Tamilus

The best Tamil Aggregator | Tamilus

9/16/2013

கட்டிலில் காத்திருக்கும் கிழவி?!!




கழுத்துல, காதுல 
கனமிருந்தா 
தல மாட்டுல உட்காந்து
மக அழுவா...
என்கிட்டே, 
கனத்த கண்ணீரும் 
வத்திப்போச்சே?

நன்செய்யும், புன்செய்யும் 
சேர்த்து வெச்சிருந்தா 
நடுரோடு வரைக்கும்
மகன் அழுவான்...
நான்தான் 
கூலிக்குப் போனவளாச்சே?

நாலுபேத்துக்கு 
உதவியுருந்தா 
பந்தலிலே கூட்டஞ்சேரும்
நான்தான் 
பாவம் என்று தந்தவர்களுக்கு
பாதிகடன் தரலையே...

கயித்து கட்டிலிலே 
காத்து கிடக்கிறேன்...
எப்ப வரப்போறான் 
அந்த
எமதர்ம ராஜான்னு...!

28 comments:

  1. அற்ப பொருளுக்குத் தான் மதிப்பு, மரியாதை...!

    ReplyDelete
  2. நல்ல கவிதை.....

    காத்திருப்பு - மோசமான காத்திருப்பு இது.....

    ReplyDelete
  3. வயதானவர்களுக்கு நடக்கும் கொடுமை...

    ReplyDelete
  4. பிள்ளைங்க ,சொந்தக்காரங்க ,அக்கம்பக்கத்தில் உள்ளவங்க கை விட்டாலும் பாட்டியை இப்படி காக்கவைப்பதில் என்ன சுகமோ எம தர்ம ராஜாவுக்கு ?ஆனாலும் எம தர்ம ராஜா யாரையும் கைவிட மாட்டான் !
    த.ம.3

    ReplyDelete
    Replies
    1. அவன் கை விட்டா அவ்வளவுதான் இந்த உலகம் ஜி..

      Delete
  5. வணக்கம்
    மனதை உருகவைக்கும் வரிகள் பாவம் அந்தப் பாட்டி
    கவிதை வரிகள் அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. நாம வாழ்நாள்ல செய்யிற நல்லதும் கெட்டதும்தான் சாகற காலத்துல துணையா வரும்னு சொல்வாங்க... சேத்து வச்சிருக்கற சொத்தோ, சொந்தமோ இல்லையாம்... அது சரிதான் போலருக்கு...

    மனசை பிழியும் வரிகள். அருமை..

    ReplyDelete
  7. கிராமத்து கிழவியின் மனநிலையை பாட்டில் சிறப்பாக வடித்துள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. மிகுந்த சோகம்..

    ReplyDelete
  9. அன்பின் கருண் - பாடல் அருமை - ஆதரவற்ற பாட்டியின் நிலை - எப்படா வருவான் எமன் - அப்படின்னு கிடக்கற பாட்டியின் நிலை பரிதாபந்தான். என்ன செய்வது ..... பாப்டல் நன்று - நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  10. வாழ்வியல் நிதர்சனம் !

    ReplyDelete
  11. இது கவிதை மட்டுமல்ல எல்லோருக்கும் ஒரு பாடம்

    அருமை
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. இன்றைய வாழ்வியல் நிதர்சனம்.இந்தக் கவிதையை உங்கள் முக நூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளேன்...

    ReplyDelete
  13. யதார்த்தம் சொல்லும்
    அற்புதமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"