Tamilus

The best Tamil Aggregator | Tamilus

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Showing posts with label அரசியல்.. Show all posts
Showing posts with label அரசியல்.. Show all posts

2/25/2019

மருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்! எது?

சர்வதேச அளவில், 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; இதற்கு, இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.

4/04/2018

பிரதமருடன் கவர்னர் பேசியது என்ன ? அரசு டிஸ்மிஸ் செய்யப்படுமா?

தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், டில்லியில், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருடன், தமிழக கவர்னர் நடத்திய ஆலோசனையில், மிக முக்கிய விஷயம் இடம்பெற்றதாக தெரிய வந்துள்ளது.

மேலும் தொடர.....



3/13/2018

இந்த பெண்ணால் மட்டும் எப்படி முடிந்தது?


 
ந்தியாவின் முதல் பெண் ஆசிரியை:
 
பெண்கள் கல்வி அறிவு பெற்ற சமூகம் முன்னேறும்.  அங்கே ஆண் – பெண் சமத்துவம் உண்டாகும். வறுமை குறையும். கலாசார மாற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியம் பெருகும். ஆனால் நம் சமுதாயத்தில் கடந்த காலங்களில் பெண்களுக்கு மட்டுமில்லை, ஆண்களில் சில பிரிவினருக்கும் கல்வி மறுக்கப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்தது.

வீடு பெண்ணுக்கென்றும் வெளி உலகு ஆணுக்கென்றும் தீர்மானிக்கப்பட்ட ஆதி வேலைப் பிரிவினையிலேயே பெண் கல்விக்கான தடை ஆரம்பித்துவிட்டது. அது இன்றும் பெண்களை இறுக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறது. அதை மாற்றியது ஒரு பெண்.
                                                                   
ந்த பெண் பள்ளிக்குச் செல்லும்போது இரண்டு புடவைகளை எடுத்துச் சென்றார்  ஏன் தெரியுமா?

ந்தப் பெண் தினமும் இரண்டு புடவைகளைத் தன்னோடு எடுத்துக் கொண்டு தனது பணிக்குக் கிளம்புவாள். ஏனெனில்,அவள் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்ததுமே, வழி நெடுகிலும் சில ஆண்கள் சாணத்தையும் சேற்றையும் மண்ணையும் வாரி வாரி அவள் மீது வீசுவார்கள். அவற்றை அமைதியாக எதிர்கொண்டு தனது பள்ளிக்கு வந்ததும், புடவையை மாற்றிக்கொள்வாள்.

அவள் செய்த குற்றம்தான் என்ன?

ல்வியின் அவசியத்தை உணர்ந்து, பெண்களுக்கும் கல்வி கற்பித்தாள். விதவை என முடக்கப்பட்ட சிறுமிக்குப் புதுப்பாதை காட்டினாள். அனைவரும் சமம் என்று மனிதத்தை தூக்கிப் பிடித்தாள். 

வளே இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை, சாவித்ரிபாய்  புலே. மராட்டிய மாநிலத்தில் 1831-ம் ஆண்டு பிறந்த சாவித்ரி, தனது பத்தாவது வயதில் ஜோதிராவ் என்பவருக்கு மனைவி ஆனார்.

வர் கணவரும் அவரின் நண்பர்களும் சேர்ந்து அகமதாபாத்தில் மிஸ். பாரார் கல்வி நிலையத்திலும், பிறகு புனேவில் உள்ள மிஸ். மிட்செல் கல்வி நிலையத்திலும் சாவித்ரியைப் படிக்கவைத்தனர்.1848-ம் ஆண்டு தம்பதியர் இருவரும் இணைந்து பெண்களுக்கென முதல் பள்ளியை உருவாக்கினர். அவர்களுக்கென 1863-ம் ஆண்டு தனி நூலகத்தையும் நிறுவினர்.

ல்வி பணியோடு நில்லாமல் சமுதாயப் பணிகளையும் மேற்கொண்டனர்.

சிறுவயதில் கணவனை இழந்தப் பெண்களுக்கும் சிறுவயதிலே பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்களுக்கும் ஆதரவு அளித்தனர். அதற்கென தனியாக இல்லம் ஒன்றைத் தொடங்கினர். பெண் குழந்தைகளை சிசுக் கொலையிலிருந்து மீட்டு எடுத்தனர். குழந்தைத் திருமணத்தை எதிர்த்தனர். சாதியின் பெயர் சொல்லித் தாழ்த்தப்பட்ட பெண்களுக்குக் கல்வி அளித்தனர். விதவை மறுமணம், சாதிக் கலப்புத் திருமணம் என அனைத்து சமுதாயத் சீர்திருத்தங்களுக்கும் குரல் கொடுத்தனர்.

ந்தப் புனித செயலுக்கு அவர்களுக்குக் கிடைத்தது பூங்கொத்தோ, வாழ்த்துகளோ அல்ல. சமுதாயம் புறக்கணித்தது. அவர்கள் உறவினர்களால் வீட்டைவிட்டுத் துரத்தி அடிக்கப்பட்டார்கள். கேட்க இயலாத வசைச் சொற்களை வீசினர். எங்கும் கல்வீச்சு அவர்களை வரவேற்றது. அதற்கெல்லாம் சாவித்ரிபாய் புலே புன்னகையை மட்டுமே தந்தார். 

ல்வி என்னும் புனிதத்தை உலகத்துக்கு வழங்கும் எனக்கு, இந்தக் கற்கள் மலர்களாகவே தோன்றுகின்றன' என்றார்.தொடர்ந்தது சமுதாயப் பணியாற்றினார் சாவித்திரி புலே.

"ல்வி என்பது இது சரி இது தவறு என்று ஆராயும் திறனைத் தரவேண்டும். அது மெய்யும் பொய்யும் உணரவைக்க வேண்டும்" என்ற கோட்பாட்டின் மூலம் புது பாடத்திட்டத்தை அன்றைய மராட்டிய அரசுக்குப் பரிந்துரைத்தார்.

திருமணங்களின்போது பெண்ணை படிக்கவைப்பேன் என்று மாப்பிள்ளையை மணமேடையில் உறுதிமொழி எடுக்கவைத்தார்.

வர் எழுதிய நூல்களும் கவிதைகளும் இன்றளவும் சமூகத்தின் காயங்களுக்கு மருந்து அளித்து வருகின்றன. 1897-ல் இந்தியாவில் பிளேக் பரவிய காலகட்டத்தில் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துவந்து சிகிச்சை அளித்தார். இதனால் அந்தநோய் சாவித்ரியையும் தொற்றிக்கொண்டது. மார்ச்- 10 1897-ம் ஆண்டு பிரியா விடை பெற்றார்.

பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதே குற்றமாக கருதப்பட்ட காலத்தில், தன் கணவனின் இறுதி சடங்கைத் தானே செய்யும் கம்பீரத்தைப் பெற்றவர்.

ர் சமுதாயத்தின் பிழையைத் திருத்தும் போராளியான இவர், வாள் இல்லா வீராங்கனை. ஆசிரியராகப் பலரது தலை எழுத்தை மாற்றியவர்.
குரு, மாதா, பிதா என்று பலருக்கும் உதாரணமாக வாழ்ந்து காட்டியவர்.
இத்தகைய திடப் பேராண்மைகொண்ட ஆசானை, வழிகாட்டியை, விடிவெள்ளியை மறந்தது காலத்தின் கொடுமை.

பெண் உருவில் அவர் அற்புதத்தை நிகழ்த்தவில்லை;
ற்புதமே பெண் உருவானது.
 
 





8/04/2013

காங்கிரஸ் கட்சிக்கு பாடம் புகட்ட தயாரா?


நம் நாடு சுதந்திரம் அடைந்த பின், பெரும்பான்மையான ஆண்டுகள், நம்மை ஆட்சி செய்து வருவது காங்கிரஸ் கட்சி தான். அதிலும், ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக, தொடர்ந்து, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி தான் நடந்து வருகிறது. 

6/15/2013

நடிக இயக்குனர் மணிவண்ணன் - நினைவலைகள்.



தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்க்கு வயது 59.

1/11/2012

இராத்திரி நேர இம்சை.... ஒரு மரணத்தின் பாதிப்பு.. மீள்பதிவு





நான்
தூங்கும்போது
மாலை செய்தித்தாளில்
படித்த செய்தி
நினைவில்
வந்து  இம்சிக்கிறது...!

தெரிந்தவர் மரணம் தான்
பாதிக்குமென்று
யார் சொன்னது?

முன்பின் தெரியாது
அந்த இளைஞனை...!

டிக்கும்போதே
மனதைப் பிசைந்தது
சிதைந்த முகம்
சிதறிய உடல்
நசுங்கிய கைகள்...!

த்தனை மனிதர்களோடு
அந்தக் கைகள் குலுக்கியிருக்கும்
என்று யோசிக்கும்போதே
கண்ணீர் திரண்டது...!

த்தனை நம்பிக்கையோடு
ஏறியிருப்பான் அந்தப் பேருந்தில்?
எதற்காகவோ அவன் பயணம்?
வேலைக்கான 
நேர்முகத் தேர்வுக்கா?
தன் காதலியை சந்திக்கவா?
அப்பாவின் வியாதிக்கு
மருந்து வாங்கவா?
எதாக இருந்தாலென்ன,
பாதியில் முடிந்துவிட்டதே
அவன் பயணம்...

னி எத்தனை
கைகள் நீண்டாலும்
அவன் அம்மாவின்
கண்ணீரைத்
துடைக்க முடியுமா?

12/19/2011

பிரபல பதிவர் சசியை ஏமாற்றிய கவிதைவீதி சௌந்தர்..?!


இது மொக்கைப் பதிவு. பிடிக்காதவர்கள் இப்படியே எஸ்கேப் ஆயிடுங்க..

12/12/2011

இது தமிழ் பெண்களின் சாபம்...!


ஆறாவதாய் 
பிறந்திருக்கிறது
பெண் குழந்தை 
இம்முறையும்...