நம் நாடு சுதந்திரம் அடைந்த பின், பெரும்பான்மையான ஆண்டுகள், நம்மை ஆட்சி செய்து வருவது காங்கிரஸ் கட்சி தான். அதிலும், ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக, தொடர்ந்து, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி தான் நடந்து வருகிறது.
இந்தக் காலக் கட்டத்தில், வரலாறு காணாத ஊழல், விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம் என்று, மிகவும் மோசமான நிலையை நம்நாடு சந்தித்து வருகிறது. இதையெல்லாம் பொருட்படுத்தாத, காங்கிரசார், "நாடு ஒளிர்கிறது; மிளிர்கிறது' என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
தற்போது, டில்லியில், ஐந்து ரூபாய்க்கு, முழு சாப்பாடு கிடைப்பதாக, டில்லி காங்கிரஸ் கட்சித் தலைவர், ரஷீத் மசூத் திருவாய் மலர்ந்துள்ளதும், மும்பையில், 12 ரூபாய்க்கு முழு சாப்பாடு கிடைக்கும் என்று, கோடீஸ்வர நடிகரும், இக்கட்சியின், செய்தித் தொடர்பாளராகவும் உள்ள, ராஜ்பார்பர் கூறியுள்ளதும், ஏழை இந்தியர்களை இழிவுபடுத்துவதாக உள்ளது.
இன்றும், நம் நாட்டில், இரவு சாப்பிடாமல், பட்டினியாக தூங்கச் செல்வோர், பல கோடி மக்கள் உள்ள நிலையில், கதர் சட்டைப் போட்டுக் கொண்டு, சொகுசு கார்களில் பவனி வரும், கோடீஸ்வர காங்கிரசார், இப்படி, வாய்க்கு வந்தபடி பேசித் திரிவது, வருத்தம் அளிக்கிறது.
இந்த காங்கிரஸ் கட்சியினரை, மகிழ்ச்சி அடையச் செய்யும் வகையில், நகர்ப்
பகுதிகளில், தனி நபர் ஒருவருக்கு,குடும்பம் நடத்த, 33.33 ரூபாய் போதும் என்றும், கிராமப்புறங்களில் குடும்பம் நடத்த, 27.20 ரூபாய் போதும் என்றும்,
மத்திய திட்டக் குழு அறிவித்துள்ளது. வேடிக்கை என்னவெனில், இன்று, மாதா மாதம் உயரும், பெட்ரோல், டீசல் விலை உயர்வால், அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கண்டபடி எகிறிக் கொண்டிருக்க, காய்கறிகள் கூட கிலோ ஒன்றுக்கு, 30 ரூபாய்க்கு மேல் விற்று வரும் நிலையில், வறுமைக் கோடு குறித்து, மத்திய திட்டக் குழு அறிவித்துள்ள புள்ளிவிவரம், காங்கிரஸ் கட்சியை திருப்திப்படுத்த அறிவிக்கப்பட்டதாகவே, நாம் கருத வேண்டும்.
காங்கிரஸ் கட்சி, உண்மையிலேயே, நல்லாட்சி செய்திருந்தால், ஏன், இன்று அனைவருக்கும் உணவு பாதுகாப்புச் சட்டத்தின் மூலம், அரிசி வழங்க வேண்டும்?
உண்ண உணவு கூட வாங்க முடியாத அளவுக்கு ஆட்சி செய்து விட்டு, குடும்ப அட்டைகளுடன், ரேஷன் கடைகளில், வரிசையில் நின்று, மலிவு விலை பொருட்களை வாங்க வைத்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு, 2014ல், பாடம் புகட்ட, ஏழை, எளிய மக்கள் தயார் ஆகி விட்டனர். செய்தி மலர்.
இனிய நண்பர்கள்தின வாழ்த்துக்கள் கருண்!
ReplyDeleteஇந்திய மக்கள் மறதிக்குப் பேர்போனவர்கள் என்பதை மறுக்கவில்லை
ReplyDeleteஏங்க பிஜேபி வந்தா தேனும் பாலும் ஓடும்னு நினைக்கறீங்களா?
ReplyDeleteஇன்னொன்னையும் நீங்க கவனிக்கணும். வறுமைக்கோட்டுக்கு கீழ இருக்கறவங்க சாப்டற சாப்பாடுக்கு செலவாகிறதைத்தான் திட்டக்குழு சொல்றாங்க. அதை எதிர்த்து கோஷம் போடற மீடியாக் காரங்களோ இல்ல நம்மள மாதிரி பதிவர்களையோ இல்ல. அவங்க சொல்ற ரேட்டு சரியா இல்லையான்னு உண்மையிலேயே வறுமைக் கோட்டுக்கு கீழ இருக்கறவங்கள கேட்டாத்தான் தெரியும். இந்த BPL தினசரி வருமானம் அல்லது செலவு தொகை உலக வங்கி நிர்ணயித்த USD1.25 தொகையை அடிப்படையாக வைத்து சொல்லப்படும் தொகை. இந்த் அடிப்படையிலதான் இதுவரைக்கும் சொல்லிக்கிட்டு வந்துருக்காங்க. என்னமோ இப்பத்தான் புதுசா சொன்னா மாதிரி குதிக்கிறவங்கள்ல பெரும்பாலோனோர் இந்த விஷய்த்தை பத்தி சரியா தெரிஞ்சிக்காதவங்கதான், பிஜேபியையும் சேர்த்து. அவங்க ஆட்சியிலருந்தப்பவும் இந்த அடிப்படையிலதான் திட்டக் குழு அன்றைய தொகையை தீர்மானிச்சதுங்கறத அவங்க மறந்துட்டாங்க. ஏன்னா அவங்க இப்ப இருக்கறது எதிர்க்கட்சியில. நாளைக்கே அவங்க ஆட்சியில வந்தா BPL ரூ.100னு மாத்திரப் போறதில்லை.