என்னுடைய
அறியா வயதில்
அழியா நினைவுகள் இவை...!!!
மேகம் கறுக்கையில்
அம்மாவின் முகமும் கறுக்கும்
மழை தொடங்கிய பின்னோ
வீடே நீர்காடாகும் ...!
சோறு வடிக்க
உதவாத பாத்திரங்கள்
சொட்டும் நீரை
பிடிக்க உதவும் ...!
நீர் ஒழுகாத இடத்தில்
ஒன்டிக்கொள்ள
உடன்பிறப்புகளுடன்
அடிதடி சண்டை ...!
கிடைக்கும் ஒரு வேலை
சோற்றுக்கும்
மண்ணள்ளிப் போடும்
நனைந்த விறகும் அடுப்பும் ...!
மழை வலுக்க
கழிவு நீரும்
மழை நீருடன் சங்கமமாகி
அழையா விருந்தாளியாக
குடிசைக்குள் நுழையும்
அவை விட்டு சென்ற
வியாதிகள் உதவியுடன்
உலகை விட்டுச் சென்ற
தங்கை ஒன்று ...!
ஒவ்வொரு மழையும்
விட்டுசெல்லும் ஞாபங்கள்
மறையும் முன்னே
அடுத்த மழை...!!!
இன்று கண்ணில் பட்டது
ஒரு வரி
"மழையை ரசிக்காமல் யாரிருப்பார் ?"
கண்ணில் பட்ட வரியில் வலி தான் தெரிகிறது...
ReplyDeleteஇதைத்தான் ஒருத்தருக்கு பசி ஏப்பம். இன்னொருத்தருக்கு புலி ஏப்பம்ன்னு சொல்லுறது
ReplyDeleteமழையும் பலருக்கு துன்பம்தான்.
ReplyDeleteகவிதை அருமை.... கண்ணில் பட்ட வரி வலியைத் தந்தது...
ReplyDeleteமனதை அழுத்தும் கவிதை...
ReplyDeleteசோறு வடிக்க
ReplyDeleteஉதவாத பாத்திரங்கள்
சொட்டும் நீரை
பிடிக்க உதவும் ...!
//
இன்றும் குடிசை வீடுகளிலும் ஓட்டு வீடுகளிலும் இந்த அவல நிலைதான்.
கிடைக்கும் ஒரு வேலை...//
'வேளை'என்றிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
வலிகளின் பிரதிபலிப்பு ... நல்ல சொற்களில் வாழ்வியல் வலி கூறும் நற் கவிதை ... சிந்தனைக்கு என் வாழ்த்துக்கள்
ReplyDelete