தனது பேரன் தயாநிதி மாறன் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதற்குக் காரணம் ஊடகங்கள்தான் என்று நேரிடையாக குற்றஞ்சாற்றியுள்ளார் முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி.
சென்னையில் நேற்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தயாநிதி மாறன் பதவி விலகல் குறித்து கருத்து கேட்டதற்கு இவ்வாறு கருணாநிதி குற்றஞ்சாற்றியுள்ளார்.
“இன்றைய உலகில், குறிப்பாக இந்தியாவில் ஊடகங்கள் ராஜ்ஜியம்தான் நடக்கிறது. அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்த முடியும். அதற்கு தயாநிதி மாறன் விதிவிலக்கல்ல”என்று கூறி அருகிலிருந்த ஊடகவியலாளர்களை அழுத்தமாக நோகடித்துள்ளார்.