எல்.ஐ.சி கோல்டன் ஜூபிளி பவுண்டேஷன் அனைத்து இந்திய அளவில் பொருளாதாரத்தில் நலிந்த குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களுக்கு உயர்கல்வி பயில உதவித்தொகை அறிவித்துள்ளது.
எல்.ஐசியின் ஒவ்வொரு மண்டல மையத்திலிருந்தும் 10 மாணவிகளும், 10 மாணவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த உதவித்தொகை வழங்கப்படுகின்றது.
இந்த உதவித்தொகையை பெற அரசு அனுமதி பெற்ற கல்லூரிகளில் மருத்துவம், பொறியியல், டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றினை படித்து கொண்டிருக்க வேண்டும்.
கல்வித்தகுதியாக +2வில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான வகுப்புத் தேர்வில் தேறி, குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை பெற www.licindia.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம் அல்லது அருகிலுள்ள எல்.ஐ.சி., கிளை அலுவலகம்/ மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க செப்.,23 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போன வருடம் 2012 ல் எண்கள் பள்ளியில் பிளஸ் டூ முடித்தவர்கள் ஐந்து பேருக்கு இந்த உதவி கிடைத்தது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தகவலுக்கு நன்றி...
ReplyDeleteok..ok..
Delete