விவரம் அறியாத
வயதில்
இந்தக்
காலண்டர் தாளைக்
கிழித்து
விபூதி மடித்துக் கொண்டேன்...!
விவரம் தெரிந்தப்
பருவத்தில்
அதற்காக
கத்துக் கிடந்த
நாட்கள் பல...!
இப்போதெல்லாம்
பிப்ரவரி மாத
காலண்டருக்குள்
ஒரு
கூர்மையான கத்தி
ஒளிந்துகொண்டிருக்கிறது...!
இப்போது அதை
நான் கிழிப்பதில்லை...
அதுதான்
என்னை....!
source Aaraa.












