Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/11/2013

ஜெயலலிதா அவசரகுடுக்கை - கருணாநிதி பரபரப்பு அறிக்கை


திமுக தலைவர் கலைஞர் 11.08.2013 ஞாயிற்றுக்கிழமை கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

கேள்வி :- முதலமைச்சர் ஜெயலலிதா இன்று (11-8-2013) விடுத்துள்ளஅறிக்கைகளில், உணவுப் பாதுகாப்பு மசோதாவிற்கான திருத்தங்களை தி.மு.க.நாடாளுமன்றத்தில் அளிக்குமா? அளிக்காதா? என்று கேட்டிருக்கிறாரே?

கலைஞர் :- முதலமைச்சரா இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்?கடந்த 7-8-2013 அன்றே இந்த மசோதாவிற்கான திருத்தங் களை தி.மு.க.சார்பில் நாடாளு மன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு கொடுத்துவிட்டாரே! அதைக் கூடத் தெரிந்து கொள்ளாமல் ஒரு முதலமைச்சர் 10ஆம்தேதி அறிக்கையிலே; அதை ஒரு கேள்வியாக என்னிடம் கேட்டிருக்கிறாரே,அதற்காக நான் பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை! பாவம்! அந்தச்செய்தி கொடநாடு வரையிலே எட்டவில்லை போலும்!

கேள்வி :- நீங்கள் முன்பு கொடுத்த அறிக்கையிலே, “மசோதாவினைதி.மு.க. எதிர்க்கும் என்ற வாசகங்கள் இடம் பெறவில்லை” என்று ஜெயலலிதாசொல்லியிருக்கிறாரே?

கலைஞர் :- அவர் கூறுகின்ற எனது அறிக்கையிலே எங்கேயாவதுமசோதாவினை தி.மு.க. ஆதரிக்கும் என்ற வாசகங்கள் இடம் பெற்றிருக்கிறதா?ஜெயலலிதா 2-8-2013 அன்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தை முடிக்கும்போதுகூட; “மசோதாவை அ.தி.மு.க. எதிர்க்கும்” என்று தெரிவித்திருக்கிறாரா என்றால்கிடையாது, கிடையாது, கிடையவே கிடையாது.

மாறாக கடைசி பத்திஎன்னவென்றால், “Hence, I strongly urge you to ensure that the concerns of Tamil Nadu are addressed through the inclusion of the appropriate amendments in the Bill that the Government of India intends to place before Parliament to replace the Food Security Ordinance” என்பது தான். அதாவது இந்த மசோதாவில் தேவையானதிருத்தங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான். இதையே தான்நானும் என்னுடைய “உடன்பிறப்பு” மடலில், “அவசர, அவசியமானதிருத்தங்களுடன் மாநிலங்களில் உள்ள நடைமுறைக்கு ஏற்ப கொண்டுவரமத்திய அரசு முன்வரவேண்டும். மாநில உரிமைகளுக்கு இம்மியளவு பாதிப்பும்ஏற்படாமல், இந்த உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டால் மாத்திரமேதிராவிட முன்னேற்றக் கழகம் அதனை ஆதரிக்கும்” என்று எழுதியிருக்கிறேன்.


கேள்வி :- இதே வடிவில் உணவுப் பாதுகாப்பு மசோதா மீது வாக்கெடுப்புநடைபெற்றால், தி.மு.க. அதற்கு எதிராக வாக்களிக்குமா என்று ஜெயலலிதாகேள்வி கேட்டிருக்கிறாரே?

கலைஞர் :- தற்போதுள்ள மசோதா, பல்வேறு கட்சியினரும் எடுத்துத்தெரிவித்துள்ள, முக்கியமான திருத்தங்களைத் தாங்கி வெளிவருமானால்அப்போது அதனை தி.மு.க. ஆதரிக்கும்! திருத்தங்களை ஏற்றுக் கொள்ளாமல்,இதே நிலையில் தான் கொண்டு வருவோம் என்று மத்திய அரசு உறுதியாகத்தெரிவித்தால் அப்போது அந்த மசோதாவினை தி.மு.க. எதிர்க்கும்.முதலமைச்சர் ஜெயலலிதா இனியாவது தெளிவு பெறுவாரா?

கேள்வி :- உணவுப் பாதுகாப்பு மசோதா குறித்து நீங்கள் தெளிவாகஅனைவருக்கும் புரியும்படியாக திரும்பத் திரும்ப எழுதிய பிறகும் முதலமைச்சர்ஜெயலலிதா திரும்பத் திரும்பக் கேள்வி கேட்பதைப் பற்றி?

கலைஞர் :- பொதுவாக அவருக்கு அன்றாடம், அவர் பெயரில் ஏதாவதுஅறிவிப்பு வெளிவரவேண்டும்; அல்லது அறிக்கை வெளி வரவேண்டும். பேரவைநடைபெற்றாலாவது, 110வது விதியின் கீடிந ஏதாவது அறிக்கையைப் படிக்கலாம்.தற்போது அதற்கு வழியில்லை என்பதால், தினமும் ஏதாவது அறிக்கைவிடுகிறார். உணவுப் பாதுகாப்பு மசோதாவில் பல சாதக பாதகங்கள் இருக்கலாம்.அதனால் தான் தொடக்கத்திலேயே அதைப்பற்றி நாடாளுமன்றஉறுப்பினர்களோடு கலந்து பேசுவோம் என்று குறிப்பிட்டிருந்தேன். 

அந்தச்சட்டத்தினால் வரக் கூடிய பாதகங்களை முதலமைச்சர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.மசோதாவின் நன்மைகளை மத்திய அரசின் சார்பில் கூறுகிறார்கள். இதிலேமுக்கியமாக மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு விடக் கூடாது என்பதைத் தான்நான் சுட்டிக் காட்டியுள்ளேன். அதையும் மீறி இந்த மசோதா இப்போதுள்ளவடிவிலேயே கொண்டுவரப்படுமேயானால் அதை நாங்கள் ஏற்க முடியாதுஎன்பதைத் திட்ட வட்டமாகத் தெரிவித்திருக்கிறோம். இதற்குப் பிறகும்கிராமங்களில் “காமன்” பண்டிகைகளில் எரிந்த கட்சி - எரியாத கட்சி என்றுபோட்டி போட்டுக் கொண்டு பாடுகின்ற அதே “மெட்”டில் ஜெயலலிதா அறிக்கைவிட்டுக் கொண்டிருப்பது கண்டிக்கத் தக்கது மாத்திரமல்ல; ஒரு முதலமைச்சர்இந்த அளவிற்கு இறங்கியிருக்கிறாரே என்ற வருத்தத்தையும் தரத்தக்கதுமாகும்.


கேள்வி :- டி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி அளித்தவுடனே கருணாநிதி அதை ஏன் மறுக்கவில்லை என்று மற்றொரு கேள்வியை ஜெயலலிதா கேட்டிருக்கிறாரே?

கலைஞர் :- நான் எதையும் அவரைப் போல அரைகுறையாகப் படித்துவிட்டு முடிவெடுப்பவனல்லன். இளங்கோவனின் முழு அறிக்கையையும் படித்துப்பார்த்தேன். திருத்தங்களோடு மசோதா வெளி வரலாம் என்று அவர்கூறியிருப்பதையும் படித்துப் பார்த்தேன். அதனால் மறுக்கவில்லை. நுனிப்புல்மேய்ந்து விட்டு, அவசர அறிக்கைகளை ஜெயலலிதாவைப் போல நான் எப்போதும்கொடுக்க மாட்டேன். இவ்வாறு கூறியுள்ளார். நன்றி இணைய செய்திகள்.

3 comments:

  1. அரசியல் விளையாட்டு... இது பரமபதம்...

    ReplyDelete
  2. அரசியல் செய்திகள் அனைத்தும் நன்றாக உள்ளன. நான் சமீபத்தில் அரசியல் கட்டுரைகளை http://www.valaitamil.com/politics என்ற இணையதளத்தில் பார்த்தேன். சிறப்பாக தொகுக்கப்பட்டிருந்தது.நீங்களும் சென்று பாருங்களேன்.

    ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"