Tamilus

The best Tamil Aggregator | Tamilus

9/03/2018

புத்தக கண்காட்சி ஒரு சாமானிய ஏக்கம்


புத்தக வாசிப்பு, மனிதனை பக்குவப்படுத்துகிறது. சாதாரண மனிதனை கூட, சமூக பார்வையுள்ள, நல்ல குடிமகனாக மாற்றுவதில், புத்தகங்கள் ஆற்றும் பணி, மகத்தானது.

புத்தக கண்காட்சியை, சில தனியார் நிறுவனங்களே முன்னின்று, நடத்தி வருகின்றன. புத்தக வெளியீட்டாளர்களும், தள்ளுபடி விலையில் புத்தகங்களை வழங்கி, வாசகர்களின் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க உதவுகின்றனர்.புத்தக வாசிப்பு தான், சிறந்த எழுத்தாளர்களையும், இலக்கியவாதிகளையும், சமூக போராளிகளையும், அரசியல் கட்சி தலைவர்களையும் உருவாக்கி உள்ளது.

புத்தக வாசிப்பை, இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் வகையில், தமிழகத்தின் பெரிய நகரங்களில் புத்தக கண்காட்சிகள் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.சமூக வலைதளங்களின் வருகையால், புத்தகம் படிக்கும் ஆர்வம், பொது மக்களுக்கும், குறிப்பாக, மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அதிகரித்திருப்பதாக, ஆய்வுகள் கூறுகின்றன.

பல்வேறு வகைகளில் பயன் தரும் புத்தக கண்காட்சியை, சேவை அடிப்படையில், சில குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் தான், தனியாரால் நடத்த முடியும். அரசு நினைத்தால், புத்தக கண்காட்சியை, எல்லா வட்டங்களிலும் நடத்த முடியும்.மக்கள் நலன் சார்ந்த, பல்வேறு திட்டங்களுக்கு, பல நுாறு கோடி ரூபாய் செலவழிக்கப்படுகிறது. எனவே, மாநிலம் முழுவதும், புத்தக கண்காட்சிகளை நடத்துவதற்குரிய செலவை, அரசே ஏற்க முன் வர வேண்டும்!

செய்வார்களா?

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"