காலைச் சூரியன்
தன் இமைகளை
திறப்பதில் தொடங்கி
இரவு நீட்சியின்
பயணம் வரை
அரும்பாடுபட்டு
மனிதனாகவே வலம் வந்தேன்...!
எதையும்
கணக்குப் போடும்
சூழல் இருந்தும்
மனிதம் தொலையாமல்
பார்த்துக்கொண்டேன்....!
எல்லாம் முடிந்துபோனது ?
நாலாவது 'பெக்கில்'
நாராசமாய் பேசி
எடுத்த வாந்தியில்
வந்து விழுந்தது
எனது மனிதம் முதல்,
எல்லாமும்....!
அனுபவ வரிகள்.
ReplyDeleteநண்டு @நொரண்டு -ஈரோடு said...
ReplyDeleteஅனுபவ வரிகள்./// நண்டு சார் இது என்னோட அனுபவ வரிகள் கிடையாது.. ஒருவேள உங்களுடைய அனுபவமோ?
ஹா..ஹா....
அந்த அனுபவம் எனக்கில்லீங்க கருண்
ReplyDeleteஎன்ன ஒரு கற்பனை...
ReplyDeleteகவிதை அழகாருக்கு. அத்தோட அந்த படத்துல போட்ருக்கற வரிகளும் சூப்பர். அவங்க ஸ்டெடியாய்ட்டா கவர்ன்மென்ட் ஆட்டம்தான் கண்டுரும்.
ReplyDeleteசூப்பர் கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநல்ல கவிதை. மனிதநேயம் வாந்தி எடுக்கும்வரை தாக்குப்பிடித்ததே பெரிய விஷயம்.
ReplyDelete