உதவிக்கு செய்த நன்றி..!
ஒரு நாள் வேடன் ஒருவன் பறவைகளை வேட்டையாடுவதற்காக காட்டிற்கு சென்று ஒரு வலையை விரித்து வைத்தான். அந்த வேடன் விரித்து வைத்திருந்த வலையில் கழுகு ஒன்று சிக்கிக் கொண்டது. அந்த கழுகைப் பிடித்த வேடன், அந்த கழுகின் சிறகுகளை மட்டும் வெட்டி, கழுகை சங்கிலியால் கட்டிப் போட்டிருந்தான். அப்போது அந்த வழியாக சென்ற பெரியவர் ஒருவர், அந்த கழுகின் மீது இரக்கப்பட்டு, அந்த வேடனிடம் இருந்து அந்த கழுகை பணம் கொடுத்து விலைக்கு வாங்கி, தன் வீட்டிற்குக் கொண்டு சென்று மிகவும் அன்புடன் வளர்த்து வந்தார்.
கழுகின் இறக்கைகள் நன்கு வளர்ந்ததும் அதைப் பறந்துபோக அனுமதித்தார். கழுகு புதிதாக முளைத்த இறக்கைகளுடன் மகிழ்ச்சியாக வானத்தில் பறந்து சென்றது. வானத்தில் பறந்து செல்லும் போது அதன் பார்வையில் ஒரு முயல் தென்பட்டது. அந்த முயலை அப்படியே தூக்கி வந்து தன்னை வளர்த்த பெரியவரிடம் காணிக்கையாகக் கொடுத்தது.
கருப்பட்டி, கோதுமை, நெய் ஆகியவற்றினை மூலப்பொருட்களாகக் கொண்டு செய்யப்படும் இந்த கருப்பட்டி அல்வா அதிக ருசியுடனும், உடல்நலத்திற்கு ஏற்றதாகவும் இருக்கிறது. குறிப்பாக கருப்பட்டியின் சேர்க்கை இதற்கு ஒரு புது ருசியினைத் தேடித்தந்துள்ளது.
நெல்லை நெய் கருப்பட்டி அல்வாவினை நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் ஆர்டர் செய்தால் ஓரிரு நாட்களுக்குள் உங்களின் வீடு தேடி டெலிவரி செய்யப்படும்.

பழமை மாறா சுவையை ருசிக்க இங்கே கிளிக் செய்து ஆர்டர் செய்யுங்கள்!
கழுகு, முயலை எடுத்துக் கொண்டு சென்று அந்த பெரியவரிடம் கொடுத்ததைப் பார்த்துக் கொண்டிருந்த நரி, கழுகிடம், முன்பு உன்னைப் பிடித்த வேடன் மறுபடியும் வந்து உன்னைப் பிடிக்கலாம். அந்த வேடனிடம் இருந்து நீ தப்பிக்க இந்த முயலை நீ அவனிடம் கொடுத்திருந்தால், மறுபடியும் அவன் உன்னைப் பிடிக்காமல் இருப்பான். நீ உன்னை வளர்த்த இந்த பெரியவருக்கு நீ இந்த முயலைக் கொடுத்தாலும், கொடுக்காமல் இருந்தாலும் அவர் உன்னைப் பிடிக்க வரப்போவதில்லை. அப்படியிருக்க நீ எதற்காக அவரிடம் முயலைக் கொண்டுப்போய் கொடுத்தாய் என்று கேட்டது.
அதற்கு கழுகு, நான் வேடனிடம் இந்த முயலைக் கொடுப்பது மிகவும் தவறு. வேடனிடம் நான் முயலைக் கொடுத்தாலும், பிற்காலத்தில் அவன் என்னை நிச்சயம் வலைவிரித்துப் பிடிக்கலாம். ஆனால், நான் ஆபத்தில் இருந்தபோது என்னைப் பெரியவர் காப்பாற்றியுள்ளார். அவரிடம் நான் வைத்துள்ள நன்றியையும், விசுவாசத்தையும் வெளிப்படுத்தவே முயலைக் காணிக்கையாகச் செலுத்தினேன் என்றது. மேலும் கழுகு நரியிடம், உதவி செய்தவரிடத்தில் நன்றியோடு இருப்பது தான் பண்புள்ள செயல் எனக் கூறிவிட்டு அங்கிருந்து பறந்து சென்றது.
தத்துவம் :
ஆபத்து நேரங்களில் உதவி செய்தவர்களை என்றும் மறக்காமல் அவர்களிடத்தில் நன்றியோடு இருப்பது தான் நல்லவர்களுக்கான அடையாளம் ஆகும்.
#மாணவர்களுக்கான நன்னெறி கதைகள்
0 comments:
Post a Comment
அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"