இன்று, கல்வியியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள்சந்தித்து வரும் மிகப்பெரிய பிரச்னை இது. என் மாணவர்கள் இருவர் கல்வியியல் கல்லூரிகளில் படித்து, கடந்த மே மாதம் நடந்த தேர்வுகளில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்திருந்தனர்.
இந்த மாதம் வளாக நேர்முகத் தேர்வு துவங்கி விட்டது. தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் இந்த வளாக நேர்முகத் தேர்வில், பங்கேற்க முடியாது. இதனால், அவர்களால் வளாக நேர்முகத் தேர்வில், பங்கேற்க முடியவில்லை. மிகவும் மனவேதனைக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகினர்.
அவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்திருந்தனர். நேற்று மறுகூட்டல் முடிவு வெளியானது. அதில் நான் எதிர்பார்த்தபடியே, என் மாணவர்கள் இருவரும் தேர்ச்சி பெற்றிருந்தனர். இரண்டு மாதமாக, அவர்கள் அனுபவித்த சோகம் தீர்ந்தது என்றாலும், அவர்கள் அனுபவித்தவேதனைக்கு ஆசிரியர் பல்கலை கழகம், என்ன பதில் கூறப் போகிறது?
என்மாணவர்கள் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் உள்ள, அனைத்து கல்லூரிகளிலும், தொடரும் அவலம் இது. தேர்வு முடிவு வரும்போது, பலர், தோல்வி அடைந்ததாக வருகிறது. மறுகூட்டலில், பெரும்பாலானோர் தேறி விடுகின்றனர். எதற்கு இந்த முரண்பாடு?
இதைத் தடுக்க அரசு சில நடவடிக்கைகளை எடுத்தே ஆக வேண்டும்.
பேராசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் போது, மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். கவனக்குறைவாக செயல்படுபவர்கள் மீது, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மறுமதிப்பீட்டில் மதிப்பெண் அதிகரித்தால் அவர்கள் கட்டணமாக செலுத்திய பணம் திருப்பி அளிக்கப்பட வேண்டும்.
அரசு தேவையான நடவடிக்கை எடுக்குமா?
எனக்குத் தெரிந்து கல்வித் துறையில் எழதிய விடைகளுக்கு தகுதியுள்ள மதிப்பெண்களைவிட கூடுதல் மதிப்பெண்கள்தான் வழங்கப் படுகின்றன. அவர்களுடைய விடைத்தாள்களை வாங்கிப் பார்த்தால் இதனை அறிந்து கொள்ள முடியும்.
ReplyDeleteபணம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தால் நிச்சயம் தேர்ச்சி பெறுவது சிக்கலே. .+2வில் நிறையப் பேர் மறு மதிப்பீடு செய்து குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் பலர் உண்டு.
இருந்தாலும் ஆசிரியரால் கவனத்துடன் செயல்படவேண்டியது அவசியம்.
+2 நிலையில் குறைவு. கல்லூரி . நிலையில் தான் இது அதிகம் நண்பரே ..
Deleteதேவையான அறிவுறுத்தல் நண்பரே.
ReplyDeleteநன்றி..
Deleteமாணவர்களுக்கு கட்டணம் திருப்பித் தந்தால் மட்டும் போதாது ,பேப்பரை திருத்த ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தொகையும் திரும்ப வசூலிக்க வேண்டும் !இவர்களின் அசட்டையால் மாணவனின் எதிர்காலமே பாதிக்கப்படுதே!
ReplyDeleteமிகச் சரி
Deleteஉண்மை பகவான் ஜி
Deleteஆமாம் உண்மைகள்.
Deleteசரியான வேண்டுகோள்!
ReplyDeleteமற்றொரு புறம் மறுகூட்டல் என்ற பெயரில் பணம் கொடுத்து தவறு நடக்காமலும் பார்க்க வேண்டும்..
உண்மை கிரேஸ்..
Deleteஉண்மையில் அனைவருக்கும் தேவையான தெரிந்து கொள்ள வேண்டிய பகிர்வு.
ReplyDeleteஆமாம் நண்பரே...
Deleteஉடனடியாக அரசு கவனிக்க வேண்டிய செயல்! செய்யுமா?
ReplyDeleteசெய்தால் நன்றாக இருக்கும் அய்யா..
Delete