அந்த
தேசிய நெடுஞ்சாலை ஓரம்
அவளுக்கு
தொழில் காமம்
உடல் முதலீடு
வயது தேய்மானம்...!
கடவுளையும்
வேண்டிக்கொண்டுதான்
வருவாளாம்!
அந்த கருப்பு
இரவுக்குள்
புதுப் பெண்ணாய் ...!
கருப்பையில் விழும்
வெள்ளைத் தேமலைவிட
முகத்தில் விழும்
வெள்ளைத் தேமலுக்கே
வருத்தமென்றாl...!
கண்ணகி என்று
ஆரம்பிப்பதற்குள்
அவள் கணவன்
மாதவியுடன் என்றான்...!
இருபத்தி ஐந்து ரூபாய்க்கு
பேட்டி முடிந்தது
அவசரக் குரல்,
அடுத்த ஆளுக்கு
விலை போகிவிட்டாள் ...!
கொடுமை...
ReplyDeleteஆமாம் நண்பரே..
Deleteஅவர்களின் அவல வாழ்வு குறித்த
ReplyDeleteகவலையை விதைத்துப்போகும் கவிதை
அருமை
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
வாழ்த்துகளுக்கு நன்றி அய்யா..
Deleteநன்றி..
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅவலம் சுமந்த கவிதை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ..
Deleteபாவம்
ReplyDeleteஆமாம் சகோ..
Deleteஅவலத்தை சொல்லும் கவிதை...
ReplyDeleteவலி நிறைந்தது...
வாழ்த்துக்கள்.
நன்றி ..
Deleteவலி நிறைந்த வரிகள்! சிறப்பான கவிதை! நன்றி!
ReplyDelete[[தொழில் காமம்
ReplyDeleteஉடல் முதலீடு
வயது தேய்மானம்...!]]
இந் நன்னாளில் இதை படிக்க அசிங்கமாக இருக்கு!
இன்றைக்கு என்ன நாள் என்று உங்கள் இடுகையில் எழுத என்னால் முடியவில்லை; சிலருக்கு அது பிடிக்காது; ஆபாசம் என்று கருதலாம். ஆனால், என் இடுகையில் எழுதியுள்ளேன்.
தமிழ்மணம் வோட்டு பிளஸ் 1
என்ன செய்ய இப்படியும் இருக்கிறார்கள்..
Deleteஅவளுக்கு
ReplyDeleteதொழில் காமம்///தவறு நண்பரே பணத்தேவை