பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் அனைவருக்கும், லேப் - டாப் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை, தமது உரையில் உறுதி செய்துள்ளார் கவர்னர். நேற்று அதற்கான முயற்சிகளும் நடந்துள்ளது.
அரசுப் பள்ளிகள் பலவற்றில் உள்ள கணினி ஆய்வுக் கூடங்கள், போதிய கணினி இன்றியும், பயிற்றுவிக்க ஆசிரியர் இன்றியும் பாழடைந்து கிடக்கின்றன. அவற்றை சீர் செய்தால், மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வில், அம்பு இருந்தால் மட்டும் போதாது; அதை பயிற்றுவிக்க, துரோணர் போன்ற ஆச்சாரியரும் தேவை. அப்போது தான், போர்க்களத்தில் வெல்ல முடியும். அதுபோல், மடி கணினி மட்டும் அரசு தந்தால் போதாது. அதை பயிற்றுவிக்க, தேர்ந்த ஆசிரியர்களையும் நிரந்தரமாக நியமித்தால் தான், மாணவர்கள், வாழ்க்கையில் வெல்ல முடியும்.
செய்யுமா இந்த அரசு?











