"ஆசிரியப்பணி என்பது அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி" என்று அர்ப்பணிப்புடன் தன்பணியை ஆரம்பித்த மேதை சர்வபள்ளி திரு.இராதகிருஷ்ணண் அவர்களின் பிறந்த நாள் ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (Dr Sir Sarvepalli Radhakrishnan) எனப்படும் வீ. இராதாகிருட்டிணன் (1888 - 1975) சுதந்திர இந்தியாவின்முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். மேலும் சிறந்த தத்துவ இயல் அறிஞர் ஆவர்.
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்,1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் திருத்தணியில் ஏழை தெலுங்கு நியோகி (ஆந்திராவில் உள்ள பிராமணப்பிரிவு) குடும்பத்தில் பிறந்தார். தெலுங்கு மொழியைத் தாய்மொழியாக கொண்டவர். இவருடைய தந்தை பெயர் சர்வபள்ளி வீராசாமி, தாயார் பெயர் சீதம்மா. இவர், தன் இளமைக்காலத்தை திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார்.
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஆசிரியர் பணிக்கே, இலக்கணம் வகுத்தவர். தன் அறிவாலும், ஆற்றல் மிக்க அயராத உழைப்பினாலும் மாணவர்கள் மனதில், நீங்கா இடம் பிடித்தவர். ஆசிரியர் பணியை நேசிக்கும் ஆசிரியரே நல்லாசிரியராகத் திகழ முடியும். அப்படிப்பட்ட ஆசிரியரே மாணவர்கள் மனதில் இடம் பெற முடியும் என்ற கூற்றைப்போல வாழ்ந்து காட்டியவர். ஆசிரியர் பணி என்பது, அறப்பணி. இப்பணியை, ஒரு தொழில் என்று குறிப்பிடுவதை விட, சேவை என்று குறிப்பிடலாம். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று போற்றப்படுபவர்கள் ஆசிரியர்கள்.
எந்தவித எதிர்பார்ப்புகள் இன்றி அனைத்து மாணவர்களுக்காகவும் உழைக்கிற சிறந்த ஆசிரியர்களின் நல்வாழ்விற்காக, நாம், இந்த ஆசிரியர் தினத்தில் இறைவனை வேண்டுவோம். உயரட்டும் ஆசிரியர்களின் வாழ்வு! தொடரட்டும் அவர்களின் நற்பணி!
தலை வணங்குகிறேன்...
ReplyDeleteஇனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...
சர்வ 'பள்ளியில் 'பிறந்து ஆசிரிய இனத்திற்கே பெருமை சேர்த்தவர் !
ReplyDeleteம்...
ReplyDeleteசிறப்புப் பதிவு வெகு சிறப்பு
ReplyDeleteபகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
ReplyDelete