Tamilus

The best Tamil Aggregator | Tamilus

2/25/2019

மருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்! எது?

சர்வதேச அளவில், 'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது; இதற்கு, இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல.

'ஆட்டிசம்' பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடனடியாக கண்டறிய, இதுவரை எந்த மருத்துவமும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது.

குழந்தை பிறந்து, 18 மாதங்கள் ஆன பின், ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தையா என, கண்டறிய மருத்துவ வசதி வந்து விட்டது.

தற்போது, பிரிட்டனைச் சேர்ந்த, வார்விக் பல்கலையில், விஞ்ஞானி நைலா ரப்பானி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட, உடல் பரிசோதனை ஆய்வில், ஆட்டிச குறைபாடுள்ள குழந்தைகளை, கண்டறிவதற்கான ரத்த பரிசோதனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில், 5 முதல், 12 வயது வரையிலான, 68 குழந்தைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், 38 குழந்தைகள் ஆட்டிச நிலையாளர்கள் என அறியப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவருக்கும் ரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்யப்பட்டதில், குழந்தைகளின் ரத்த பிளாஸ்மாவில் இருக்கும், சில புரோட்டின் மூலக்கூறுகள் பாதிப்பாலும், மூளை செல்களான, 'நியுரான்'களுக்கு போதிய அமினோ அமிலங்கள் கிடைக்காத நிலையில் இருப்பதையும் ஆய்வறிக்கை உறுதி செய்துள்ளது.

மருத்துவ உலகில், புதிய கண்டுபிடிப்பான, ரத்தப் பரிசோதனை முறை, 90 சதவீதம் வரை துல்லியமானது; தொடர் பரிசோதனை வழிமுறைகளால், வருங்காலங்களில், குழந்தைகளுக்கான ஆட்டிசப் பாதிப்பை மிகத் துல்லியமாக கண்டறிய வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஆட்டிச பாதிப்புக்குள்ளான குழந்தையா என கண்டறிய, இனி, 18 மாதங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. ரத்த பரிசோதனையால், ஆட்டிசத்தை உடனடியாக கண்டுபிடித்து, பாதிப்பில் இருந்து குழந்தைகளை எளிதில் மீட்கலாம்.மருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்!







0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"