2000 ஆண்டுகளுக்கு முன்பு ஆதி சங்கரர் அவர்கள் நாடு முழுவதும் பயணித்து சனாதன தர்மத்தில் இருந்த வேறுபாடுகளை களைந்தார்;சனாதன தர்மத்தில் 76 விதமான வழிபாட்டு முறைகள் உருவாகி இருந்தன;அவைகளை மீண்டும் 6 வழிபாட்டு முறைகளாக சீர்திருத்தினார்;
இதனால்,மீண்டும் நமது சனாதன தர்மம் உயிர்த்து எழுந்தது;
11.9.1893 அன்று அமெரிக்காவில் உலக மதங்களுக்கான மாநாடு நடைபெற்றது;
இதில் கத்தோலிக்க கிறிஸ்தவம்,ப்ராட்டெஸ்டண்டு கிறிஸ்தவம்,யூத மதம்,இஸ்லாமிய மதம்,புத்த மதம,தாவோயிஸம்,கன்பூஷியஸ் மத,ஷிண்டோயிஸம்,சொராஷ்டிர மதம் மற்றும் இந்து மதத்தின் பிரதிநிதிகள்(10 மதங்கள்) கலந்து கொண்டார்கள்;
இந்து மதம் என்ற சனாதன தர்மத்தின் பிரதிநிதியாக சுவாமி விவேகானந்தர் கலந்து கொண்டார்;
"அமெரிக்க சகோதர,சகோதரிகளே...." என்று பேச ஆரம்பித்து நமது சனாதன தர்மத்தின் பெருமைகளை உலக மக்களுக்கு உணர வைத்தார்;
இதனால்,மீண்டும் ஒருமுறை சனாதன தர்மத்தின் பெருமைகளை இந்த உலகம் உணர்ந்து கொண்டது;
இந்த அரிய சம்பவம் நிகழ்ந்து 11.9.2018 உடன் 125 ஆண்டுகள் ஆகின்றன;
11.9.2018 முதல் 11.9.2019 வரை இதைக் கொண்டாடுவது நமது கடமை......!!!!
ஜெய் ஹிந்த்!!!
0 comments:
Post a Comment
அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"