சில நாட்களுக்கு முன்பு நம் நாட்டு கல்வியின் தரத்தை, சீன நாட்டு கல்வியுடன் ஒப்பிட்டு, முகப் புத்தகத்தில் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். அதில், நம் ஆசிரியர்களில், நூற்றுக்குக்கு, தொண்ணூறு பேர் ஆசிரியர்களுக்கான தகுதியே இல்லாதவர்கள என்பதை உறுதியாக அறியலாம் என குறிப்பிட்டிருந்தார். இது, உண்மையாக ஆத்மார்த்தமாக பணி செய்யும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் மனதை ரணப்படுத்தி விட்டது.
நெஞ்சில் ஈட்டி பாய்ச்சிய வலியை ஏற்படுத்தி விட்டது அந்தக் கட்டுரை. உலக நாடுகளுக்கு அறிவு ஜீவிகளை அள்ளி வழங்குவதில், நம் தேசம் என்றென்றும் சளைத்ததல்ல என்பது வரலாறு. அந்த அறிவு ஜீவிகள் வளர வழி வகுத்தது யார்? ஆசிரியர்கள் தானே...
அந்தக்காலத்தில் அரசியல்வாதிகள் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படாத காரணத்தால் மனனம் செய்வது மட்டுமே கல்வியின் அடிப்படை முறையாக இருந்திருக்கலாம். அனால் இப்போது படிக்கும் முறையில் பெரிய மாற்றம் நடந்துள்ளது.
படைப்பாற்றல் கல்வி மேலோங்கி இருக்கும் காலமிது. வேண்டுமானால், இன்றைய கல்வித் திட்டத்தில், பண்பாடு, கலாசாரம், நாகரிகம், மனிதநேயம், உலக சமாதானம் ஆகியவற்றையும், சேர்க்கச் சொல்லி வலியுறுத்துங்கள்.
எங்களைப் போல், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிபவர்களை, முடிந்தால், உற்சாகப்படுத்துங்கள். ஆசிரியர்களைப் பற்றி வாய்க்கு வந்ததை எல்லாம், பேசுவதையாவது நிறுத்துங்கள். ஆனால், தயவு செய்து கொச்சைப்படுத்தாதீர்!
சில நாட்களுக்கு முன்பு கல்வி விகடனில் வந்த கட்டுரையை படித்தீர்கள் எனில் ஆசிரியர்கள் பற்றி உயர்வாக நினைப்பீர்கள். இதைப் போல எத்துனையோ ஆசிரியர்கள் சம காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்தக் கட்டுரையின் சுட்டி: இதோ
உண்மையான கருத்துக்கள்! ஏதோ சில ஆசிரியர்கள் தவறு செய்வதால் பொத்தாம் பொதுவாக குறை கூறக் கூடாது! ஆசிரிய பணியை அர்ப்பணிப்புடன் செய்பவர்கள் நிறைய பேர்! நல்ல பகிர்வு! நன்றி!
ReplyDeleteநன்றி சுரேஷ் சார்..
Delete//ஆசிரியர்களில், நூற்றுக்குக்கு, தொண்ணூறு பேர் ஆசிரியர்களுக்கான தகுதியே இல்லாதவர்கள என்பதை உறுதியாக அறியலாம் என குறிப்பிட்டிருந்தார்// கண்டிக்கத்தக்கது! சிலர் சரியில்லை என்பதால் இப்படி மொத்தமாகக் குறை கூறக் கூடாது! உங்கள் மனம்படும் வேதனை புரிகிறது.. புரியாதவர்களின் மடமையான கருத்துகளைத் தள்ளிவிட்டு எப்பொழுதும்போல சிறக்க வாழ்த்துகள்!
ReplyDeleteகண்டிப்பாக சகோ..
Deleteta.ma.3
ReplyDeleteநன்றி...
Deleteசேவையாக பணி புரியும் ஆசிரியர் அனைவரும் மிகவும் வருத்தப்படும் செய்தி... இவையெல்லாம் - உளறல்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளக் கூடாது...
ReplyDeleteஆமாம் நண்பரே..
Deleteஎதை வைத்து 90 சதாம பேருக்கு தகுதி இல்லை என்று சொன்னாரோ அந்த நபர. எதையும் வெளியில் இருந்து சொல்வது எளிது.
ReplyDeleteஉண்மைதான்..
Deleteஎல்லாத்தையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பதினால் வரும் விளைவு அண்ணே ...
ReplyDeleteஅதைஎல்லாம் கண்டுக்காதீங்க
இதெல்லாம் கண்டுகிட்டா ஆகுமா..
Deleteஉலகம் உண்மை அறிய வேண்டும்
ReplyDeleteஆமாம் ...
Deleteஆசிரியர்கள் எல்லாம் சேவை மனதோடு தான் பணிக்கு வருகிறார்கள் என்பது எதிர்பார்க்க முடியாது.நமது கல்வியின் தரம் இன்னும் மேம்பட வேண்டும் .எல்லோரையும் அப்படி கூற முடியாது , பாதிக்கு மேல் இப்படி தான் இருக்கிறார்கள் .
ReplyDeleteஅது ஒருசில ஆசிரியர்களே..
ReplyDeleteநன்று சொன்னீர் கருண்! நன்றி!
ReplyDeleteஎல்லாத் துறையும் போல் ஆசிரியத்துரையுள்ளும் சீர்கேடு புகுந்து விட்டது.
ReplyDeleteஅது காலத்தின் கோலம்.
நல்ல சேவை உள்ளம் படைத்த ஆசிரியர்கள் இதைப் பொருட்படுத்தத் தேவையில்லை.
இதேவேளை தவறு செய்து இத்துறைக்குக் களங்கம் ஏற்படுத்துவோர் திருந்துங்கள்.