பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், செப்டம்பர் 4 அன்று தில்லி நாடாளுமன்ற வீதியில் பிரம்மாண்டமான போராட்டப் பேரணியை நடத்துகிறது. அதையொட்டி எழுதப்பட்டுள்ள கட்டுரை இது..
இருக்கின்ற 24 மணி நேரம் கூட தேடலுக்குப் போதுமானதாக இல்லாமல், இப்போதைய நாட்கள் மிகவும்தீவிரமாக இயங்க வேண்டிய நாட்களாகவே இருக்கின்றன. என்னவாக இருக்கிறது என்பதை விளங்கிக் கொள்வதற்கு உதவாமல், என்ன வென்று அறிந்து கொள்வதற்கு மட்டுமே உதவுவதால் கூகுள் கூட அந்தத் தேடல்களுக்கு உதவிகரமாக இருக்கவில்லை. உண்மையில் அந்தத் தேடல் என்பது இந்த நாட்களில் மிகவும் அரிதாகிப் போயிருக்கும் மனச்சாட்சிக்கான தேடலாகத்தான் இருக்கிறது.
மனச்சாட்சி – இதனை கடைசி முறையாக, 2012 டிசம்பர் 16 அன்று தில்லியில் அந்தக் குளிர்கால நாள் ஒன்றில்தான் நான் வெளிப்படையாகக் கண்டேன். தில்லியில் ஏற்பட்ட அந்த அதிர்வு நாடு முழுவதும் எதிரொலித்த போது என்னுடைய மகிழ்ச்சி அதிகரித்தது. அது உடனடியாக நாடு முழுவதும் எல்லா இடங்களிலும் தோன்றியது. ஆம்… அது அனைத்து இடங்களிலும் தோன்றியிருந்தது! அப்போது நான் கண்ட மனசாட்சி இப்படிச் சுருங்கிப் போயிருக்கவில்லை. குழந்தைப் பருவத்தை இழக்காத இளமையுடன் அது இருந்தது. அதுவரையிலும் அறியப்படாததாக, உறுதியான தீர்மானத்துடன் இருந்தது. அந்தக் கடுஞ்சினத்திற்கு அடியில், அதன் கண்களில் எதிர்காலத்தை என்னால் காண முடிந்தது. ஆஹா… இறுதியில் அந்தத் தருணம் வந்துவிட்டது என்ற நம்பிக்கை பிறந்தது.. ஒருவேளை அது பொருந்தாக் கற்பனையாக இருக்குமோ?
எனக்கு இது பிடிக்கவில்லை…
2014க்குப் பிறகு பல விஷயங்கள் நடந்தேறி வருகின்றன. நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை நான் விரும்பவில்லை. எனவே உங்களைத் தாக்குகிறேன். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ அதை நான் விரும்ப வில்லை. எனவே உங்களைத் தாக்குகிறேன். நீங்கள் உடுத்திக் கொண்டிருப்பதை நான் விரும்பவில்லை. எனவே உங்களைத் தாக்குகிறேன். நீங்கள் யாரைக்காதலிக்கிறீர்களோ அல்லது திருமணம் செய்கிறீர்களோ, அது எனக்குப் பிடிக்கவில்லை. எனவே உங்களைத் தாக்குகிறேன். உங்கள் திருமணத்தை நீங்கள் கொண்டாடும் முறை எனக்குப் பிடிக்கவில்லை. எனவே உங்களைத் தாக்குகிறேன். உங்களிடம் தவறான மதிப்பில் பணம் இருக்கிறது. எனவே உங்களைத் தாக்குகிறேன். உங்கள் விளைபொருட்களை சந்தையில் விற்பதற்கு இன்னும் அதிகமாகப் பணம் கேட்கிறீர்கள். எனவே உங்களைத் தாக்குகிறேன். நீங்கள் பார்க்கும் வேலைக்காக அதிக ஊதியம் கேட்கிறீர்கள். எனவே உங்களைத் தாக்குகிறேன். சுவாசிக்க சுத்தமான காற்று, குடிக்க தூய்மையான குடிநீர் வேண்டுமென்று கேட்கிறீர்கள். எனவே உங்களைத் தாக்குகிறேன். நீங்கள் நீங்களாகவே இருக்க விரும்புகிறீர்கள். எனவே உங்களைத் தாக்குகிறேன். இந்தத் தாக்குதலானது இங்கே சுடுதல், கொல்லுதல், பாலியல் வன்கொடுமை செய்தல் ஆகியவையாக இருக்கின்றது. பாலியல் வன்கொலை செய்தல் இன்னும் நல்லது என்று நினைக்கிறது.
நீ எங்கே இருந்தாய்?
மனச்சாட்சியே! நான் தேடிக்கொண்டிருக்கிறேன். நீ எங்கே இருக்கிறாய்? உனாவில் பதினேழு வயதுப் பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார். அப்போது நீ எங்கே இருந்தாய்? கத்துவாவில் எட்டு வயது சிறுமி பாலியல் வன்கொலை செய்யப்பட்ட வேளையில், நீ எங்கே இருந்தாய்? முசாபர்பூரில் சிறார் இல்லத்தில் முப்பதிற்கும் மேற்பட்ட பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டது. நீ எங்கே இருந்தாய்? ஒவ்வொரு தினமும் செய்தித்தாள்கள் நமக்கு புதிது புதிதாக கிராமங்கள், நகரங்களின் பெயர்களைச் சொல்லி அங்கே இது போன்று நடப்பதாக இந்தியப் புவியியல் குறித்த பாடங்களை நடத்துகின்றன… அனைத்து செய்திகளிலும் பாலியல் வன்குற்றம் அல்லது கொலை சம்பவங்கள் அடிபடுகின்றன. மனச்சாட்சியே! நீ எங்கே இருக்கிறாய்? நீ பத்திரிகைகள் படிப்பதில்லையா?
நமது தலைநகரான தில்லியில் மிக முக்கிய மையப் பகுதியில் திடீரென்று ஒரு வெடிகுண்டு வீசப்படுகின்றது. ஆம். மீண்டும் அதே தில்லிதான். இதுபோன்ற சம்பவங்கள் தில்லியைப் பொறுத்தவரை அதிர்ச்சி அளிப்பதாக இருக்கவில்லை. பெருமை மிக்க, உயர் பாதுகாப்பில் இருக்கின்ற நாடாளுமன்றத்தில் இருந்து கல்லெறிகின்ற தூரத்தில் அமைந்துள்ள பள்ளிக்கூடத்தில் இரண்டாவது வகுப்பில் படிக்கின்ற குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறது. மனச்சாட்சியே! நீ எங்கே இருக்கிறாய்?மனச்சாட்சியே, நீ விழித்துக் கொண்டுதான் இருக்கிறாயா? அல்லது … உணர்ச்சியற்று மரத்துப் போய் விட்டாயா?
நீ சோர்வடைந்துவிட்டாயா?
ஒரு பாலியல் பயங்கரம் நிகழ்த்தப்படுகிறது. நீ கோபத்துடன் கொந்தளித்து எழுகிறாய். அந்த மிருகத்தனத்தை எதிர்த்து உரத்த குரல் எழுப்புகிறாய். அமைப்பை கேள்வி கேட்கிறாய். பதில்களைக் கோருகின்றாய். அடுத்து மீண்டும் ஒரு பாலியல் வன்குற்றம். மீண்டும் நீ கோபமடைகிறாய். உரத்த குரல் எழுப்பி, கேள்வி கேட்கிறாய். மூன்றாவதாக ஒரு பாலியல்வல்லுறவு நடக்கிறது. நீ சோர்வடைந்து விடுகிறாய். நான்காவதாக ஒரு பாலியல் வன்குற்றம். அதை வெறுமனே ஒரு எண்ணாக மட்டுமே கவனத்தில் கொள்கிறாய். ஐந்தாவதாக நடக்கும் கற்பழிப்பு என்பது வெறும் எண்ணாகக்கூட கருதப்படுவதில்லை. ஒவ்வொரு நாளும் கிழக்கே சூரியன் உதிக்கிறது என்பதைப்போல, அது மிகமிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. சிறுமிகளும், பெண்களும் வயது வித்தியாசம் பாராமல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிக் கொண்டே இருக்கிறார்கள். மனசாட்சியே! நீ சோர்வடைந்து விட்டாயா?
துக்கம் என்பது ஒரு வருடத்திற்கு மேல் நீடிக்காது என்று புகழ்பெற்ற துருக்கிய கவிஞரான நாசிம் ஹிக்மெட் இருபதாம் நூற்றாண்டில் எழுதினார். 21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நமக்கு துக்கத்திற்கான அந்தக் கால அளவு ஒரு மாதம்…ஒரு வாரம்…ஒரு நாள்…அல்லது ஒரு மணிநேரம் அல்லது அதற்கும் குறைவானதாக குறைந்து போய் விட்டதா?
நீ அச்சமடைந்து விடுகிறாயா?
ஒரு பாலியல் வல்லுறவு சம்பவம் நடந்தது தெரிந்த வுடன் முழக்கமிட்டு, அதிர்ச்சியுற்று, அணிவகுத்து, முஷ்டியை உயர்த்தி, தண்ணீர் பீரங்கிகளை எதிர்த்து நின்று, சாலைகளில் வைத்திருக்கும் தடைகளைத் தகர்த்தெறிந்து போராடுகிறாய். நீ நீயாக மட்டும் தனித்திருப்பதில்லை. நாமாக நீ மாறி விடுகிறாய். இரண்டாவது சம்பவம் நடக்கிறது. நீ முழக்கமிட்டு, அணிவகுத்து, உனது கரத்தை உயர்த்துகிறாய். இப்போதும் நீ நீயாக மட்டும் இருப்பதில்லை. நாமாக மாறிப் போகிறாய்.மூன்றாவது பாலியல் கொடூரம் நிகழ்கிறது. முழக்கமிடு கிறாய். இன்னும் நீ நாமாகவே இருக்கிறாய். நான்காவது கொடூரம் நிகழ்ந்ததும் நீ புலம்பத் தொடங்குகிறாய். ஐந்தாவது பயங்கரம் நடக்கும் வேளையில் மனசாட்சியே நீ எங்கே போய் விடுகிறாய்? அச்சமடைந்து விடு கிறாயா? சுற்றிலும் வெறுப்புசூழ்ந்திருக்கிறது. வன்முறை நிறைந்திருக்கிறது. படுகொலைகள் நடத்தப்படு கின்றன. ரத்தம் சிந்துகிறது. அவதூறுகளும் அச்சுறுத்தல்களும் நிரம்பி வழிகின்றன. துரோகி, தேசத் துரோகி, வளர்ச்சிக்கு எதிரானவர்கள் போன்ற மோசமான வார்த்தைகளால் நம்மை அழைக்கிறார்கள்… நம்மிட மிருந்து மெளனத்தை அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அது அவர்களுக்கு கிடைத்து விடுமா? மனசாட்சியே நீ எங்கே இருக்கிறாய்? உணர்வுகள் மரத்துப் போய், பயந்து, அமைதியாக நடந்து கொண்டால், மனச்சாட்சியே நீ யார்? நீ மனச்சாட்சி தானா?
விநோதமான உயிரினமா நாம்?
இந்த பூமியில் வாழும் மிக வினோதமான உயிரினமாக நாம் இருக்கிறோம் என்று ஹிக்மெட் தனது கவிதையில் கூறியிருந்தார். ‘தேள்களைப் போல கோழைத்தனமான இருளில் வாழ்பவர்களாக’, ‘சிட்டுக் குருவிகள் போல எப்பொழுதும் தரையில் தட்டிக் கொண்டு சிறகடித்துக் கொண்டிருப்பவர்களாக’, அமைதியான சந்தோஷத்துடன், மக்குள்ளே உறைபவர்களாக நாம் இருக்கிறோம் என்று கூறிய அவர், நாம் எரிமலையின் வாயிலாகவும் இருப்பதாகச் சொல்கிறார். இத்தகைய வலிமை இருந்தாலும் கூட, சில நேரங்களில் சுழற்றப்படும் தடிகளுக்கு பயந்து படுகொலைக்குக் கொண்டு செல்லப்படுகின்ற ஆடுகளைப் போல்பெருமையுடன் அணிவகுத்துச் செல்பவர்களாகவும் நாம் இருக்கிறோம் என்று அவர் எழுதுகிறார். இத்தகைய கிண்டல்களைத் தொடர்ந்து, கடல் நீரைப் பார்க்க முடியாத மீன்களைப் போல நாம் இருப்பதாகவும் அவர்கூறுகிறார். பின்னர் “இந்த உலகில் பசியோடு, சோர்வாக, ரத்தம் சிந்துபவர்களாக நாம் இருந்தால்; ஒயினுக்காக பிழியப்படும் திராட்சைப் பழங்களைப் போல நாம் இருந்தால், தவறு நம்முடையதுதான் ….” என்று தனது கவிதையை முடிக்கிறார். மனச்சாட்சியே, ஹிக்மெட் மேலே விவரித்ததைப் போலவே தான் நீயும் இருக்கிறாயா? அல்லது அவரே பிறிதொரு இடத்தில் குறிப்பிடுவதைப் போல சிங்கத்தைப்போல இருக்கிறாயா? இரும்புக் கூண்டிற்குள் இருக்கும் சிங்கத்தின் கண்களை ஆழ்ந்து கவனித்தால், அவை கோபத்துடன் கனன்று கொண்டிருப்பதைக் காண முடியும். கோபம் வந்து போனாலும் அல்லது போய் வந்தாலும் ஒரு சிங்கம் தன்னுடைய கௌரவத்தை ஒருபோதும் இழக்காது.
என் நாடு என்ன செய்கிறது?
ஆமாம்… தங்களுடைய மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்ட சில விவசாயிகள் அணிவகுத்துச் செல்கிறார்கள். மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்ட சில தொழிலாளர்கள் போராடுகிறார்கள். மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்ட சில தலித்துகள் போராடி வருகிறார்கள். மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்ட சில மாணவர்கள் கொதித்து எழுகிறார்கள். ஆனால் மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்ட என் நாடு என்ன செய்கிறது? மனச்சாட்சியே நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? ஒரு நாடு என்பது அதன் ஒரு பகுதியைவிட முக்கியமானதாகும். தொழிலாளர்கள், விவசாயிகள், தலித்துகள், மாணவர்கள், பெண்கள் மற்றும் இன்னும் பலரையும் அது உள்ளடக்கியதாக இருக்கிறது.
மனச்சாட்சியே! தங்கள் வலிமை, அதிகாரம் மூலமாக உன்னை அச்சுறுத்தி, உன்னுடைய உணர்வுகளை மரத்துப் போகச் செய்வதற்கு அவர்கள் வேண்டுமென்றே முயல்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள். ‘பெண்கள் வீடுகளுக்குள் மட்டுமே இருக்க வேண்டும், அவர்கள் வெளியில் செல்லக் கூடாது. தங்களுடைய கணவர்கள், குழந்தைகள் மற்றும் தந்தையைக்கவனித்துக் கொள்வதே அவர்களுக்கு இடப்பட்டி ருக்கும் பணி’ என்கிற மனுவின் விருப்பங்களை உறுதிப்படுத்துகின்ற வகையில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் தீவிரமாக அரங்கேறி வருகின்றன. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதாகக் கூறி மேற்கொள்ளப்படுகின்ற பிரச்சாரங்களை நம்பி நீ முட்டாளாகி விட வேண்டாம். உண்மையிலேயே பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுவது அவர்களுடைய நோக்கமாக இருந்தால், பெண்களுக்கு எதிராக குற்றங்கள் இழைக்கப்படும் போது அவர்கள் ஏன் செயல்படாமல் இருக்கிறார்கள்? மனசாட்சியே! சமூகம் என்கிற பிரமிடில் தலித்துகளுடன் பெண்களும் சேர்ந்து சுரண்டப்படுவதற்கு ஏதுவாக அடிமட்டத்தில் இருப்பதை நினைவில் கொள். அந்தப் பிரமிடின் கீழ்ப் பாதிப் பகுதியில் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோர் பொருளாதார ரீதியாக சுரண்டப்படுவதற்கு ஏதுவாக இருக்கின்றனர்.
விதைகள் தெறிக்கும் சப்தம்:
கிரேக்கப் புரட்சிகரக் கவிஞரான யானிஸ் ரிட்சோஸ் எழுதியதை நாம் ஒன்று சேர்ந்து வாசிக்கலாம்: “எவ்வளவு காலத்திற்குதான் நீ மௌனமாக இருக்க முடியும்?இந்த கத்தி எவ்வளவு தூரத்திற்கு எட்டும்? அவர்கள் உன்னிடமிருந்து புன்னகைகளைத் திருடுவார்கள்.ஏன் உன் கண்ணீரையும்கூட திருடி விடுவார்கள்.நேசம் என்பது எங்கே தங்கியிருக்கும்? ரொட்டியின் முன்னால் துப்பாக்கியின் முனை ஜொலிக்கிறது.தாயின் வயிற்றில் இருக்கின்ற குழந்தையை அந்த துப்பாக்கியின் முனை துளைக்கிறது.நாம் அனைவரும் கரம் கோர்ப்போம். மலைகளின் மடியில் நமது குழந்தைகள் தூங்க,நமது குழந்தைகளுக்காக நாம் அழுவோம். இந்தக் காற்று நமது கண்ணீரை உலர்த்தட்டும்.விதைகள் தெறிக்கும் சப்தத்தை அவர்கள் கேட்கட்டும்தெறிக்கின்ற விதைகள் கீழே விழுகின்றன. அதனாலேயே நமது மேஜைகளில் இருந்து ரொட்டி காணாமல் போகாமல் இருக்கிறது, அதனாலேயே நமது இதயங்களில் இருந்து புன்னகையின் வேர் அழியாது இருக்கிறது. இந்த காற்று அவர்களின் குருதியையும், அவர்களின் குரலையும் பாதுகாத்து வைத்திருக்கிறது.
அவ்வாறிருக்க விட்டு விடுவோம்.இந்தக் காற்று பெரியது இந்தக் காற்று மிகப் பெரியதுஅது மகிழ்ச்சிக்குரியது, மகிழ்ச்சிக்குரியது, மகிழ்ச்சிக்குரியது. மக்களிடையே எழுந்திருக்கும் சுவர்களை இடித்துத் தள்ளி மரணச் சுவர்களை இடித்துத் தள்ளிமனதிற்கும், இதயத்திற்கும் இடையே உள்ள சுவர்களை இடித்துத் தள்ளி உனக்கும் எனக்கும் இடையில் உள்ள சுவர்களை இடித்துத் தள்ளி சூரியனின் சாளரத்தை ஓருலகத்தின் மீது விரியத் திறந்துரத்தம் தோய்ந்த இந்த உலகின் சுற்றுப்புறங்களில் இந்த காற்று எவ்வாறு ஒலி எழுப்புகிறது என்பதை நாம் கவனித்துக் கேட்போம்.”
பீப்பிள்ஸ் டெமாக்ரசி (ஆகஸ்ட் 26)
தமிழில் : பேரா. தா.சந்திரகுரு
http://peoplesdemocracy.in/2018/0826_pd/J

0 comments:
Post a Comment
அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"