சிரிக்க மட்டும் :-
1) தந்தை: மகனே நீ பரீட்சையில பாஸானா உனக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தரேன்...
மகன்: ஃபெயிலாயிட்டா..?
தந்தை: பத்து சைக்கிள் வாங்கித் தரேன். சைக்கிள் கடை வச்சிப் பொழைச்சிக்கோ..!
2) ஆசிரியர்: ரவி தலையில் எறும்பு ஏறுதுன்னு, ஏண்டா என்கிட்டே சொல்ற?
மாணவன்: அவன் தலையில எதுவும் ஏறாதுன்னு நீங்கதானே டீச்சர் சொன்னீங்க?
3) ராமு: நீ எதைப் பேசினாலும் எதிர்த்தே பேசுறாரே, அவர் யாருடா?
சோமு: எங்க வீட்டுக்கு எதிர்வீட்டுக்காரர்..!
4) நண்பர் 1: அவரு போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே?''
நண்பர் 2: எக்ஸ்-ரேவைப் பார்த்துட்டு நெகடிவ் எதுக்குக் கொண்டு வந்திருக்கீங்க, போட்டோ எங்கன்னு கேக்கறாரு...'
5) ஒருவர்: இந்தப் பாம்பு கொஞ்ச நேரத்துக்கு முன்னாலதானே சட்டையை உரிச்சுது. இப்ப திரும்பவும் எதையோ உரிக்குதே..!
மற்றவர்: ஒருவேளை பனியனா இருக்குமோ..?
6) ஆண்: என்னோட மனைவியைக் காணோம்..ஒரு அஞ்சு நிமிஷம் நீங்க என்கூட பேசிட்டிருக்க முடியுமா?
பெண்: எதுக்கு?
ஆண்: நான் ஏதாச்சும் பெண்கள்கூட ஒரு நிமிஷம் பேசினாலே, என் மனைவி என் முன்னாலா ஆஜராயிடுவா..!
7) நோயாளி: டாக்டர் இந்த ஆப்பரேசனால் எனக்கு பின்னாடி ஏதும் ப்பரொபளம் ஒண்ணும் வராதே
டாக்டர்: நீங்க வயித்தில தானே ஆப்பரேசன் பணணிக்கப்போறீங்க அப்புறம் பின்னாடி எப்படி ப்ரொபளம் வரும்.
8) நண்பர் 1 : பக்கத்து அபார்ட்மெண்டுல போன வாரம் மூணாவது மாடியிலே
திருட்டுப் போச்சு...நேத்து ரெண்டாவது மாடியிலே...
நண்பர் 2 : திருட்டு படிப்படியா குறைஞ்சுட்டு வருதுன்னு சொல்லுங்க..!
9) மனைவி : 'உங்கள் முன்னால் வடிகட்டின முட்டாள் நின்னுட்டு இருந்தால் கூட,அவங்களை ‘அறிவாளி’ன்னு நம்பிடறீங்க. அதான் உங்களோட பெரிய பலவீனம்”.
கணவன் : அடடே! சரியா சொல்லிட்டியே! இப்பவும் கூட அதுதானே நடந்துட்டு இருக்குது.
10) மனைவி: நம்ம பையன் இன்னைக்கு ஊர்ல பெரிய புள்ளி. இதுக்கு நீங்கதான் காரணம்கணவன் : ரொமப தேங்ஸ்.
மனைவி: சரியா படிக்கலைன்னா உன் அப்பன் மாதிரி உதவாக்கரையாயிடு வன்னு அப்பப்போ சொல்வேன். பையன் புத்திசாலி. புரிஞ்சுக்கிடடு படிச்சான். பெரிய ஆளாயிட்டான்.
ரசித்தமைக்கு நன்றி.
பாம்பு சட்டை உரிக்குற ஜோக் நல்லா இருக்கு
ReplyDeleteஹா...ஹா... நல்லதொரு நகைச்சுவை கதம்பம்...!
ReplyDeleteபத்தாவது நகைச்சுவை எங்கே நிகழ்ந்தது சகோ ?...:))))))
ReplyDeleteமிகவும் ரசிக்க வைத்த நகைச்சுவைப் பகிர்வுக்கு மிக்க நன்றி .
நல்ல வேளை ,பாம்பு பனியனைக் கழற்றதோட விட்டுச்சே !
ReplyDeleteஇப்பவும் கூட அதுதானே நடந்துட்டு இருக்குது. அதற்கு பிறகு நடப்பது வேற! நல்ல நகைச்சுவை !
ReplyDeleteஇப்பவும் கூட அதுதானே நடந்துட்டு இருக்குது. அதற்கு பிறகு நடப்பது வேற!நல்ல நகைச்சுவை!
ReplyDeleteஹா ஹா ஹா!
ReplyDelete