Tamilus

The best Tamil Aggregator | Tamilus

9/18/2013

வரலாறு உங்களை மன்னிக்காது?!



தமிழகம் முழுவதும் சுமார் இரண்டாயிரம் பள்ளிகள் எந்தவித பாதுகாப்பு இல்லாமல் இயங்குவதாக செய்திகள் கூறுகிறது.இந்தப் பள்ளிகளின் ஆய்வுக்கு செல்லும் ஆய்வாளர்கள் அரசியல் பிரமுகர்களால் அச்சுறுத்தப்படுவதாகவும், கல்வி ஆய்வாளர்கள் கட்டடத்தின் மோசமான நிலையை எடுத்துக் கூறினாலும், "பள்ளிக் கட்டடம் வலுவாகத் தான் உள்ளது' என்று, தாசில்தாரர்கள் பொய்ச் சான்றிதழ் தருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. 

இதில் அதிர்ச்சியடையவும்,ஆச்சரியப்படவும் எதுவும் இல்லை. காசு மட்டுமே குறிக்கோளாய் அரசியல் வாதிகளாலும் அவர்களின் உறவினர்களாளும் நடத்தப்படும் பள்ளிகள் இவை. அந்தக் கட்டடம் எப்படியிருந்தால் என்ன? குழந்தைகள் எக்கேடு கெட்டால் என்ன? இவர்களுக்கு பணம் வருகிறதல்லவா? அது போதும். 

இது இப்படித் தான் என்றாகி விட்டபின் நமக்கு நாமே தான் பாதுகாப்பைத் தேடிக் கொள்ள வேண்டும். பாதுகாப்பில்லாத எந்தவித அடிப்படை வசதியில்லாத ஆபத்திற்காக தயார் நிலையிலிருக்கும் இந்த மாதிரியான பள்ளிகளில் ஏன் குழந்தைகளை சேர்க்க வேண்டும்?

அருகிலேயே பாதுகாப்பான அரசுப் பள்ளி இருப்பின்  மக்கள் அவதிப்பட காரணம் வறட்டு கவுரவம்.

ஓட்டை உடைசல் பள்ளிகளையும், பஸ்களையும் வைத்து, பள்ளி நடத்தும் இந்த அரசியல்வாதிகள், மனசாட்சிக்கு என்றுமே பயப்படப் போவதில்லை, சின்னஞ்சிறு பாப்பாக்களை பற்றி, அவர்களுக்கு கவலையுமில்லை. காரியம் நடந்தால், சரி தான்; காசு பார்த்தால் போதும். 

அனால் அரசே... மக்கள் எங்களைக் காக்க வேண்டிய கடமை உனக்குள்ளது. அப்புறம் பார்க்கலாம் என்று தள்ளிப் போடாமல் இப்போதே இன்றே தலையிட்டு இந்த கயவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கி, நாளைய இந்தியாவின் விடிவெள்ளிகளான, குழந்தைகளை காக்க தவறினால், வரலாற்றில் உங்களுக்கு துடைக்க முடியாத களங்கம் ஏற்படும்.

16 comments:

  1. சரியான நேரத்தில் சரியான
    எச்சரிக்கைப் பதிவு
    இதைக் கூட ஏதோ ஒரு பெரும்
    அசம்பாவிதம் நேர்ந்தபின்தான்
    கவனிப்பார்கள் என நினைக்கிறேன்
    நம் அரசுகள் அப்படி
    நம் தலையெழுத்தும் கூட அப்படி

    ReplyDelete
  2. அரசு என்று முழிக்கும் என்பது தான் தெரியவில்லை...

    ReplyDelete
  3. திரைப்பட 'இந்தியன் 'களும் .'அந்நியன் 'களும் நிஜத்தில் வந்தால்தான் பிரச்சினை தீரும் !

    ReplyDelete
  4. அன்பின் கருண் - அரசுக்கு ஆயிரம் வேலைகள் - இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க இயலாது - அரசு இயந்திரம் மெதுவாகத்தான் இயங்கும் - என்ன செய்வது - ஒன்றும் செய்ய இயலாது - ஆதங்கம் புரிகிறது - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. சரியான பதிவு..அரசு கவனிக்குமா?

    ReplyDelete
  6. அருமையான பதிவு. ஆனால் இதுவும் செவிடன் காதில் ஊதிய சங்காகிவிடுமோ?

    ReplyDelete
  7. குழந்தைகள் விஷயத்தில் எந்தவிதமான சமாதானமும் செய்துகொள்ள முடியாது...

    அரசு கவனிக்கவேண்டும்...

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"