நாடு முழுவதும், 2017 ஜூன் வரை, பல்வேறு நீதிமன்றங்களில், 6,400 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதில் தொடர்புடைய அரசு ஊழியர்கள், 16 ஆயிரத்து, 875 பேர்; தனியார் நிறுவனங்களை சேர்ந்தோர், 18 ஆயிரத்து, 780 பேர்; அரசியல்வாதிகள், 115 பேர்; இவர்களில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., - ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட, உயர் பதவிகள் வகிப்போர் மீது மட்டும், 339 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கோவில்கள் மட்டுமல்லாது, கல்வித் துறையிலும், ஊழல் மலிந்து விட்டது. 'பல்கலையில், 10 ஆண்டுகளில், அளவுக்கதிகமான ஊழல் நடந்துள்ளது' என, கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த, 2006 முதல், துணைவேந்தர் பதவி என்பது, கல்வி, அனுபவம், திறமைக்கு அல்லாது, அரசியல், ஜாதி மற்றும் பணபலம் இருப்போருக்கு மட்டுமே, சாத்தியம் என்றாகி விட்டது.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, 20 பல்கலையில், 20க்கும் மேற்பட்ட ஊழல் புகர்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன. துணைவேந்தர் ஒருவர் வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்த போது, 20 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து ஆவணங்களும், 4 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.'சென்னை அண்ணா பல்கலையில், விடைத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு நடந்துள்ளது' என, கண்டறியப்பட்டுள்ளது.
எவ்வளவு சட்டங்கள் இயற்றினாலும், ஊழலை ஒழிக்க முடியவில்லை. ஊழலை ஒழிக்க அல்லது குறைக்க, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த பணத்தை, எந்த வழக்குகளும் பதிவு செய்யாமல், அதை உடனே, அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்; அதற்கான சட்டம் விரைவில் கொண்டு வரப்பட வேண்டும்.அப்போது தான், லஞ்ச ஒழிப்பு துறையினரின், 'ரெய்டு'களினால் குறைந்தபட்ச பலனாவது கிடைக்கும்;
இல்லாவிடில், எந்த ரெய்டு நடத்தினாலும், பயன் தரப் போவதில்லை!
0 comments:
Post a Comment
அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"