நாமெல்லாம் வருடத்தில் ஒருநாள் தான்,விஜயதசமி கொண்டாடுகிறோம். கும்பகோணம் அருகிலுள்ள இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோயிலில் தினமும் விஜயதசமி தான்! ஏனெனில், இங்கே குழந்தைகள் சிறந்த கல்வி பெறதினமும் பூஜை செய்து வரலாம்.
தல வரலாறு: இப்பகுதியை ஆட்சி செய்த ஒரு அரசர் தனது கணக்குப்பிள்ளையை கோயில் கணக்குகளை எடுத்துவருமாறு பணித்தார். அந்நேரத்தில், அவர் கணக்கை சரிவர முடிக்கவில்லை. எப்படி கணக்கை முடித்துக் கொடுப்பது என்று தெரியாமல் விழித்தபடியே, இன்னம்பூரில் இருக்கும் சிவபெருமானை வழிபட்டு வீட்டுக்குச் சென்றார். மறுநாள் காலையில் அரசர் கணக்குப்பிள்ளையை அரண்மனைக்கு அழைத்தார். இதுவரை பார்த்த கோயில் கணக்குகளிலேயே நீங்கள் சமர்ப்பித்த கணக்குதான் மிகச் சரியாக இருந்தது என்று சொன்னார் அரசர்.
கணக்குப்பிள்ளை கணக்குப் பேரேட்டை வாங்கிப் பார்த்தார். பேரேட்டில் எழுதி இருந்த எழுத்துக்கள் யாவும் முத்து முத்தாக இருந்தன. சிவபெருமானே தன்னைப் போல அரசரிடம் வந்து கணக்கை காட்டிய உண்மையை உணர்ந்தார் கணக்கர்.
இந்த உண்மையை அரசரிடம் தெரிவித்தார். அன்று முதல், கணக்கை எழுதிய சிவன் 'எழுத்தறிநாதர்' என்று பெயர் பெற்றார். நாக்கில் எழுதுதல்: ஆரம்ப பள்ளிகளுக்கு செல்ல இருக்கும் மாணவர்களுக்கு நாக்கில் நெல்லாலும், படிக்கிற குழந்தைகளுக்கு பூவாலும் எழுதுகிறார்கள். தினமும் இந்த வழிபாடு இக்கோயிலில் நடக்கிறது. பேச்சு சரியாக வராத குழந்தைகளுக்கும், பேசத் தயங்கும் குழந்தைகளுக்கும் அர்ச்சனை செய்தால் நன்றாகப் பேசும் திறன் உண்டாகும்.
அம்பாள் நித்தியகல்யாணியை திருமணமாகாத பெண்கள் வழிபட்டு நல்ல கணவனை அடைகின்றனர். மற்றொரு அம்பாளான 'சுகந்த குந்தல அம்பாள்' தவக்கோலத்தில் காட்சி தருகிறாள். தனித்து வாழ்க்கை நடத்த விரும்பும் பெண்கள் இவளை வழிபடலாம்.இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை செல்லும் ரோட்டிலுள்ள புளியஞ்சேரிக்கு வடக்கே 2 கி.மீ.
இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோயிலின் சிறப்பு தகவலுக்கு நன்றி...
ReplyDeleteஇனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள்...
அறியாத கோவில் தகவலை
ReplyDeleteதங்கள் பதிவின் மூலம் அறிந்தேன்
இனிய விஜய தசமி நல்வாழ்த்துக்கள்
# இங்கே குழந்தைகள் சிறந்த கல்வி பெறதினமும் பூஜை செய்து வரலாம். #
ReplyDeleteஉள்ள படிப்பும் அம்போ ஆகிவிடுமே ,கருண் ?
த.ம 4
கோவில் பற்றிய சிறப்புத் தகவலுக்கு நன்றி.
ReplyDeleteகேள்விப்படாத கோவிலா இருக்கு. பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஅற்புதமான கோயில்தான்.
ReplyDeleteஇதுவரை அறியப் படாத தகவல்! அறியச் செய்தீர் நன்றி!
ReplyDelete