Tamilus

The best Tamil Aggregator | Tamilus

9/14/2018

இந்நிலை என்று மாறுமோ?

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் நிலவும் சுற்றுச்சூழல் குறித்து ஆய்வு செய்ய, மத்திய அரசால், அக்குழுவின் தலைவராக, நிபுணர், மாதவ் காட்கில் நியமிக்கப்பட்டார்.

அரசுக்கு, அவர் அளித்துள்ள அறிக்கையில், 'மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலுள்ள வனப்பகுதிகள், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும்; கொள்ளை லாப நோக்கில் அதிகளவில் சுரண்டப்படும் கனிமங்களால், பேராபத்து ஏற்பட வாய்ப்புண்டு.

'தமிழகம், கேரளா, கர்நாடகா, கோவா போன்ற மாநில அரசுகள், உடனடியாக இரும்புக் கரம் கொண்டு, சமூக விரோதிகளை ஒடுக்காவிட்டால், இம்மாநிலங்கள் மிக விரைவில் பேரழிவுகளை சந்திக்கும்' எனக் கூறியுள்ளார்.

கேரளாவில், விளைநிலங்கள் எல்லாம் மனை நிலமாகின்றன. வரைமுறையின்றி, வீட்டு மனைகளாகவும், மாடி வீடாகவும் பலர் மாற்றுகின்றனர். தண்ணீரை சேமிக்கும் ஆர்வம், அதை பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரளாவில், முறையான நீர் மேலாண்மை இல்லாததால், கன மழை பாதிப்பு, மிக மோசமான நிலைக்கு மக்களை தள்ளி விட்டது.

இந்த தவறை உணராத, கேரள மாநில முதல்வர், பினராயி விஜயன், தமிழகத்தின் மீது பழியை போடுகிறார்.உயர்ந்த விலை சோப்பை போட்டு குளித்தாலும், அரசியல்வாதிகள் சாயம் வெளுக்கப் போவதில்லை. 

மத்திய - மாநில அரசுகளை, ஜனநாயக முறைப்படி, மக்கள் தான் தேர்வு செய்கின்றனர். ஆட்சியாளர்கள் எடுக்கும் கொள்கை முடிவால், உயர் மற்றும் உச்ச நீதிமன்றம் அடிக்கடி தலையிட வேண்டியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், தமிழக - கேரள மாநிலங்களுக்கு இடையே பிரச்னை நீடித்து வருகிறது. கேரள மாநிலத்தில் வெளுத்து வாங்கிய மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, அம்மாநிலத்தின் எட்டு மாவட்டங்களை மூழ்கடிக்க செய்தது. ஆனால், அந்த மாநில முதல்வர், 'முல்லைப் பெரியாறு அணை உள்ளிட்ட பல்வேறு, நீர் தாவாவில், தமிழக அரசு, எங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறது' என்கிறார்.

முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை, 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்ற உத்தரவை போட்டது, உச்ச நீதிமன்றம். இன்று, கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டவுடன், அணையின் நீர்மட்டத்தை, 3 அடி குறைக்க சொன்னதும், அதே, உச்ச நீதிமன்றம் தான்.

நீதித் துறையிலும், பாரபட்சம் நிலவுவதால், மாநில உரிமைகள் பறிக்கப்படுகின்றன.


0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"