விவரம் அறியாத
வயதில்
இந்தக்
காலண்டர் தாளைக்
கிழித்து
விபூதி மடித்துக் கொண்டேன்...!
விவரம் தெரிந்தப்
பருவத்தில்
அதற்காக
கத்துக் கிடந்த
நாட்கள் பல...!
இப்போதெல்லாம்
பிப்ரவரி மாத
காலண்டருக்குள்
ஒரு
கூர்மையான கத்தி
ஒளிந்துகொண்டிருக்கிறது...!
இப்போது அதை
நான் கிழிப்பதில்லை...
அதுதான்
என்னை....!
source Aaraa.
ஹா! ஹா! ஏன் வீட்டம்மா கூட கொண்டாடலாமே!!
ReplyDeleteஆமால்ல ...
Deleteசிரமம் தான்...>>>
ReplyDeleteஉங்களுக்குமா?
Deleteஏங்க...? அது எல்லாருக்கும் மகிழ்ச்சியை தருகிற தினம் ஆயிற்றே?
ReplyDeleteசிலருக்கு மட்டும்..
Deleteஅட பாவமே, உங்கள் மனைவிக்கும் பிப்ரவரியில் தான் பிறந்த நாள் வருகிறதா! - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை
ReplyDeleteரசித்தேன்., உங்க அனுபவமா?
Deleteஅருமையான கவிதை! நன்றி!
ReplyDeleteநன்றி சுரேஷ்..
Deleteசில விஷயங்கள்
ReplyDeleteசொல்லாது போனால்தான்
நிறைச் சொல்லும்
அப்படித்தான் முடிக்காது விட்ட
இறுதி வரி நிறையச் சொல்லிப்போகிறது
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
ஆமாம்..
Deleteசெல்லப்பாவின் பின்னூட்டத்தை
ReplyDeleteமிகவும் ரசித்தேன்
நானும் ரசித்தேன் அய்யா..
Deleteஹாஹா
ReplyDelete//காலண்டருக்குள்
ஒரு
கூர்மையான கத்தி
ஒளிந்துகொண்டிருக்கிறது...!//
2014ல் அந்தக் கத்தி காலெண்டரில் இல்லாமல் போக வாழ்த்துகள்!
ஆமாம், நானும் எதிர்ப்பார்க்கிறேன்.,
Deleteபிப்ரவரி 14 யை மறங்க,நவம்பர் 14யை கொண்டாடுங்க ,சந்தோசமா இருக்கலாம் !
ReplyDeleteத,ம 4
சரி இருப்போம்..
Delete