படித்ததில் பிடித்த கவிதை.
இதன் வெற்றி இதை எழுதியவற்கே உரியது.
கீழே விழுந்துவிட்டஐம்பது பைசாவை
குனிந்து எடுத்த நொடியில்...
என் உள்ளாடையில் படிந்துவிட்டிருந்தன
சில பார்வைகள்...
கம்பியை எட்டிப்பிடித்த தருணத்தில்
எங்கோ ஒளிந்திருந்த
உங்கள் தாயிடமும் சகோதரியிடம் உள்ளதை
தேடிக் கொண்டிருந்தன
சில பார்வைகள்...
கை வைத்து மறைப்பதைக் கூட
அவமானப்பட்டுச் செய்கிறேன்...
“முன்னாலே போமா” என்று
பின்னாலே தடவிவிட்டு போகும்
நடத்துனர்,
கூசிய பதட்டத்தோடு திரும்பிப் பார்த்தால்
மகளிர் இருக்கையின்இடுக்குகளில்
கூனிக்குறுகி என்னைப் போலவே
சில திரௌபதிகள்...
ஒவ்வொரு நிறுத்தத்திலும்
மரணித்து நிமிர்கிறது வாழ்க்கை...
ஆண்டவா!
எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்கிறோம்
ஆனால் அடுத்த பிறவியில்
ஆண்களுக்கு வைத்துவிடு மார்பகத்தை…!
அற்ப சுகம் தேடும் அல்பைகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்...!
ReplyDeleteஉணர்ச்சி
ReplyDeleteசெம்ம கவிதை பாஸ்...
ReplyDeleteஉருக்கமான வேண்டுக்கோள். இதை படித்த பின்னாவது சில அற்ப பிறவிகள் திருந்துமா?!
ReplyDeleteஎல்லாஞ்செரி இந்த படம் தேவையா ?
ReplyDeleteஅருமையான கவிதை....திருந்தமாட்டராகள்
ReplyDeleteமகளீருக்கு எங்கும் வேதனைதான்...
ReplyDeleteஆமாங்க. இங்க தமிழ்நாட்டுலதான் இந்த அல்ப ஆசையுள்ள ஆண்கள். அடுத்திருக்கும் கேரளத்தில் இன்னும் பல பெண்கள் மார்பில் துணி ஏதும் இல்லாமல்தான் நடமாடுகின்றனர். ஆனால் அங்கு இத்தகைய பார்வை தொல்லைகள் இல்லை.
ReplyDeleteதிருந்தாத ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
ReplyDeleteபல பிரச்சனைக்கு காரணம், கெட்டவர்கள் கிடையாது அதை கண்டுக்காம போற நல்லவர்கள் தான்.
ReplyDeleteநிஜத்தின் பிரதிபலிப்பு
ReplyDeleteசிரிப்பும் சிந்தனையும்
மிருகங்கள்...
ReplyDeleteஅதில் இவர்களுக்கு ஒரு அல்ப சந்தோஷம்...
ReplyDeleteகவிதை நன்று.
ஆண்களுக்கு வைத்து விட்டு.... அவர்கள் திறந்து போட்டுக்கொண்டு நடந்து வந்தால்.... பெண்களுக்குத் தான் கூச்சமாக இருக்கும்.
ReplyDeleteதேவையா....?
ஆமாம் யாரோட அடுத்த பிறவியாம்...?
அழகிய கவிதை அருமை
ReplyDeleteயாக உள்ளது
அழகிய கவிதை அருமை
ReplyDeleteயாக உள்ளது
நல்ல கவிதை.
ReplyDelete