Tamilus

The best Tamil Aggregator | Tamilus

9/19/2018

மறந்து போகிறதா ? இறப்பின் வலி?!




கூலியோ, சம்பளமோ
வாழ்வைத் தள்ளினாலும்
சாவைத் தள்ளாத
வரைமுறைக்குள்
இன்னும்
வாழ்ந்து கொண்டிருக்கிறது
என் கிராமங்கள்...


ஆயிரம்தான்
சண்டை இருந்தாலும்,
வேலைகள் பல
இருந்தாலும்
வீட்டிற்கு ஒருவராவது
வந்து துக்கம்
விசாரிப்பார்கள்
சாவு வீட்டில்....


திட்டித் தீர்த்து
மண்வாறித் தூற்றி
சாபங்கள் பல
தந்திருந்தாலும்
முந்திக் கொண்டு
வருவார்கள்
துக்கத்தில் பங்கேற்க...


கூடை கூடையாய்
குவியும் வாய்க்கரிசி
சம்பிரதாயத்தில்
ஒரு மாதத்திற்காவது
இல்லாது போகும்
சாவு வீட்டில் பசி...


ஊரே மயானம்
சென்று அடக்கம்
செய்தபின் பேசும்
பேச்சினில் கரையும்
இறந்தவரின்
அருமை, பெருமைகள்...


நாட்கள் பல
சென்றபிறகும்
கடைபிடிக்கப்படும்
துக்கம் .,


இன்றோ
மின்சார தகன அடுப்பில்
சம்பிரதாயங்கள் இன்றி
அரைமணி நேரத்தில்
முடிந்து விடும்
நகர வாழ்க்கையில்
மறந்தே போகிறது
அந்த இ(ற)ழப்பின் வலி...!

மீள்

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"