தண்டவாளமும் ரயிலும்
தவிர்த்து
பார்க்க முடிவதில்லை
வாழ்க்கையை....
இதமாய் வந்து
இதயத்தில் அமர்கிறது
ரயில் பிச்சைக்காரனின் பாட்டு...
இறங்கும்போது
எப்போதாவது தோன்றுகிறது
எஞ்சின் டிரைவருக்கு
நன்றி சொல்ல வேண்டும் என்று...
யாரோ விட்டுப் போன
கைக்குட்டையில்
படபடக்கிறது
ஞாபக மறதிக்
குறிப்புகள்...
மனதை கனமாக்குகிறது
முன் போன ரயிலில்தான்
ஒரு காதல் ஜோடி தற்கொலை
செய்துகொண்டார்கள் என்ற செய்தி....
என்ன செய்ய
கனவில் வருகிற ரயிலில் கூட
ஓடிப்போய்தான் ஏற வேண்டியிருக்கிறது....
தினசரிகளில் புதைந்து போனவர்கள்
படிக்க முடிவதில்லை
ரயில் ஜன்னல் வழிக் காட்சிகளை...
மிகச் சரி
ReplyDeleteயானை/ கடல்/ரயில்
இவைகள் எல்லாம் எத்தனைமுறை பார்த்தாலும்
எந்த வயதில் பார்த்தாலும் சிறு வயது உற்சாகம்
மனதில் பரவுவதை உணர முடிகிறது
மனம கவர்ந்த பகிர்வு
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 3
ReplyDeleteஏறக்குறைய இதே மாதிரி ஒரு கவிதையை ராஜியும் இன்னைக்கி பதிவிட்டிருக்காங்க. வார்த்தைகள் வேறு ஆனால் சொல்ல வந்தது ரெண்டும் ஒன்னுதான். Great men think alikeன்னு இதத்தான் சொல்றாங்களோ என்னவோ:))
ReplyDeleteஎனக்கு ரயில் பயணம்ன்னா ரொம்ப இஷ்டம். ஆனா பாருங்க அது எனக்கு எட்டாக்கனியே! எபக்க ஊருல ரயில் மார்க்கம் இல்ல. வேலூர், இல்லாட்டி விழுப்புரம், போளூர் காஞ்சிபுரம் வந்துதான் ஏறனும்.
ReplyDeleteரயில் பயணம் அருமையான கவிதையா விரிஞ்சிருக்கு... வாழ்த்துக்கள்.
ReplyDeleteரயில்ப யணம் போல் சுவாரஸ்யமாக...
ReplyDeleteரயில் பயணம் பற்றிய சிறப்பான கவிதை.....
ReplyDeleteரயிலில் பயணித்த அனுபவம் வருகிறது...
ReplyDeleteஅழகிய கவிதை