Tamilus

The best Tamil Aggregator | Tamilus

11/24/2010

கேள்வி / பதில்

 கேள்வி / பதில்

1. உலகில் எங்கும் காண இயலாத தாவர விலங்கினங்கள் எந்த
    நாட்டில் உள்ளது ?
2. அயர்லாந்து நாட்டின் தலைநகரம் எது ?
3. உலகிலே பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது ?
4. உலகிலேயே மிக அகலமான இரண்டாவது பெரிய கடற்கரை
    எங்குள்ளது ?
5. அந்தமான் தீவுகளில் உள்ள குன்றுகளில் மிகப்பெரிய
    குன்று எது ?
6. தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் யார் ?
7. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் எப்போது நிறுவப்பட்டது?
8. இந்தியாவில் PIN Code முறை எப்போது தொடங்கப்பட்டது?
9. தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய வனவிலங்கு புகலிடம்
    எங்குள்ளது ?
10. கொத்தடிமை தொழிலார் ஒழிப்புச் சட்டம் இந்தியாவில்
      எப்போது கொண்டுவரப்பட்டது ?
11. வங்காளவிரிகுடாவில் கலக்காத நதி எது ?
12. குளிர்காலத்தில் அதிக மழைபெரும் மாநிலம் எது ?
13. தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும்
      மாவட்டம் எது ?
14. ஐந்து நதிகள் பாயும் மாநிலம் எது ?
15. ஜோக் நீர்வீழ்ச்சி எங்குள்ளது ?
16.  நாயை விட பல மடங்கு மோப்ப சக்தி உடைய உயிரினம் எது?
17. மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் இடம் எது ?
18. சில்கா ஏரி காணப்படும் இடம் எது ?
19. மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ள இடம் எது ?
20. எலிபெண்டா குகைகள் எங்குள்ளன ?
பதில்கள்:
1.ஆஸ்திரேலியா, 2.டப்ளின்,3.இந்தியா,
4.சென்னை மெரினா கடற்கரை,5.ஹரியட், 6.ஜானகி
இராமச்சந்திரன், 7.1971 ஆம் ஆண்டு,8.1972 ஆம் ஆண்டு,
9.முதுமலை,10. 1976 ஆம் ஆண்டு
11.நர்மதை, 12.தமிழ்நாடு,13.கோயம்புத்தூர்,14.பஞ்சாப்,
15.கர்நாடகம், 16.விலாங்கு மீன், 17.உதகமண்டலம்,
18.மகாநதிச் சமவெளி,19.சென்னை,20.மும்பை

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"