்த வேலை கிடைச்சிடுச்சு.
0 comments:
Post a Comment
அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"