கல்லீரல் பாதிப்பு நீங்க சுரைக்காய் பால்கறி
சுரைக்காய் - பாதி
சின்ன வெங்காயம் - 6
பால் - அரை டம்ளர்
கறிவேப்பிலை - 10
உப்பு - தேவையான அளவு
அரைக்க
தேங்காய் - ஒரு மூடி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
கசகசா - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 5
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பட்டை - சிறு துண்டு
கிராம்பு - 2
தாளிக்க
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
ப்ரிஞ்சி இலை - பாதி
அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைசாக அரைத்து வைக்கவும். சுரைக்காயைப் பொடியாகவும், வெங்காயத்தை வட்டமாகவும் நறுக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வெங்காயம் மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் சுரைக்காய் சேர்த்து நன்கு சுருள வதக்கவும். (சுரைக்காயை வதக்கும் போதே பாதி வெந்துவிடும்). பிறகு பாலை ஊற்றி நன்கு வேகவிடவும். சுரைக்காய் வெந்ததும், தேங்காய் விழுதைச் சேர்க்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு, நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்கிவிடவும். கல்லீரல் பாதிப்பு,மஞ்சள் காமாலை இரண்டையும் வெகு விரைவில் குறைகின்றது.
0 comments:
Post a Comment
அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"