Tamilus

The best Tamil Aggregator | Tamilus

10/24/2013

காந்தி ஏன் அரசியலுக்கு வரவில்லை- இது காந்தி கணக்கு

சுதந்திரம் பெற்றதும், காங்கிரஸ் கட்சியைக் கலைக்கச் சொன்னார் காந்தி. அதற்கான அர்த்தம், இப்போது தான் புரிகிறது. காங்கிரஸ் கட்சியினரும், மற்ற கட்சியினரும், ஆங்கிலேயர்களை விட, நம்மை அதிகமாகவே, சுரண்டிச் சேர்த்து விட்டனர். 

காந்தி, சுயநலமில்லாத சுத்தமானவர். தன் மகன்கள் யாரையும், அரசியலில் வாரிசாக்காத மகாத்மா அவர். நேருவுக்குப் பின், அவரது குடும்ப வாரிசுகள் தான், பெரும்பாலும் ஆட்சி செய்து வருகின்றனர். 

மாநில முதல்வர்களும், இந்த வாரிசு முறையைத் தான் பின்பற்றி வருகின்றனர். காந்தியின் மகன்களில், ஒருவர் குடிகாரராகவும், கடன்காரராகவும் இருந்தார். அவருக்கு கடன் கொடுத்தவர்கள், இதுகுறித்து, காந்தியிடம் கேட்டனர். அதற்கு அவர், ' என் மகன் கடன் வாங்கியதற்கு, நான் பொறுப்பல்ல. அவருக்கும், எனக்கும் சம்பந்தமில்லை' என்று கூறியதுடன், பத்திரிகையிலும் அதை வெளியிட்டதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. 

காந்தி, சபர்மதி ஆஸ்ரமத்தில் இருந்த போது, ஒரு பைசா செலவானாலும், அதை, கணக்கில் எழுதி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதைத் தான், 'காந்தி கணக்கு' என்றனர்.

அதுவே, பிற்காலத்தில், கடன் வாங்கி, திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்ற எண்ணுபவர்கள், 'காந்திக் கணக்கில்' எழுதிக் கொள்ளச் சொல்லும் வழக்கமாக மாறி விட்டது. எல்லாம் காலத்தின் கொடுமை!

இந்தக் கால மாணவர்கள், இளைஞர்கள் காந்தியைப் பற்றி, அறியாதவர்களாக இருப்பது வருந்தத்தக்கது. இவர்களைப் பொறுத்தவரை, 'காந்தி ஜெயந்தி' என்றால், அது, ஞாயிறன்று வந்து விடக் கூடாது. 'லீவு' போய்விடமே... அந்த அளவுக்கு தான், காந்தியை தெரிந்து வைத்திருக்கின்றனர். 

அன்று, வௌ்ளையனிடமிருந்து, நம்மை, காந்தி காப்பாற்றியது போல, இன்று, நம் அரசியல்வாதிகளிடமிருந்து நம்மைக் காப்பாற்ற, எந்த காந்தி வரப் போகிறாரோ...!


13 comments:

  1. உண்மைகள் : எல்லாம் காலத்தின் கொடுமை...!

    ReplyDelete
  2. எந்த காந்தியும் வரவேண்டாம் ,இருக்கிற காந்திகள் போனாலே போதும்!
    த.ம 3

    ReplyDelete
  3. விடிவுகாலம் பிறக்குமா!?

    ReplyDelete
  4. காந்தியை தேசப்பிதா என்று வேண்டுமானால் நாம் அனைவரும் கொண்டாடலாம் ஆனால் தன்னுடைய பிள்ளைகளுக்கே அவர் ஒரு நல்ல தந்தையாக இருந்திருக்கவில்லை. ஆனால் நேரு அப்படியல்ல தன்னுடைய மகளை அன்போடும் பாசத்தோடும் வளர்த்தவர். இந்திரா காந்தியும் ராஜீவைப் போல எடுத்தவுடனே பதவியில் அமரவில்லை. பல ஆண்டுகள் தந்தையுடனேயே இருந்து அரசியல் நுணுக்களையும் நிர்வாக நுணுக்கங்களையும் கற்று அறிந்தபிறகே அரசியிலில் நுழைந்தவர். காங்கிரஸ் மட்டுமல்ல வேறெந்த கட்சி ஆட்சியைப் பிடித்திருந்தாலும் இப்படித்தான் நடந்திருக்கும். சுதந்திரம் கிடைத்து நூறு ஆண்டுகள் கூட பூர்த்தியடையாத ஒரு நாட்டை, நாட்டின் தொகையில் அறுபது விழுக்காடுக்கும் மேல் அடிப்படை கல்வித் தகுதியும் இல்லாத மக்களைக் கொண்ட ஒரு நாட்டை, நாட்டின் சொத்துக்களை இரு நூறு ஆண்டுகளுக்கும் மேல் கொள்ளையடித்து சென்றிருந்த நிலையில் காலியான கஜானாவுடன் சுதந்திரம் பெற்ற ஒரு நாட்டை எந்த ஒரு கட்சியாலும் இந்த அளவுக்கு பொருளாதாரத்திலும் விஞ்ஞானத்திலும் முன்னேற்றியிருக்க முடியாது. நம் நாட்டைப் போன்று இத்தனை மக்கள் தொகையையும் மொழியாலும் கலாச்சாரத்தாலும் வேறுபட்டு நிற்கும் மக்களையும் கொண்ட எந்த ஒரு நாடும் இத்தனை குறுகிய காலத்தில் அதிவேகமாக வளரும் நாடுகளில் ஒன்று எனக் கருதப்படும் அளவுக்கு முன்னேறியிருக்கவில்லை என்பது உறுதி. காந்தி மட்டுமே தனி ஆளாக நின்று சுதந்திரம் பெற்று தந்துவிடவில்லை என்பதும் உண்மை. காந்திக்கும் நேரு குடும்பத்திற்கும் பொருளாதார ரீதியில் கூட பெருமளவு வித்தியாசம் இருந்தது. அத்தனை வசதி படைத்து குடும்பத்திலிருந்து வந்தும் நேரும் நாட்டு சுதந்திரத்திற்காக பல தியாகங்களை செய்த குடும்பம் நேருவின் குடும்பம். இன்று சரித்திரத்தில் மகாத்மாவுக்கு இணையாக கருதப்பட வேண்டியவர் நேரு.

    ReplyDelete
    Replies
    1. விரிவான அலசலுக்கு நன்றிகள்..

      Delete
  5. காந்தியை பற்றிய தகவல்கள் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  6. காந்தி மகான்.சில ஜாதிக்காரர்களுக்கு கொடுங்கோலன் ஹிட்லர் மற்றும் அவனுக்கு ஆதரவு தந்த ஜப்பானிடம் படை உதவி கேட்ட சுபாஷ்தான் மகான்.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"