Tamilus

The best Tamil Aggregator | Tamilus

9/05/2018

தெய்வத்தை வணங்குவதை விட இவர்களை வணங்கலாம் ..


ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

ஆசிரியராகப் பணிபுரிந்து இந்தியக் குடியரசுத் தலைவராக உயர்ந்த டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் நாளை ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக நாம் கொண்டாடிவருகிறோம்.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.


என்பது வள்ளுவன் வாக்கு. ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்புக்கு மட்டுமல்லாமல் அவரது ஏழு பிறப்பிலும் உதவிடும் என்று வள்ளுவர் போற்றிப் புகழும் கல்விச் செல்வத்தைப் போதிக்கும் பேற்றினைப் பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள்.

நாட்டின் நம்பிக்கையாகத் திகழும் மாணவச் செல்வங்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி, அவர்களின் எதிர்கால வாழ்க்கையைச் செம்மைப்படுத்தி அவர்களை நல்ல குடிமக்களாக்கும் கடமை ஆசிரியர் சமுதாயத்தைச் சார்ந்தது.

ஆசிரியர் தினமான இந்நாளில் ஆசிரியப் பெருமக்கள் ஆற்றுகின்ற இந்த அரிய பணியைப் பாராட்டி அனைத்து ஆசிரியப் பெருமக்களையும் நான் மனதார வாழ்த்துகிறேன்.

எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவர்களை சிறந்த முறையில் உருவாக்கிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, ஆசிரியப் பெருமக்களின் பணி மேலும் மேலும் சிறந்திட ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் . 



நானும் ஒரு ஆசிரியராக பெருமைக் கொள்கிறேன்.

இது ஒரு மீள் பதிவு 

2 comments:

  1. நண்பரே நான் என் உயிர் தமிழா என்று ஒரு புதிய வலைத்தளம் ஆரம்பித்து இருக்கிறேன் அதற்கு வருகை தந்து உங்கள் ஆதரவை வழங்குமாறு கேட்டு கொள்கிறேன்

    வலைத்தளத்திற்கான முகவரி https://enuyirthamizha.blogspot.com/

    நன்றி..
    "குத்தூசி

    ReplyDelete
  2. ஒவ்வொருவருக்கும் ஒன்று அல்லது இரண்டு ஆசிரியரிடம் தனி ஈர்ப்பு இருக்கும். அவர்களை ஆயுள் உள்ளவரை மறக்க முடியாது.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"