VAO EXAM TIPS - TAMIL
கலம்பகம்
தமிழ் இலக்கியத்தில், கலம்பகம் என்பது பலவகைச் செய்யுள்களால் ஆகியதும், பல பொருள்கள் பற்றியதுமான பிரபந்தவகை இலக்கியங்களில் ஒன்றாகும். கலம்பகம் என்பது கலப்பு, அகம் என்னும் இரு சொற்களின் இணைப்பால் உருவானது. பலவகைப் பாடல்கள் ஒருங்கிணைந்து உருவாவதால் இப் பிரபந்தவகைக்கு இப் பெயர் ஏற்பட்டது.
ஒருபோகும், வெண்பாவும், முதல் கலியுறுப்பாக முற்கூறப்பெற்றுப் புயவகுப்பு, மதங்கம், அம்மானை, காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் என்னும் பதினெட்டுப் பொருட் கூற்று உறுப்புக்களும் இயைய, மடக்கு, மருட்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரிய விருத்தம், கலி விருத்தம், கலித்தாழிசை, வஞ்சி விருத்தம், வஞ்சித்துறை, வெண்துறை என்னும் இவற்றால், இடையே வெண்பா கலித்துறை விரவ அந்தாதித் தொடையால் பாடுவது கலம்பகம்.
கலம்பகத்திலே பாடப்படுபவரின் சமூகத் தகுதிக்கு ஏற்பப் பாடல்களின் எண்ணிக்கை அமையவேண்டும் எனத் தமிழ் யாப்பியல் நூல்கள் கூறுகின்றன. இது அதிகபட்சம் 100 பாடல்களிலிருந்து 50 பாடல்கள் வரை இருக்கலாம். எனினும் 100 க்கு அதிகமாகவும், 50 க்குக் குறைவாகவும் உள்ள பாடல்களைக் கொண்ட கலம்பகங்களும் உள்ளன.
கலம்பக இலக்கியங்கள் சில
- நந்திக் கலம்பகம்
- காசிக் கலம்பகம்
- மதுரைக் கலம்பகம்
- வீரகேரளம்புதூர் நவநீதகிருட்டிணன் கலம்பகம்
- திருக்கண்ணபுரக் கலம்பகம்
- தில்லைக் கலம்பகம்
- மறைசைக் கலம்பகம்
- அருணைக் கலம்பகம்
- கதிர்காமக் கலம்பகம்
- கச்சிக் கலம்பகம்
- வெங்கைக் கலம்பகம்
- புள்ளிருக்கு வேளூர்க் கலம்பகம்
- திருவாமாத்தூர்க் கலம்பகம்
0 comments:
Post a Comment
அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"