Tamilus

The best Tamil Aggregator | Tamilus

1/11/2012

இராத்திரி நேர இம்சை.... ஒரு மரணத்தின் பாதிப்பு.. மீள்பதிவு





நான்
தூங்கும்போது
மாலை செய்தித்தாளில்
படித்த செய்தி
நினைவில்
வந்து  இம்சிக்கிறது...!

தெரிந்தவர் மரணம் தான்
பாதிக்குமென்று
யார் சொன்னது?

முன்பின் தெரியாது
அந்த இளைஞனை...!

டிக்கும்போதே
மனதைப் பிசைந்தது
சிதைந்த முகம்
சிதறிய உடல்
நசுங்கிய கைகள்...!

த்தனை மனிதர்களோடு
அந்தக் கைகள் குலுக்கியிருக்கும்
என்று யோசிக்கும்போதே
கண்ணீர் திரண்டது...!

த்தனை நம்பிக்கையோடு
ஏறியிருப்பான் அந்தப் பேருந்தில்?
எதற்காகவோ அவன் பயணம்?
வேலைக்கான 
நேர்முகத் தேர்வுக்கா?
தன் காதலியை சந்திக்கவா?
அப்பாவின் வியாதிக்கு
மருந்து வாங்கவா?
எதாக இருந்தாலென்ன,
பாதியில் முடிந்துவிட்டதே
அவன் பயணம்...

னி எத்தனை
கைகள் நீண்டாலும்
அவன் அம்மாவின்
கண்ணீரைத்
துடைக்க முடியுமா?

24 comments:

  1. ஒரு மரணத்தின் மறுபக்கத்தில் பல உயிர்களின் கணணீரும் சோகமும் ஆறாத துயரமும் நீங்காத நினைவுகளும்
    உள்ளதை தங்கள் கவிதை கண்ணீரோடு உணர்த்தியது.

    ReplyDelete
  2. ஒவ்வொரு விபத்திலும் இப்படி எத்தனையோ தாய்மார்கள்..

    ReplyDelete
  3. படித்தேன் நெஞ்சம் துடித்தது!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  4. மரணத்தின் வேதனை
    மரண வேதனை தான்.

    ReplyDelete
  5. கண்ணீரை துடைக்க முடியாததுதான்

    ReplyDelete
  6. விதியின் விளையாட்டு...


    நினைக்ககூட முடியாம ஒரு துன்பத்தின் மறுப்பக்கம்...

    ReplyDelete
  7. உணர்வு வலிகளுடன் கூடிய பயணக் கவிதை, பாதியில் நின்றது பரிதாபமே.

    ReplyDelete
  8. வலிமிகுந்த கவிதை

    ReplyDelete
  9. வாத்தியாரை ரொம்ப நாளா காணும் ...!!!!!!!!!!!

    ReplyDelete
  10. முகம் தெரியா இளைஞனுக்காக உருகும் உங்க கவிதை வரிகள் நெஞ்சை கனக்க செய்துவிட்டது சகோ

    ReplyDelete
  11. அருமையான கவிதை.....Welcome back machi....

    ReplyDelete
  12. மிக நல்ல கவிதை இது..

    வலி மிகுந்த கவிதையும் கூட...

    இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டால் ஆக அற்புதமான கவிதையாக மாறும்..

    உணர்வுகளை சொல்லும்போது மொழிவளம் குறைவாக இருந்தாலும் இறுதியில் உணர்வே மனதில் மிஞ்சுகிறது..

    ReplyDelete
  13. கொஞ்சம் கலங்கிட்டேன்...

    ReplyDelete
  14. மனம் கனத்த கவிதை.”எங்கேயும் எப்போதும்” படம்கூட இதைத்தானே சொன்னது !

    ReplyDelete
  15. சோதனை, வேதனையான கவிதை தான் யாராலும் தடைப்படுத்த முடியாத மரணம்.கவிதை நன்று வாழ்த்துகள் இனிய பொங்கல் வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  16. இனி எத்தனை
    கைகள் நீண்டாலும்
    அவன் அம்மாவின்
    கண்ணீரைத்
    துடைக்க முடியுமா?

    வலி சுமக்கும் வரிகள்!

    ReplyDelete
  17. வேதனையின் வெளிப்பாடு
    அவலத்தின் பிரதிபலிப்பு
    அழகான மொழிநடை நண்பா

    ReplyDelete
  18. அற்புதமான வரிகள்


    உறங்காத உண்மைகள் ......
    http://kaviyaaran.blogspot.com/2012/02/blog-post_11.html

    ReplyDelete
  19. இன்று வலைச்சரத்தில் தங்களின் படைப்பு http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_16.html
    காணவாருங்கள். தங்கள் கருத்தினையும் வாக்கினையும் பதியுங்கள்.

    ReplyDelete
  20. இன்று வலைச்சரத்தில் தங்கள் படைப்பு
    http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_16.html

    ReplyDelete
  21. I also lost my son in an accident and leading a saddest life.
    kalavathy karthikeyan

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"