அறியாமை இனிது
அனைத்தும் அறிந்த
அறிவை அறிவெனத்
தேரா மாந்தர் முன்
அறியாமை இனிது...!
பேசாமை இனிது
பேசியும்
சாமான்யன் பேச்சு என்பதால்
பேதம் காட்டும்
மனிதர்கள் முன்னே
பேசாமை இனிது...!
செல்லாமை இனிது
சென்றால்
பேச்சால், செயலால்
காமத்தை சீண்டிப் பார்க்கும்
பித்தர் முன்னே
வேலைக்குக் கூட
செல்லாமை இனிது ...!
எழுதாமை இனிது
எழுத்தினால்
சாதிக்க பல இருந்தும்
சாமான்யன் எழுத்து
என்பதினால் 'பூ' என ஒதுக்கும்
வல்லோர் முன்னே
எழுதாமை இனிது...!
வணக்கம்
ReplyDeleteகவிதையின் வரிகள் அழகு வாழ்த்துக்கள்
படமும் அழகு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஆம். உண்மைதான்
ReplyDeleteஇனிது இனித்தது
ReplyDeleteபகிர்வுக்கு வாழ்த்துக்கள்
tha.ma 4
ReplyDeleteநாலு ஆமைகளும் மனதை கவர்ந்தன !
ReplyDeleteத.ம 5
வரிகள் நன்று!
ReplyDeleteகவிதை இனிது.
ReplyDeleteநல்ல கவிதை சிந்திக்கவும் செய்கின்றது.
ReplyDeleteதங்கள் கவிதையும் இனிது!
ReplyDelete