அண்மையில் ஒரு செய்தித்தாளில் படித்தது. பேஸ்புக் மூலம் சில தவறான முகவரிகளை உருவாக்கி பெண்கள் போலவே சில ஆண்கள் போலி ஐ-டி களை தயாரித்து, சில சபலம் பிடித்த ஆண்களை வீழ்த்தி முடிந்தவரை சுருட்டுவது என்பது தற்போது அதிகமாகி விட்டது.
டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் எஞ்சினிரிங் படித்துவரும் மாணவர் ஒருவருக்கே சமீபத்தில் இந்த விபரீதச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பேஸ்புக்-கில் அக்கவுன்ட் வைத்துள்ள இவர் நதியா என்ற ஒரு பெண்ணிடமிருந்து நட்பு வேண்டுகோள் கிடைக்க அதனை ஏற்றார். இருவரும் சிறிது காலம் பேஸ்புக்கில் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
ஒரு சமயம் நதியா தன்னை சந்திக்க விருப்பம் தெரிவித்தவுடன் மனிதருக்கு தலைகால் புரியவில்லை.
பொதுவான ஒரு பகுதியில் நதியாவை சந்திக்க இந்த நபர் புறப்பட்டுச் சென்றார்.
மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்ற அந்த மாணவருக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு நதியா இல்லை. மாறாக 4 வாலிபர்கள் ஒரு வண்டியில் வந்து இவரை பிடித்து மிரட்டி ஆயிரம் ரூபாய் பணம், போட்டிருந்த செயின் மற்றும் செல்பேசி ஆகியவற்றைப் பிடுங்கிக் கொண்டு சென்றனர்.
பேஸ்புக்கில் பேரைக் கண்டும், புகைப்படத்தைக் கண்டும் ரொமான்ஸ் என்ற பெயரில் ஏமாறாதீர்கள் இளைஞர்களே!
நல்ல அழகாக சிவகார்த்திகேயனின் குறும்படமான ..பேஸ்புக்.. சொல்கிறது இந்தக் கதையை...
ReplyDeleteஒ.. அப்படியா?
Deleteஎச்சரிக்கும் பதிவு, நன்றி! எங்கு இருந்து படங்களை எடுத்து இப்படி உபயோகிக்கிறார்கள் பாருங்கள்...
ReplyDeleteமுகப்புத்தகத்திலிருந்து....
Deleteஎச்சரிக்கை தேவை என்பதை எடுத்து சொல்லி எச்சரிக்கும் பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே..
ReplyDeleteநல்லது....
ReplyDeleteஇணைப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பு தரட்டுமா...?
நானே தரேன் DD.
Deleteம்... உஷாராகத்தான் இருக்கனும்...
ReplyDeleteஆமாம்,
Deleteவணக்கம்
ReplyDeleteஅருமையான விழிப்புணர்வுப் பதிவு மிக அவதானம்.... பதிவு அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்த்துகளுக்கு நன்றி...
Deleteநிறைய நடக்கிறது... எதிலும் யோசித்து செயல்படுதல் முக்கியம்...
ReplyDeleteஎச்சரிக்கைப் பகிர்வுக்கு நன்றி.
இது சாம்பிள் மட்டுமே, இன்னும் நிறைய நடக்கிறது.
Deleteநல்ல எச்சரிக்கைப் பதிவு
ReplyDeleteஆமாம் உஷாரா இருக்கணும்.
Deleteஅசந்தா போச்சு
ReplyDeleteவழிஞ்சா மொத்தமும் போச்சு
நல்ல எச்சரிக்கைப் பதிவு
தந்தமைக்கு வாழ்த்துக்கள்
இளைஞர்களோட வீக்னஸ் என்னன்னு புரிஞ்சிகிட்டு அதை பயன் படுத்திக்கிறாங்க. இந்த மாதிரி எத்தனை நிகழ்ச்சி நடந்தாலும் நம்ம ஆளுன திருந்த மாட்டேன்கிறாங்களே
ReplyDeleteநல்ல எச்சரிக்கை. பலருக்கு புரிவதில்லை.
ReplyDeleteநல்லதொரு எச்சரிக்கைப் பதிவு சார்.
ReplyDeleteகேரளாவில் 11 வகுப்பு வரை படித்த பையன் போலி கணக்கு உருவாக்கி தான் டாக்டர் எனக் கூறி பல பெண்களை ஏமாற்றி பணம், கற்பு எல்லாவற்றையும் கறந்துள்ளான். பொதுவாகவே தெரியாதோரிடம் இருந்து அழைப்பு வந்தால் நிராகரிப்பதே புத்திசாலித்தனம்.
ReplyDelete