கால் வலிக்க நின்னேன்
ரேசன் கடையில,
இன்னைக்கு 'ஸ்டாக்' இல்லை,
நாளைக்கு 'வா' ன்னு
சொல்லிட்டான்...!
பசிக்குது 'ஆத்தா'ன்னு
அழுவுற உனக்கு
என்னத்த போடுவேன்?
அதை யோசிச்சு,
எடுத்து வந்தேன்
மேலத்தெரு பக்கமா
வாரப்ப,
பொணத்துக்கு வெச்சிருந்த
வாய்க்கரிசிய...!
அந்த
அரிசிய வெச்சு
செஞ்ச கஞ்சிக்கு
எதிர்வூட்ல வெளைஞ்ச
பச்ச மொளகாய
வெஞ்சனமா வச்சுக்
கொடுத்தேன்...!
நான் பெத்த ராசா
ஒத்த வாய தின்னுபுட்டு
உப்பில்லன்னு
சொன்னியேடா
கண்ணீரைக்
கரைச்சு குடுத்தேன்,
உப்பு போதுமா ராசா ...!
கவிதை மனதைத் தொட்டது.....
ReplyDeleteநன்றி வெங்கட் சார்..
Deleteகலங்க வைத்தது...
ReplyDeleteஒரு கவிஞனின் வெற்றியே அதுதான்..
Deleteநெஞ்சைத் தொட்டுக் கலக்கிய அருமையான கவிதை!
ReplyDeleteமனதை பாரமாக்கிவிட்டது உங்கள் படைப்பு
ReplyDeleteமிகவும் நன்றி..
Deleteபடமும் கவிதையும்
ReplyDeleteமனம் கலங்க்கச் செய்து போனது
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
கண்டிப்பாக தொடரும்...
Deletetha.ma 4
ReplyDeleteநன்றி...
Deleteகலங்க வைக்கும் கலக்கல் கவிதை !
ReplyDeleteத.ம 5
நன்றி ஜி
Deleteவேதனை
ReplyDeleteTyped with Panini Keypad
கருத்துக்கு நன்றி ...
Deleteவலிமை மிகுந்த வலி தரும் வரிகள்! அருமை!
ReplyDeletethanks..
Deleteபடமும், கவிதையும் கலங்க வைத்து விட்டது.
ReplyDeleteநன்றி ..
Deleteநான் பெத்த ராசா
ReplyDeleteஒத்த வாய தின்னுபுட்டு
உப்பில்லன்னு
சொன்னியேடா
கண்ணீரைக்
கரைச்சு குடுத்தேன்,
உப்பு போதுமா ராசா ...! //
வயிற்றை கலக்கிய கவிதை! ஒப்பற்றது!