நுழைய முயல்பவனே!
உன் மனதிற்குள்
நீ,
உன் மனதிற்குள்
நீ,
நுழைந்ததுண்டா ...?
உன் மனதின்,
இருண்ட அறைகளுக்கும்,
அங்கே உலவும் பேய்களுக்கும்,
நீ,
பயந்ததுண்டா...?
பயந்ததுண்டா...?
உன் மனம்
உன் அசிங்கங்களின்
உன் அசிங்கங்களின்
குப்பை கூடையாக
இருக்கிறதல்லவா...?
உன் மனம்
உன் இரகசியமான ஆசைகளை
உன் இரகசியமான ஆசைகளை
ஒளித்து வைக்கும்
அந்தரங்க அறையாக
அந்தரங்க அறையாக
இருக்கிறதல்லவா...?
நீலப்படம் தயாரித்து
உன் கனவு என்ற
உன் கனவு என்ற
அந்தரங்க அரங்கத்தில்
போட்டுப் பார்த்து,
இரசிக்கிறதல்லவா...?
அந்த
படத்தில் மட்டும் தான்
படத்தில் மட்டும் தான்
நீ,
ஒர் நடிகனாக இல்லாமல்
நீயாய்,
இருக்கிறாய் என்பதை
நீயாய்,
இருக்கிறாய் என்பதை
அறிவாய் அல்லவா...?
அந்தப் படத்தை
பகிரங்கமாய்
உன்னால்வெளியிட முடியுமா...?
உன்னால்வெளியிட முடியுமா...?
உன் மனம்
ஓர் பாற்கடல்
அதை கடைந்தால்
அதை கடைந்தால்
அமுதம் மட்டுமல்ல !!!
ஆலகால விஷமும்
வெளிப்படும் என்பதை
வெளிப்படும் என்பதை
நீ,
அறிவாய் அல்லவா...?
உன் முகவரி
உன் முகத்தில் இல்லை
மனதில்தான் இருக்கிறது
அதை யாருக்காவது
தெரிவிக்கும் தைரியம்
உனக்கு உன்டா...?
நம்முடைய முகவரிகள்
பொய்யானவை,
நம்முடைய முகங்கள்
பொய்யானவை,
நாம் யாருமே
நம்முடைய
முகவரியில் இல்லை !?
அதனால்
யாரும்,யாரையும்,
!!!!!! பார்க்க முடிவதில்லை.....
சமுகம்,
ஓர் முகமூடி !!!???
ஓர் நாடக அரங்கம்...
எல்லோரும்
அந்த அரங்கத்தில்
முகங்கள் என்ற முகமூடி அணிந்து
ஆடிக்கொண்டிருக்கிறோம்.
ஆடிக்கொண்டிருக்கிறோம்.
நம்
முகமூடிகளே.... நம் மகுடங்கள்...
அவை கழற்றப்பட்டுவிட்டால் !!!???
யாரும் அவரவர் நிலையில்
இருக்க முடியுமா ???????
மீள்பதிவு..
மீள்பதிவு..
வணக்கம்
ReplyDeleteஅருமையாக கவிதைஅமைந்துள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நாம் வாழும் இந்த பிரபஞ்சம் போலவே நமது மனதும் எல்லை இல்லாதது. நாடோடிகளாய் திரிந்து வாழ்ந்த மனிதனும் தன் மனம் போன போக்கில்தான் வாழ்ந்து வந்தான். உழுது பயிரிட்டு ஒரே.இடத்தில் தங்கி சமூகமாக வாழ ஆரம்பித்த காலத்தில் தான் சார்ந்த சமுதாயத்தில் ஒரு. இடத்தை தக்க வைத்துக் கொள்ள ஆரம்பித்த காலத்திலுந்தே மனிதன் முகமோடி அணிய தொடங்கிவிட்டான். இன்றைய காலங்களில் இது இல்லாமல் எதுவும் நடக்காது. அல்லது தோல்வியில்தான் முடியும். இல்லை என்றால் துறவி ஆகிவிட வேண்டியதுதான் மீதம்.
ReplyDeleteஆக்கம் நன்று.. பகிர்வுக்கு நன்றி.
சிறப்பான கவிதை......
ReplyDeleteசிந்திக்கத் தூண்டும் சிறப்பான வரிகள் வாழ்த்துக்கள் சகோ .
ReplyDeleteஇருண்ட அறைகளுக்கும்,
ReplyDeleteஅங்கே உலவும் பேய்களுக்கும்,//உண்மைதான்