முதுமலைக்
காட்டில்
துதிக்கையை
தூக்கிக்காட்டி
குட்டியிடத்தில் சொன்னது
யானை ஒன்று,
அதோ பார் பேருந்தில்
மனிதர்கள் என்று...
*********************************************************************************
உட்கார இடம்
கிடைத்தபோது
வந்துவிட்டது,
நான்
இறங்கவேண்டிய
இடம்...
*********************************************************************************
எங்கள் ஊரில்
கீழத் தெரு, மேலத் தெரு,
கிடையாது....
டீக்கடைகளில்
இரட்டை
கிளாஸ் இல்லை...
தேரோடும் வீதியில்
செருப்பணிந்து செல்லலாம்...
பொதுக் கிணற்றில்
நீரெடுக்கலாம்...
எங்களூரில்
வேறு யாருமே இல்லை
எங்க சாதி, சனத்தை தவிர...!
*********************************************************************************
#அதோ பார் பேருந்தில்
ReplyDeleteமனிதர்கள் என்று...#என்று சொன்ன யானை இப்படியும் சொல்லி இருக்கலாம் ...
இவர்கள் சுதந்திரமாய் சுற்றித் திரிவார்கள்
நம்மை கட்டிப் போட்டு !
தங்களுக்கு மட்டுமே ஆறறிவு என்றும் சொல்லிக் கொள்வார்கள் !
த .ம 2
// எங்க ///
ReplyDeleteஅதில் தான் பிரச்சனையே....
அது தான் ஆரம்பமே...
புரிந்து கொண்டால்............... நன்றி....
கவிதைகள் அருமை.
ReplyDeleteபல அர்த்தங்கள் சொல்லி சென்றது கவிதைகள்
ReplyDeleteகவிதைன்னா பெரிய விஷயங்கள் ஏதும் வேணாம் பெருசா மெசேஜும் வேணாம்... சொல்ல வந்தத சிம்பிளா, நச்சுன்னு இப்படி சொன்னா போறும்னு ஒரு சாம்பிள் உங்க கவிதை....
ReplyDeleteஅர்த்தம் பொதிந்த கவிதைகள்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
குட்டிக் கவிதைகள் ! வெல்லக் கட்டிகள்!
ReplyDeleteவேறு யாருமே இல்லை
ReplyDeleteஎங்க சாதி, சனத்தை தவிர...! மிக அருமையான கவிதை...